Published:Updated:

பிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக சாத்தியம் உண்டா? - கருடபுராணம் சொல்லும் சடங்குகளின் தாத்பர்யங்கள்!

சிவபெருமான்
சிவபெருமான்

பிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக சாத்தியம் உண்டா? - கருடபுராணம் சொல்லும் சடங்குகளின் தாத்பர்யங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

13. 6. 21 வைகாசி 30 ஞாயிற்றுக்கிழமை

திதி: திரிதியை இரவு 8.23 வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 6.09 வரை பிறகு பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை

நல்லநேரம்: காலை 6 முதல் 7 வரை/ பகல் 3.15 முதல் 4.15 வரை

சரபேஸ்வரர்
சரபேஸ்வரர்

சந்திராஷ்டமம்: கேட்டை மாலை 6.09 வரை பிறகு மூலம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: சரபேஸ்வரர்

பிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக சாத்தியம் உண்டா?

இந்த உடலில் தச வாயுக்கள் இயங்குகின்றன. அந்தப் பத்துவிதமான வாயுக்களில் ஒன்று பிராணன். பிராணனே உடலை இயங்கச் செய்கிறது. பிராணன் உடலிலிருந்து நீங்குவதைத்தான் மரணம் என்கிறோம். வாழும் காலத்தில் தொடர்ந்து ஓர் உடலில் இருந்ததால் பிராணன் எனப்படும் உயிருக்கும் உடலின் மீது ஒரு பாசம் ஏற்படும். மரணத்துக்குப் பின் அதைப் பிரிய மனமில்லாமல் மீண்டும் எப்படியாவது அந்த உடலுக்குள் புகுந்துவிடமாட்டோமா என்று தவிக்கும். அதற்கு அது சில முயற்சிகளையும் செய்யும். இவற்றை எல்லாம் குறித்து கருடபுராணம் விரிவாகப் பேசுகிறது. அவ்வாறு உடலுக்குள் உயிர் மீண்டும் புக சாத்தியமுண்டா... அவ்வாறு புகுந்தால் ஏதேனும் நன்மை அல்லது தீமை ஏற்படுமா... இவை எல்லாம் கணக்கிட்டு நம் முன்னோர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். அப்படிப்பட்ட சடங்குகளில் சிலவற்றின் தாத்பர்யமும் இதுதான். அப்படிப்பட்ட சடங்குகள் எவை? அவை ஏன் செய்யப்படுகின்றன என்பன குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்கள்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

நம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். செயல்களில் அது பிரதிபலிக்கும். சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும். ஆனாலும் சமாளிப்பீர்கள். - நம்பிக்கை அதானே எல்லாம்!

ரிஷபம்

ஆதரவு : முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் திடீர் செலவுகளும் அதற்கேற்பப் பணவரவும் இருக்கும். உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். - ஆல் இஸ் வெல்

மிதுனம்

அலைச்சல் : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் ஏற்படும் நாள். தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

கடகம்

அனுகூலம் : காலை முதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். நம்பிக்கையோடு சில முக்கிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். - என்ஜாய் தி டே!

சிம்மம்

உதவி : எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். உறவினர்கள் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளைச் செய்து தருவார்கள். என்றாலும் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ் ப்ளீஸ்!

கன்னி

பொறுமை : நற்செய்திகள் தேடிவரும். சகோதர உறவுகளுக்கு உதவ வேண்டிய கட்டாயம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் பொறுமை அவசியம். வார்த்தைகளால் வம்பு வரலாம். - நா காக்க!

துலாம்

செலவு : பணவரவு காணப்பட்டாலும் செலவுகள் அதைவிட அதிக அளவில் இருக்கும். சிலர் கடன் வாங்கவும் நேரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. - செலவே சமாளி!

விருச்சிகம்

தாமதம் : கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதமாவதால் மனதில் சோர்வு உண்டாகும். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துங்கள். - நாளை உங்க நாள்!

தனுசு:

நன்மை : இன்று முக்கியமான பணிகளை முற்பகலிலேயே முடித்துவிடுங்கள். தந்தைவழியில் ஆதாயம் ஏற்படும். என்றாலும் இறைவழிபாட்டில் ஈடுபடுவது மகிழ்ச்சி தரும். - நாள் நல்ல நாள்!

மகரம்

வரவு : பணவரவு அதிகரிக்கும் நாள். சகோதர உறவுகள் இன்று நலம் விசாரித்துத் தேடிவந்து உதவுவார்கள். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். - ஜாலி டே!

கும்பம்

கவனம் : வழக்கமான செயல்களிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சிறு அலைச்சல் ஏற்படும். உணவு விஷயத்தில் அக்கறை தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

மீனம்

லாபம் : எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பணவரவு உண்டாகும் பழைய கடன்களைத் திருப்பித் தருவீர்கள். மனதில் நம்பிக்கையும் துணிவும் அதிகரிக்கும். - ஆல் தி பெஸ்ட்!

அடுத்த கட்டுரைக்கு