பங்குனி உத்திர நாளன்றே ஹரிஹர புத்திரனின் திருஅவதாரம் நடைபெற்றது என்கின்றன புராணங்கள். புராண ஐதிகப்படி மணிகண்டன் புலிப்பால் கொண்டு வரச் சென்று புலிமீது அமர்ந்தும் வந்தார். அதனால் ஐயப்ப சுவாமியை புலி வாகனன் என்று போற்றி வணங்குகிறோம். ஆனால், சபரி மலையில் ஐயப்பனுக்கு வாகனமாக உள்ளது குதிரையே. அதனால்தான் ஐயப்பனின் ஹரிவராசனப் பாடலில் `வாஜி வாகனன்' என்று சுவாமி வேண்டப்படுகிறார்.

பகவான் சாஸ்தா, மணிகண்டனாக அவதரித்து தீமைகள் பல புரிந்த மகிஷியை வதம்செய்த திருவருள் காவியமே 'பூதநாத உபாக்கியானம்' என்ற புராண நூல்.

கண்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தது கீதை. அதேபோல் மணிகண்ட சுவாமி அவரது தந்தையான ராஜசேகர பாண்டியருக்கு உபதேசம் செய்தது பூதநாத கீதை.

ஸத்யபூரணர் என்ற மகரிஷியின் திருமகள்களாக அவதரித்தவர்கள் பூரணா, புஷ்கலா. இவர்கள் இருவரையும் திருமணம் செய்துகொண்ட சாஸ்தா, சக்தி ரூபனாக பல ஆலயங்களில் தேவியருடன் திருக்காட்சி அளிக்கிறார்.

சனிபகவானின் தொல்லைகளில் இருந்து விடுபட விரும்பும் அன்பர் கள் சாஸ்தாவை வணங்க வேண்டும். காரணம் சனி பகவானுக்கு கிரகப் பதவியை அருளியவர் பகவான் சாஸ்தா. சனிபகவான் சாஸ்தாவை வணங்கி அருள்பெற்ற தலம் வேதாரண்யம் அருகே உள்ள காடந்தேத்தி.

சாஸ்தாவுக்கு உகந்த நாள்கள் புதன் மற்றும் சனிக்கிழமை. உகந்த நட்சத்திரம் உத்திரம். உகந்த புஷ்பங்கள் செவ்வந்தியும், செங்கழுநீர் மலரும்.

பூரணா, புஷ்கலா தேவியரைப் போலவே காசிராஜனின் திருமகளான பிரபாவதி என்பவரையும் சாஸ்தா மணந்து கொண்டார். இவர்களுக்கு `ஸத்யகன்' என்ற மகனும் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன.

கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள திருக்குன்னப்புழா என்ற தலத்தில் ஆளுயர உருவச் சிலையாக... சோமாஸ்கந்த மூர்த்தம் போல பகவான் சாஸ்தாவும், பிரபாவதியும், ஸத்யகனும் அருள்பாலிக்கிறார்கள்.

கேரளத்தில் `வேட்டைக்கு ஒரு மகன்' என்ற பெயரில் வழிபடப்படுபவர், சாஸ்தாவின் எட்டு அவதாரங்களில் ஒருவரான `கிராத சாஸ்தா'. அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க பூமிக்கு வந்த ஈசனுக்கும் சக்திக்கும் திருமகனாக அவதரித்தவரே இந்த கிராத சாஸ்தா என்று கூறப்படுகிறது.

உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களைப் போலவே பரம புருஷனின் உடலில் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும் ஆறு விதமான திருக் கோயில்களை அமைப்பது மரபு. பரம புருஷன் சாஸ்தா வடிவமாக வெளிப்படும்போது, மூலாதார தலமாகப் பொன் சொரியும் முத்து அய்யனார் கோயிலாகவும், ஸ்வாதிஷ்டானமாக அச்சன் கோயிலும், மணிபூரகமாக ஆரியங்காவும், அநாகதமாக குளத்துப்புழையும், விசுத்தியாக எரிமேலியும், ஆக்ஞா சக்கரமாக சபரிமலையும் உள்ளன.