Published:Updated:

சரண கோஷத்தால் அதிரும் சந்நிதானம்!

சபரிமலை
பிரீமியம் ஸ்டோரி
News
சபரிமலை

எப்படி இருக்கிறது சபரி யாத்திரை?

இந்தியாவின் பிரசித்திபெற்ற புனிதத் தலங்களில் ஒன்று சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோயில். மாதாந்திர பூஜைக்காக ஐந்து நாள்கள் ஐயனின் சந்நிதானம் திருநடை திறக்கும்போது குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தரிசனத்துக்காக சென்று வருவது வழக்கம்.

சபரிமலை
சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்
மண்டல, மகரவிளக்கு பூஜை
மண்டல, மகரவிளக்கு பூஜை

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் தை மாதம் வரை நடக்கும் மண்டல, மகரவிளக்கு பூஜை வரையிலான விரத காலத்தில், முறைப்படி விரதம் இருந்து இருமுடிகட்டி சபரி ஐயப்பனை தரிசிப்பது, லட்சோபலட்சம் பக்தர்களுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கும். கடந்த ஆண்டு பெருந்தொற்றுக் கட்டுப்பாடு காரணமாக தினசரி 2000 பக்தர்கள், மகரவிளக்கு நாளில் 5000 பக்தர்கள் என்றளவில் கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்குச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர் கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப் பட்டனர். தினமும் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 30,000 என்றும் 40,000 என்றும் அனுமதி எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. எனினும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மண்டல பூஜை
மண்டல பூஜை
ஸ்பாட் புக்கிங்
ஸ்பாட் புக்கிங்
நிலக்கல்
நிலக்கல்
சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்டர்கள்
சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்டர்கள்

ன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள், நேரில் சென்றால் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் `ஸ்பாட் புக்கிங்' செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டந்த ஆண்டு ஐயனை தரிசிக்க முடியாத தவிப்புடன் காத்திருந்த பக்தர்கள் இந்த வருடம் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து யாத்திரைக்கு வருகின்றனர். காரில் செல்லும் பக்தர்களுக்கு, நிலக்கல் பகுதிக்கு முன்பாகவே காவல்துறை சார்பில் கார் பாஸ் வழங்கப்படுகிறது. நிலக்கல்லில் கார் பார்க்கிங் செய்வதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

க்தர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழுடன் ஆதார் கார்டும் கொண்டு செல்ல வேண்டும். நிலக்கல் மஹாதேவர் கோயிலுக்கு அருகில் சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண் பக்தர்களின் வயதை உறுதிப்படுத்த ஆதார் அடையாள அட்டையை சரிபார்க் கிறார்கள். பின்னர், சரிபார்க்கப்பட்டதாக முன்பதிவு டிக்கெட்டில் சீல் வைத்து வழங்கு கிறார்கள். இந்தக் கவுன்டர் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

பம்பை
பம்பை
டோலி முன்பதிவு
டோலி முன்பதிவு
பார்க்கிங் அனுமதி
பார்க்கிங் அனுமதி


நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்களின் வாகனங்கள் செல்ல, மாலை 7 முதல் நள்ளிரவு 12 மணி வரை (5 மணி நேரம்) அனுமதி இல்லை.பக்தர்கள் பம்பை வரை அவர்களது காரில் செல்ல அனுமதி உண்டு. பம்பையில் பார்க்கிங் அனுமதி இல்லை என்பதால், பக்தர்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் நிலக்கல் சென்று காரை நிறுத்திவைக்கலாம். இல்லையெனில், நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு அரசுப் பேருந்தில் செல்லலாம்.

ம்பா நதியில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை. ஷவர் மூலம் பக்தர்கள் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்கள் மலை ஏறுவதற்குமுன், பம்பை கணபதி கோயில் வளாகத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன.அதிகாலை 2 மணி முதல் மலை ஏற பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

டோலி முன்பதிவுக்கும் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே அவசர கால முதலுதவி மையங்களும் அமைக்கப் பட்டுள்ளன; ஆம்புலன்ஸ் ஒன்றும் தயாராக உள்ளது. போலீஸ் மற்றும் வனத்துறை சார்பில், பல இடங்களில் சூடான மூலிகைக் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது.

கோயிலில் அதிகாலை 4 மணிக்குத் திருநடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் மதியம் 1 மணிக்கு நடைஅடைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. பிறகு இரவு 10 மணிக்கு ஹரிவராசனத்துடன் நடை சார்த்தப்படுகிறது.

10 மணிக்குப் பிறகு பக்தர்கள் சந்நிதானத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் தேங்காயில் நிரப்பி எடுத்துச் செல்லும் நெய்யை அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. சந்நிதானத்துக்குப் பின்புறம் நெய்த் தேங்கா யைப் பெற்றுக்கொள்ள கவுன்டர் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

தேவசம்போர்டு சார்பிலும், ஐயப்பா சேவா சங்கம் சார்பிலும் காலை, மதியம், இரவு வேளைகளில் அன்னதானம் நடத்தப்படுகிறது.

க்தர்கள் அதிகளவில் சென்று வருவதால், சபரிமலையில் மண்டலகால யாத்திரை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது என்றே கூறலாம். அதனால் ஐயப்பமார்களின் சரண கோஷத்தால் அதிர்கிறது, சபரிமலை!