Published:Updated:

சக்தி கொடு! - 19

கந்தனின் கருணை
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தனின் கருணை

கந்தனின் கருணை பொங்கும் தைப்பூசம்!

வைகாசி விசாகம் கந்தப்பெருமானின் அவதாரத் திருநாள். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் அவர்களைப் போற்றும்விதமாகக் கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகையும் முருகனைப் போற்றும் திருநாளானது. அதேபோல் பரிபூரணனான கந்தவேளுக்குத் தைப்பூசத் திருநாளும் உகந்ததானது.

சக்தி கொடு! - 19

அதற்கான காரணத்தை அறியுமுன் தைப்பூசத்தின் வேறுசில மகிமைகளைத் தெரிந்துகொள்வோம்.

சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் இது. தைப்பூசம், வியாழக்கிழமை, மத்தியான வேளை... ஆயிரம் முகங்களை உடைய பானுகம்பர், ஆயிரம் சங்குகளை ஊதினார். ஆயிரம் தோள்களை உடைய வாணாசுரன் குடமுழவு என்னும் வாத்தியத்தை இசைத்தான். மேலும், ஐந்து வகையான துந்துபி வாத்தியங்கள் ஒலிக்க, கந்தர்வர்கள் கீத ஒலி எழுப்ப, வேத ஒலி முழங்கிட சிவபெருமான் அம்பிகையோடு ஆனந்தத் தாண்டவம் ஆடியருளினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கந்தனின் கருணை
கந்தனின் கருணை

வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, திருவுடை அந்தணர் மூவாயிரம் பேர் என எல்லோரும் அந்த ஆனந்த நடனத்தை தரிசித்தார்கள். மெய்சிலிர்த்தது. உள்ளம் உருகியது, ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘சிவபெருமானே! இங்கேயே உமாதேவியருடன் இன்று முதல் எப்போதும் இந்த ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் தரிசிக்கும்படியாக அருள்புரிய வேண்டும்’’ என வேண்டினார் பதஞ்சலி முனிவர்.

சிவபெருமான் உடன்பட்டார். அதன்பின் சிவபெருமானின் உத்தரவுப்படி அங்கேயே பொன்னாலான ஒரு சபை உண்டாக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் கனக சபையில் (சிதம்பரத்தில்) வியாக்ரபாதர், பதஞ்சலி முதலான எல்லோரும் வணங்க, அம்பிகையுடன் தன் திருநடனக் காட்சியை எப்போதும் தரிசிக்கும்படி தந்தருளிக்கொண்டு இருக்கிறார் சிவன்.

பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவ குருவான வியாழ பகவான். ஞான வடிவம் இவர். பூச நட்சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவ குருவின் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம். அதுவும் புண்ணியகாலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ர் யுகத் தோற்றத்தின்போது, தைப்பூச தினத்தில்தான் நீர் தோன்றியது; நீரிலிருந்தே மற்ற அனைத்து உயிர்களும் தோன்றின என்கின்றன ஞான நூல்கள். இதை உணர்த்தவே தைப்பூச நாளில் ஆலயங்களில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நீரில் - தெப்பப் பந்தலில் ஈசனும் இறைவியும் முருகனும் உலா வரும் வைபவம், படைப்பின் ரகசியத்தை எடுத்துரைக்கவே என்பது பெரியோர் வாக்கு.

இனி, இந்தத் திருநாள் எப்படி முருகப் பெருமானுக்கு உரியதாயிற்று என்பதற்கான காரணத் தகவல்களை அறிந்து மகிழ்வோம்.

கந்தனின் கருணை
கந்தனின் கருணை

சிவனின் அம்சமே முருகப்பெருமான் என்பதை, ‘ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்’ என்று கந்த புராணம் சுட்டுகிறது. அதனால்தான் சிவனுக்கும் முருகனுக்கும் உரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது தைப்பூச திருநாள். என்றாலும், முருகன் ஆலயங்களில்தான் இந்நாள் பெரும் சிறப்புப் பெறுகிறது.

அன்னை பார்வதிதேவி, மைந்தன் முருகனுக்கு வெற்றியை அளிக்கவல்ல வேலாயுதத்தை உருவாக்கித்தந்து ஆசி வழங்கியது ஒரு தைப்பூசத் திருநாளில்தான். தேவி அளித்த `வேலாயுதம்' முருகனுக்குப் பின்னர் தோன்றியதால் முருகனுக்குத் தங்கை முறையானது என்று சுவாரஸ்ய விளக்கம் தருவார்கள் சான்றோர்கள்.

அதனாலேயே கந்தனின் சக்திவேலை ‘ஷண்முகி’ என்றும் போற்றுவர். எதிரிகளை வெல்வதற்கு மட்டுமல்ல... அருணகிரியார், குமரகுருபரர் முதலான அடியார்களின் நாவில் அட்சரம் எழுதி, ஞானத்தை அளித்ததும் இந்தக் குமரவேல்தான்.

சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத்தில் துடித்தார்கள். அவர்களின் துயரங்களை தேவகுருவான வியாழ பகவான், முருகப்பெருமானிடம் காரண - காரியங்களுடன் விவரித்துச் சொன்னார். குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களைத் தீர்த்தார். வியாழ பகவான், இப்படி தன் சீடர்களின் துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகனிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப் படுகிறது.

மேலும், பூசம் நட்சத்திரத்தின் தேவதை, தேவ குருவான வியாழ பகவான். அந்த குருவுக்கும் குருவாக இருப்பவர் முருகப்பெருமான். அதனால்தான் உத்தராயனப் புண்ணிய காலத் தொடக்கமான தை மாதத்தில் குருவுக்கு உகந்த பூசம் நட்சத்திரத்தில் குருவுக்கும் குருவான கந்தனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்ததால்... தெய்வானை ஊடல் கொண்டதாகவும், இருவரும் முற்பிறவியில் சகோதரிகள் எனவும், தன்னை அடையவேண்டி இருவருமே தவம் புரிந்ததால் கற்பு மணம், களவு மணம் மூலம் இருவரையும் மணந்ததாகவும் எடுத்துக் கூறித் தெய்வானையைச் சமாதானப்படுத்திய நிகழ்வைக் குறிப்பதே தைப்பூசம் என்று கூறுபவர்களும் உண்டு.

மிக அற்புதமான பலாபலன்களை அருளும் இந்தத் தைப்பூசத் திருநாளையொட்டி, கந்தனின் கருணையைப் பெற்று மகிழவேண்டி, கும்பல் கும்பலாகப் பாதயாத்திரை செய்து முருகன் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவார்கள் பக்தர்கள். குறிப்பாக பழநி பாத யாத்திரை மிகவும் விசேஷம்.

ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமி யோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தைப்பூசம், இந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. இந்தத் திருநாளில் கந்தனின் தலங்களை நாடிச் சென்று வழிபடுவோம்; அவன் கருணையால் கவலைகளற்ற வாழ்வை வரமாகப் பெறுவோம்.