ம் தெய்வங்கள் பலரும் கரங்களில் ஆயுதங் களுடன் இருப்பார்கள். ஆயுதங்களைக் கொண்டு, தெய்வங்களை அடையாளம் காணவும் முடியும்.

அங்குசம் வைத்திருந்தால் யானைமுகன்; வேல் வைத்திருந்தால் முருகப்பெருமான்; சங்கு சக்கரம் வைத்திருந்தால் விஷ்ணு; சூலம் வைத்திருந்தால் சிவபெருமான் - அம்பாள்; செண்டு வைத்திருந்தால் சாஸ்தா.

இவ்வாறு தெய்வங்களின் கரங்களில் ஆயுதங்களை வைத்ததன் அடிப்படை உண்மை என்ன?!

சக்தி கொடு! - 20

நமக்கு வரும் தீங்குகளை நீக்கி, நம்மை நல்வழியில் செலுத்துவது இறைவனின் அருள் மட்டுமே. தெய்வ அருள் என்பதையே, ஆயுதங்களாகத் தெய்வங்களின் கரங்களில் வைத்திருக்கின்றன நம் ஞானநூல்கள். தெய்வ அருள் என்ற ஆயுதங்களில் திரிசூலம் என்பதன் அடிப்படையைப் பார்த்துவிட்டு, அந்தப் பெயரிலேயே அமைந்த திரிசூலத் திருத்தலத்தைத் தரிசிக்கலாம் வாருங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிவபெருமானின் திருக்கரத்திலும் அம்பாளின் திருக்கரத்திலும் ‘திரிசூலம்’ இருப்பதைக் கண்டிருப்போம். துர்கை, மகிஷாசுரனின் கழுத்துப்பகுதியில் நிற்க, துர்கையின் சூலாயுதம் தலைகீழாக, மகிஷனை நோக்கி இருப்பதாக துர்கையின் திருவடிவை தரிசித்திருப்போம்.

ஏன் அவ்வாறு? திரிசூலத்தில் மூன்று பிரிவுகள் இருக்கக் காரணம் என்ன?

சக்தி கொடு! - 20

நம் தவறுகளை நீக்கி, நம்மை நல்வழிப்படுத்தவே!

தவறு செய்பவர் யாராக இருந்தாலும்சரி. அவர்கள் விரும்பித் தவறு செய்வது இல்லை; ஆசை (காமம்) தூண்டுகிறது; அது நிறைவேறாவிட்டால் கோபம் வருகிறது; கோபத்தின் காரணமாக அறியாமையால் - மயக்கத்தால் செயல்படுகிறோம்; அல்லல்களில் ஆழ்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்' - எனும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, ஆசை - கோபம் - அறியாமை எனும் மூன்றாலும் விளையும் தீமைகளை நீக்கி நமக்கு அருள்பாலிக்கவே, திரிசூலத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன.

சக்தி கொடு! - 20

தீய குணங்கள் மூன்றையும் நீக்கி, நல்லவற்றை நம்முன் நிறுத்தும் திரிசூலத்தின் பெயரிலேயே அமைந்தது, திரிசூலம் எனும் திருத்தலம். இத்தலத்து ஈசனைத் துதித்து, திருப்பணி சக்கரவர்த்தி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், பத்து பாடல்கள் பாடியுள்ளார்; பெரும் தமிழ் அறிஞரான கி.வா.ஜ, ஆறு பாடல்கள் பாடியுள்ளார்.

நான்கு மலைகளுக்கு நடுவில் ஊரும் கோயிலும் இயற்கைச் சூழ்நிலையில் அமைந்துள்ளன. நான்கு மலைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாகவும், அவ்வேதங்களின் உட்பொருளான பரமேசுவரன், நடுவில் கோயில்கொண்டு விளங்குவதாகச் சொல்வதுண்டு. நான்கு மலைகளுக்கு நடுவில் அமைந்த இந்த ஊர், நீர் வளம், நில வளம், மலை வளம், இயற்கை வளம் என்னும் நான்கும் பெற்று விளங்குகிறது.

இப்படிப்பட்ட இயற்கைச் சூழலில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானை வழிபட, பெருமளவில் அடியார்கள் வருவதில் வியப்பில்லை. காரணம்? படைக்கும் கடவுளான பிரம்மதேவரே வந்து வழிபட்ட தலமாயிற்றே! எனில், அவரால் படைக்கப்பட்ட உயர்ந்த ஜீவராசியான மனிதர்கள் வந்து வழிபடுவதில், வியப்பென்ன இருக்கிறது?

பிரம்மதேவர், தான் செய்யும் படைப்புத்தொழில் இடையூறின்றி நல்லவிதமாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில், சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தீர்மானித்தார்; அவர் தவம்செய்யத் தேர்ந்தெடுத்தது இத்தலமே! இத்தலத்துக்கு வந்த பிரம்மதேவர், ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார்.

பிரம்மதேவர் உண்டாக்கிய தீர்த்தம், ‘பிரம்ம தீர்த்தம்’ என அவர் பெயராலேயே அமைந்துள்ளது. பிரம்மதேவரின் தவம் தொடர்ந்தது. அத்தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் இறங்கிவந்தார். ஆம்! பிரம்மதேவருக்குக் காட்சியளித்தார்; `பிரம்மதேவா! உன் விருப்பப்படியே நீ தொடங்கும் சிருஷ்டித்தொழில், நல்லவிதமாகவே நிகழும்' எனச் சொல்லி அருள்புரிந்தார்.

அதன் காரணமாக, புதிதாகத் தொழில் தொடங்குவோரும், குரு உபதேசம் பெற்று ஞானத்தை அடைய விரும்புபவர்களும், புதிதாகக் கற்க விரும்புபவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது.

பிரம்மதேவருக்கு அருள்புரிந்ததால் இத்தலம் ‘பிரம்மபுரி’ எனப்பெயர் பெற்றது; அவரால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்ட சிவ பெருமான் ‘பிரம்மபுரீஸ்வரர்’ எனும் திருநாமமும் பெற்றார்.

ஈசனைத் தரிசிக்கும்போது, கண்களையும் கருத்தையும் கவரும் கம்பீரமான வடிவம், அப்படியே மனத்தில் படிந்து ஆனந்தத்தையும் அமைதியையும் புதியதொரு சக்தியையும் அளிக்கிறது.

ஆம்... புதுமைதான்! ஆலயங்களில் ஒரே கருவறையில் சிவனையும் சக்தியையும் ஒருசேரக் காண்பது அபூர்வம்! இத்திருத்தலத்தில், ஈசனையும் அம்பாளையும் ஒருசேர, சிவன் சந்நிதியிலேயே தரிசிக்கலாம். வழக்கப்படி, ஆலயங்களில் இறைவன் சந்நிதி தனியாகவும் அம்பாள் சந்நிதி தனியாகவும் இருக்க, இங்கே ஏன் இப்படி அமைந்துள்ளது?

சிவபெருமான் பிரம்மதேவருக்குத் தரிசனம் தந்து அருள் புரிந்ததாகப் பார்த்தோம் அல்லவா. அதேபோல், அடியார் ஒருவருக்கு சிவபெருமான் அருள்புரிந்த வரலாறு உண்டு.

தொடக்கத்தில், இத்திருத்தலத்திலும் ஈசன் சந்நிதியும் அம்பாள் சந்நிதியும் தனித்தனியாகவே இருந்தன. வேற்றுநாட்டவரின் படையெடுப்பின் போது, அவர்கள் பல ஆலயங்களைச் சூறையாடி அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்து வருகையில், இத்திருத்தலத்திலும் நுழைந்து தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள்.

விளைவு... அம்பாளின் விக்கிரகம் சற்று பின்னப் பட்டுவிட்டது. பிறகு வேறு ஒரு விக்கிரகத்தை அமைத்து, அதை அம்பாள் சந்நிதியில் (திரிபுரசுந்தரி) பிரதிஷ்டை செய்தார்கள்.

பிறகு, பின்னப்பட்ட பழைய விக்கிரகத்தை ஆலயத் திலிருந்து வெளியேற்ற கோயில் நிர்வாகம் தீர்மானித்தது. அப்போது, அர்ச்சகரின் கனவில் காட்சியளித்த சிவபெருமான், `அர்ச்சகரே! அந்த தேவி விக்கிரகத்தை வெளியேற்றாதீர்கள். சந்நிதியில் எம் அருகிலேயே பிரதிஷ்டை செய்யுங்கள்' என உத்தரவிட்டு மறைந்தார். அதன்படியே செய்தார்கள். ஆக, விசேஷமாக, ஈசன் அருகிலேயே சக்தியும் இடம் பெற்றிருப்பதை, இங்கே தரிசிக்கலாம்.

ஈசன் சந்நிதிக்கு இடப்புறத்தில் தனிச் சந்நிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி அருள்கிறாள். திரிசூலநாதர் எனும் ஈசன் திருநாமத்துக்குப் பொருத்தமாக, அம்பிகை ‘திரிபுர சுந்தரி’ எனும் திருநாமம் கொண்டு விளங்குகிறாள்.

அம்பிகையின் கருணை வடிவம், நம்மை அறியாமலேயே நம் மனத்தில் உள்ள அழுக்கை யெல்லாம் துடைத்தெறியும் வடிவாக உள்ளது; வலது பின்கரத்தில் ருத்ராட்ச மாலை, இடது பின் கரத்தில் மலர், வலது முன்கரம் அபயம், இடது முன்கரத்தில் வரதம் எனக் காட்சியளிக்கும் அம்பிகை, கருணையோடு கவலைகளைத் தீர்க்கும் தோற்றத்தில் தரிசனம் தருகிறாள்.

விசேஷ சந்நிதிகள் பல கொண்ட இவ்வாலயத் துக்கு, அரசர்கள் பலர்செய்த அறச்செயல்கள் பலவும், 11-ம் நூற்றாண்டுக் கால கல்வெட்டுகள் தொடங்கி பல கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. புதிதாக ஏதும் செய்யத் தொடங்குபவர்கள், இங்கே ஈசனையும் அம்பாளை யும் வழிபட்டுத் தொடங் கினால், முன்னேற்றம் காண்பது உறுதி.

மகா சிவராத்திரி திருநாள் பிப்ரவரி மாதம் 21-ம் நாள் வருகிறது. இந்தப் புண்ணிய தினத்தில் இந்தப் புண்ணிய தலத்துக்குச் சென்று தரிசனம் செய்வோம். பிரம்மதேவருக்கு அருள் புரிந்த திரிசூலநாதரும் அன்னை திரிபுர சுந்தரியும், நம் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெற வரம் தந்து, நம் வாழ்க்கை வளம்பெற அருள்புரிவார்கள்!

- இன்னும் வரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism