திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

முதுமை...மரணம்...டாக்டர் கீஸர்!

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

மனித வாழ்வில் முதுமையும் மரணமும் தவிர்க்க முடியாதவை. இரண்டும் நெருங்கும்வரை மனிதன் அதைப் பற்றி யோசிப்பதே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.

சிந்தனை விருந்து
சிந்தனை விருந்து

ஒரு ஜென் கதை... ஒரு பணக்காரர், புத்த துறவியிடம் வேண்டுகோள் வைத்தார். ``என் குடும்பம் சீரும் சிறப்புமாக, பல தலைமுறைகளுக்கு நன்றாக வாழ வேண்டும் என்பதுபோல ஒரு வாழ்த்துரை எழுதிக்கொடுங்களேன்.’’

ஒருகணம்தான். துறவி கிடுகிடுவென எதையோ எழுதி அவரிடம் நீட்டினார். அதில் இப்படி எழுதியிருந்தது... `தந்தை இறந்தான்; மகன் இறந்தான்; பேரனும் இறந்தான்.’

பணக்காரருக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. ``எங்கள் தலைமுறையை வாழ்த்துங்கள் என்றால், இப்படி அபசகுனமாக எழுதியிருக்கிறீர்களே?’’ என்றார்.

``இப்படி யோசி... ஒருவேளை உனக்கு முன்னர் உன் மகன் இறந்துபோனால், அது உன் குடும்பத்துக்கே தாங்க முடியாத துன்பத்தைத் தரும். அதேபோல உன் மகனுக்கு முன்னர் உன் பேரன் இறந்துபோனால் அதுவும் துயரம்தான். அப்பா, மகன், பேரன்... என வரிசையாக மரணமடைவது இயற்கையின் நியதி. இதுதான் உன் தலைமுறைக்கு உண்மையான மகிழ்ச்சி யையும் வளத்தையும் சேர்க்கும். அதைத்தான் எழுதியிருக்கிறேன்.’’

முதுமையைக் கொண்டாடிக் கடந்தவர்கள் பலர். ஆங்கிலத்தில் பிரபல கீஸர் (Geezer) தாத்தா ஜோக் ஒன்று உண்டு. டாக்டர் கீஸருக்கு வீட்டில் பொழுது போகவில்லை. ஒரு கிளினிக்கைத் திறந்தார். வாசலில் போர்டு வைத்தார். அதில், `சிகிச்சைக்கு 500 டாலர். குணமாகவில்லையா... 1,000 டாலர் திருப்பித் தரப்படும்’ என எழுதியிருந்தது.

`கீஸருக்கு ஒன்றும் தெரியாது, 1,000 டாலர் நமக்குத்தான்’ என நினைத்தார் யங் என்பவர். ஒருநாள் கிளினிக்குக்குள் நுழைந்தார். ``டாக்டர். எனக்கு எதைச் சாப்பிட்டாலும் ருசியே தெரிய மாட்டேங்குது’’ என்றார்.

``நர்ஸ் அந்த 22-வது பாக்ஸுல இருக்குற மருந்தை எடுத்து இவர் வாயில மூணு சொட்டு விடு.’’

ருசித்த யங் சொன்னார்: ``என்ன டாக்டர்... மருந்து விடுவீங்கன்னு பார்த்தா பெட்ரோலை விடுறீங்க?’’

``வாழ்த்துகள். உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுடுச்சு. 500 டாலரை எடுங்க.’’

இன்னொரு நாள்... யங் வந்தார். ``டாக்டர், என் ஞாபகசக்தி போயிடுச்சு. எதையும் நினைவுல வெச்சுக்க முடியலை.’’

``நர்ஸ், அந்த 22-வது பாக்ஸுல இருக்குற மருந்தை எடுத்து இவர் வாயில மூணு சொட்டு விடு.’’

``ஐயய்யோ... வேணாம். அது பெட்ரோல்.’’

``வாழ்த்துகள். உங்களுக்கு ஞாபசக்தி திரும்பிடுச்சு. 500 டாலரை எடுங்க.’’

1,000 டாலரை இழந்த யங், சில நாள்கள் கழித்து மீண்டும் கிளினிக்குக்கு வந்தார். ``டாக்டர் பார்வை ரொம்ப மங்கிடுச்சு. எதையும் பார்க்க முடியலை.’’

``அடடா... இதுக்கு என்கிட்ட மருந்து எதுவும் இல்லை. இந்தாங்க 1,000 டாலர்’’ என்று ஒரு கரன்சியை நீட்டினார்.

வாங்கிப் பார்த்த யங், ``டாக்டர் இது 1,000 டாலர் இல்லை. 10 டாலர்.’’

``வாழ்த்துகள். உங்களுக்கு பார்வை திரும்ப வந்துடுச்சு. 500 டாலரை எடுங்க.’’