Published:Updated:

சுப மங்கல வாழ்வு அருளும் ஸ்ரீசுதர்சனர் மகா ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுதர்சன மகா ஹோமம்!
சுதர்சன மகா ஹோமம்!

சூரிய பகவானைப் போன்று ஸ்ரீசுதர்சனரும் பிரதட்சய தெய்வம் என்கின்றன புராணங்கள். அதாவது நேரிலேயே தரிசிக்கக் கூடிய தெய்வம் இவர். சுதர்சனர் என்றால் நல்வழி காட்டுபவர், இனியவர், சௌலப்யமானவர் என்று கூறலாம். அப்படிப்பட்ட சுதர்சனரை வழிபட்டு பலன்பெற உகந்த முறை ஸ்ரீசுதர்சன மகாஹோமம்.

ஸ்ரீ சுதர்சனர் அனல் தெறிக்கும் கேசமும், மூன்று கண்களும் கொண்டு ருத்திர அம்சமாக விளங்குபவர். தீயவர்களுக்கு மறச்சக்கரமாகவும், நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும் விளங்குபவர். உயிர்கள் மீண்டும், மீண்டும் ஜனித்து மரணிக்கும் செயல்கள் யாவும் ஸ்ரீ சுதர்சனரை ஆதாரமாகக் கொண்டே நடக்கின்றன என்று வேதங்கள் கூறுகின்றன.

சக்கரங்கள் தோன்றியதும்தான் உலகில் அறிவியல் மாற்றங்கள் உருவாகின என்று அறிவியல் கூறுகிறது. ஸ்ரீசுதர்சனரும் திருமால் கையில் சுழலும் சக்கர வடிவான தெய்வம்.

இவர் காக்கும் கடவுளாகவும் தீமைகளை அழிக்கும் கடவுளாகவும் நம்மை ரட்சித்துக் கொண்டிருக்கிறார். திருமாலை விட்டு ஒரு நொடிகூடப் பிரியாது அவரைத் தொழும் நித்யசூரி இவர்.

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

தெய்வ உபாசனைகளில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் எனும் சுதர்சனரை வழிபடுவது மிகவும் ஆசாரமான வழிபாடாகும். யந்திரங்கள், திருவுருவப் படங்கள், கலசங்கள், தீ என இவரை எப்படியும் ஆவாஹணம் செய்து வழிபடலாம் என்கிறது ஆகமம்.

நன்மைகள் பெற விரும்புவோர், அச்சத்தில் இருப்பவர் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட பயனை வேண்டி இவரை வழிபட்டால் குறுகிய காலத்தில் அருள் செய்வார். ஒரு மாத வழிபாட்டிலேயே ஆரோக்கியமும் பலமும் வீரியமும் உண்டாவதை அறியலாம் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

நவகிரகங்களுக்கு இவரே நாயகர் என்பதால் சுதர்சனரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் உடனே விலகும். ராஜ மந்திரங்களில் ஸ்ரீசுதர்சன அஷ்டகமும் ஒன்று என்பதால் அதை தினமும் சொல்பவருக்கு எந்தப் பயமும் அணுகாது.

வழக்குகள், சத்ரு பயம், சோம்பல், காரியத்தடைகள், பொருள் நஷ்டம், விரயம், உறவுகளில் சிக்கல், தீய சக்தி குறித்த பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், உடல் நலக் கோளாறுகள் குறித்த அச்சங்களை விளங்குபவர் சுதர்சனர்.

நாடெங்கிலும் ஆனி மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சுதர்சன ஜயந்தி விழா மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தீமைகளை அழிக்கும் சக்கரத்தாழ்வாரை இந்நாளில் வணங்கி வழிபட எண்ணியவை நிறைவேறும்.

சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார்

இந்த ஆண்டு மகா சுதர்சன ஜயந்தி விழா வரும் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளது. ஸ்ரீசுதர்சனரை ஆராதிப்பவர்கள் மரண பயமின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள். ஸ்ரீசுதர்சன ஜயந்தி நாளில் சுதர்சனப் பெருமாளை வணங்கி அவரது ஆசியைப் பெறுவது விசேஷம்.

மகா சுதர்சனர் அவதரித்த அற்புதமான இந்தத் திருநாளில் திண்டிவனம் இறையானூரில் அருளும் ஶ்ரீஆதிகேசவர் மற்றும் ஶ்ரீசுதர்சனரின் திருவருளுடன், உலக நன்மைக்காகவும் கொடுந்தொற்று பாதிப்புகள் விரைவில் நீங்கி மக்கள் சுபிட்சம் பெறவும், வாசகர்களின் குடும்ப நலன் ஓங்கவும் இறையானூர் ஶ்ரீஆதிகேசவர் திருக்கோயிலில், சக்தி விகடனும் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து வழங்கும் ஶ்ரீமகா சுதர்சன ஹோம வைபவம், ஜூன் 20 அன்று காலையில் நடைபெறவுள்ளது.

இந்த ஹோமத்தில் ஶ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஶ்ரீசுதர்சன காயத்ரீ, ஶ்ரீசுதர்சன மாலா மந்திரம், ஶ்ரீநரசிம்ம மந்திரம், ஶ்ரீநரசிம்ம காயத்ரி, ஶ்ரீவிஷ்ணு காயத்ரி, ஶ்ரீலட்சுமி காயத்ரி, ஶ்ரீலட்சுமி மந்திரம், ஶ்ரீதன்வந்திரி மந்திரம், ஶ்ரீபாஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வது உண்டு. இதனால் இந்த ஹோமத்தின் பலன் அளவிடற்கரியதாக விளங்குகிறது.

இந்த மகா சுதர்சன ஹோமத்தில் சங்கல்பித்து வழிபடுவதால், அச்சங்கள் விலகும், எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும், செல்வப் பலனளிக்கும், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாவார்கள், கண்ணுக்குத் தெரியாத நோய்கள் குணமாகும். அத்துடன், சகல சாப தோஷங்களுக்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

உன்னதமான இந்த ஹோம வைபவத்தில் வாசகர்களும் தங்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் உற்றார் உறவுகளுக்காகவும் சங்கல்பம் செய்து இறையருள் பெறலாம்!

புண்ணியம் மிகுந்த இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு