Published:Updated:

ஶ்ரீ சாயி சங்கல்ப பூஜை: வரும் புத்தாண்டை அருளோடு தொடங்குவோம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சாயி பாபா
News
சாயி பாபா

தம் வாழ்வில் சாயி செய்த அற்புதங்களைக் குறித்துச் சொல்லும் பக்தர்கள் பல லட்சம்பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உலகுக்குச் சொல்வது ஒன்றுதான். அது இக்கட்டான காலத்தில் சாயியைச் சரணடைந்தால் காக்கப்படுவோம் என்பதுதான்.

மகாராஷ்டிர மாநிலம், தானே என்ற இடத்தில் சிவில் நீதிமன்றத்தில் தற்காலிக குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார் சோல்கர். சொற்ப சம்பளம். ஆனால், பெரிய குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு இருந்தது. சிரமமான வாழ்க்கை என்றபோதும் அவருக்கு பக்தி பெரிதாய் இருந்தது. ஒரு நாள் அவர் வசித்த இடத்துக்கு அருகில் நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்பதற்குச் சென்றார். அங்கே தாஸ்கணு மகராஜ் உபன்யாசம் செய்துகொண்டிருந்தார்.

பாபாவின் கீர்த்தனைகளைப் பாடி, சாயியின் புகழைப் பரப்பி வந்த தாஸ்கணு அன்றும் உருக்கமாகப் பேசினார். அவரின் சொற்பொழிவில் தன்னை மறந்த சோல்கர், தனக்குள் பாபாவை வேண்டத் தொடங்கினார்.

ஶ்ரீ சாயி சங்கல்ப பூஜை
ஶ்ரீ சாயி சங்கல்ப பூஜை

‘பாபா! நான் மிகவும் ஏழை. என் குடும்பத்தைக்கூடப் பராமரிக்கக்கூட முடியாத வறுமையில் உள்ளேன். உம் அருளால் நான் என் அலுவலகத் தேர்வில் வெற்றி பெற்று, உத்தியோகம் நிரந்தரமானால், ஷீர்டிக்கு வந்து உம்மை தரிசிப்பதுடன், உம் பெயரால் உன் சந்நிதியில் கற்கண்டு விநியோகிக்கிறேன்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த முறை அவர் அலுவலகத்தில் நடந்த சிரமமான தேர்வில் வெகுசிலரே வெற்றி பெற்றனர். அவர்களில் சோல்கரும் ஒருவர் என்பதைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சோல்கரின் பணி நிரந்தரமானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனாலும் உடனடியாக செல்வம் வந்துவிடுமா என்ன? வறுமையின் காரணமாக, ஷீர்டிக்குச் செல்லத் தேவையான பணத்தை அவரால் உடனடியாகத் திரட்ட முடியவில்லை. எனவே, ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்துக் கற்கண்டு விநியோகிக்கும்வரை, தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை என்று உறுதி ஏற்றுக்கொண்டார். ஒரு மனிதன் தேநீரில் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வில்லை என்றால் எவ்வளவு மிச்சம் பிடித்துவிட முடியும்? ஆனால் அது சங்கல்பம். விரைவிலேயே அவருக்கு ஓரளவு பணம் சேர்ந்தது.

ஷீர்டிக்குச் சென்று, ஸ்ரீசாயியை தரிசித்து வணங்கப் புறப்பட்டார். அவர் பயணமும் சிறப்பாக முடிந்து சாயியை தரிசனம் செய்தார். சாயி சந்நிதியில் அவரின் துன்பங்கள் எல்லாம் மறைந்து இன்பம் உண்டானது. தான் வேண்டிக்கொண்டபடி கற்கண்டு விநியோகமும் செய்தார்.

ஶ்ரீ சாயி சங்கல்ப பூஜை
ஶ்ரீ சாயி சங்கல்ப பூஜை

சோல்கருடன் ஷீர்டியைச் சேர்ந்த `ஜோக்' என்பவரும் சென்றிருந்தார். அனைவரும் சாயி முன்னிலையில் அமர்ந்திருந்தனர். சோல்கருக்கு வார்த்தைகளால் எதையும் விவரிக்க முடியாத ஆனந்தப் பெருநிலை. அப்போது சாயி அவரின் நண்பர் ஜோக்கிடம், "உன் நண்பருக்குச் நிறைய சர்க்கரை சேர்த்த தேநீரைப் பருகக் கொடு" என்று கூறினார்.

இதைக் கேட்டதும் சோல்கருக்குக் கண்ணீர் பெருகியது. இத்தனை நாளும் நாம் செய்துகொண்ட சங்கல்பத்தை சாயி சொல்லாமலேயே அறிந்து நமக்கு அருட்கடாட்சம் தருகிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அப்போது சாயி சொன்னபடி அவர் சர்க்கரை சேர்த்து நல்ல தேநீர் ஒன்றை அருந்தினார். அதன்பின் சாயி அந்த சர்க்கரையின் இனிப்பு போன்று அவரின் வாழ்க்கை முழுவதும் அவர் மனத்தோடு இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது சோல்கருக்கு மட்டுமல்ல சாயியை வேண்டிக்கொள்ளும் அனைவருக்கும் நடக்க சாத்தியம் இருக்கும் அற்புதமே...

இந்தக் காலத்திலும் தம் வாழ்வில் சாயி செய்த அற்புதங்களைக் குறித்து சொல்லும் பக்தர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உலகுக்குச் சொல்வது ஒன்றுதான். அது இக்கட்டான காலத்தில் சாயியைச் சரணடைந்தால் நாம் காக்கப்படுவோம் என்பதுதான்.

உண்மையில் நம்மில் பலரும் நெருக்கடியான சூழலில்தான் வரும் 2022 புத்தாண்டைச் சந்திக்க இருக்கிறோம். எனவே இந்தப் புத்தாண்டு தினத்தில் சாயியை வணங்க சகலமும் நன்மையாகும் என்பது நம்பிக்கை.

வரும் புத்தாண்டில் நம் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைய சக்திவிகடனும் துவாரகாமயி ஆத்ம ஞானியர் மையத்துமும் இணைந்து ஸ்ரீ சாயி சங்கல்ப சிறப்பு பூஜையை வரும் ஜனவரி 1 - ம் தேதி நடத்த இருக்கிறது.

சென்னை, புழுதிவாக்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நம் வாசகர்களுகள் தங்கள் பெயர், நட்சத்திரம், பிரார்த்தனையோடு சிறப்பு சங்கல்பம் செய்துகொள்ளலாம்.

ஶ்ரீ சாயி சங்கல்ப பூஜை
ஶ்ரீ சாயி சங்கல்ப பூஜை

இந்த நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் பஜனை, சத்சங்கம், சிறப்பு சங்கல்ப பூஜை, ஆரத்தி ஆகியவை நடைபெறும்.

இதில் வாசகர்கள் கலந்துகொள்ள சங்கல்பக் கட்டணம் இல்லை.

தற்போது உள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த நிகழ்ச்சியில் வாசகர்கள் நேரில் கலந்துகொள்ள முடியாது.

சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் முக்கிய கணங்களை நேரலையாக தரிசிக்கலாம்.

இந்தப் புத்தாண்டை நாம் சாயியின் அருளோடு தொடங்குவோம்.

இந்த நிகழ்ச்சியில் நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.