ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

இரு துருவம்

சிந்தனை விருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து!

சிந்தனை விருந்து!

வாழ்க்கை மேம்பட உதவுவது, ரசனை. சூரிய உதயத்தை மட்டுமல்ல... எறும்பு வரிசையை விழி விரியப் பார்ப்பதுகூட சிலரின் மனதை உற்சாகம் கொள்ள வைக்கும். ஆனால், இந்த விஷயத்தில் பெரும் மேதைகளேகூட சறுக்கியிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

சிந்தனை விருந்து!
சிந்தனை விருந்து!


எல்சா ஐன்ஸ்டீன், 2-வது வாழ்க்கைத் துணை யாக ஐன்ஸ்டீனுக்கு வாய்த்தவர். ரொம்ப ரசனையான மனுஷி. கவிதை என்றால் கொள்ளைப் பிரியம். ஐன்ஸ்டீனோ, அவருக்கு நேர் எதிர்.

திருமணமான புதிது. எல்சா, மிகுந்த ஆர்வத் தோடு ஒரு பேப்பரைக் கொண்டு வந்தார்.

``ஏங்க... நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். கேட்குறீங்களா?’’

``ம்.’’

எல்சா, கவிதையை வாசிக்க வாசிக்க, முகம் இறுக ஒரு கல்லைப்போல் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் ஐன்ஸ்டீன். அந்தக் கவிதையில் ஒருவரின் முகத்தை நிலாவோடு ஒப்பிட்டு எழுதியிருந்தார் எல்சா.

ஐன்ஸ்டீனுக்கு வந்ததே கோபம். ``நிறுத்து. நிலாவைப் பத்தி உனக்கு ஒண்ணும் தெரியலை. அதோட அளவு, எடை என்னன்னு தெரியுமா... அதைத் தூக்கி ஒரு மனுஷன் மேல வெச்சா அவன் நசுங்கிப்போயிடுவான். நிலா அழகுன்னு உனக்கு யார் சொன்னது... அது உயிரில்லாதது. செடி, கொடி, மரம், பூ, பறவை, தண்ணி எதுவும் அங்கே கிடையாது. புரியுதா?’’

நொறுங்கிப்போனார் எல்சா. உலகின் தலை சிறந்த கணித மேதை, இயற்பியல் வல்லுநர், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு வார்த்தை பாராட்டி யிருந்தால், எல்சா எவ்வளவு மகிழ்ந்திருப்பார்!

பின்னாளில் நாட்குறிப்பில் இப்படி எழுதி வைத்திருந்தார் எல்சா... `அவரிடம் நான் கவிதை யைப் பற்றிப் பேசியது அதுதான் முதன்முறை, கடைசிமுறையும்கூட.’

சில நேரங்களில் பகுத்தறிவு, நம் மென்மையான பக்கத்தை மறைத்துவிடுவதும் உண்டு. ஐன்ஸ்டீனுக்கு நடந்தது அதுதான். பல விஷயங் களில் முரண்பாடு இருந்தாலும், தான் இறக்கும் வரை ஐன்ஸ்டீனோடு இல்லற வாழ்வில் இணைந்தே பயணித்தார் எல்சா.

வேடிக்கைக்கு என சொல்லப்பட்டாலும், சில தம்பதியர் இல்லற வாழ்க்கையை, இன்றைக்கு மனதளவில் இப்படித்தான் நடத்துகிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம்...

ஒரு கட்டடத்துக்குள் நுழைந்தார் அந்த மனிதர். உள்ளே அமர்ந்திருந்தவரிடம், ``ரெண்டு நாளா என் ஒயிஃபைக் காணோம். புகார் கொடுக்கணும்.’’

``சார்... இது போலீஸ் ஸ்டேஷன் இல்லை. போஸ்ட் ஆபீஸ்...’’

``அடடா... என் மனைவி காணாமப்போன உற்சாகத்துல என்ன செய்யறது, யார்கிட்ட சொல்றதுன்னு தெரியாமப் போச்சு. சாரி சார்.’’