Published:Updated:

கல்யாணம், சுபகாரியங்கள் கைகூட ஸ்ரீசுவாதி மகா ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுவாதி மகா ஹோமம்
சுவாதி மகா ஹோமம்

ஸ்ரீசுவாதி மகா ஹோமம் - சுவாதி என்றால் தமிழில் 'வாள்' என்று பொருள். சுடர் விடும் வாளைப்போல தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டது சுவாதி நாள் பூஜை.

ந்திய தேசத்தின் பண்பாட்டில், கலாச்சாரத்தில், நம்பிக்கையில் வேரூன்றிக் கிடப்பவை யாகங்கள். தேவதைகளை திருப்திப்படுத்துவதுடன் நாட்டின் நலன், இயற்கை வளம், ஆட்சித் திறன், தனி நபர்களின் வளர்ச்சி யாவும் மேம்பட யாகங்கள் காலம்தோறும் பயன்பட்டு வருகின்றன. நம் வேதங்களின் குறிப்பின்படி 400-க்கும் மேலான யாகங்கள் இருப்பதாக மகா பெரியவா குறிப்பிட்டதுண்டு.

யாகங்கள் மனிதர்களின் மேம்பாட்டிற்காகவும் இம்மை மற்றும் மறுமை வாழ்வின் நன்மைக்காகவும் நமது ரிஷிகளால் முனிவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு யாகத்துக்கு ஒவ்வொரு பலன் உண்டு. அதேபோல் யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஆகுதிப் பொருளுக்கும் ஒரு பலன் உண்டு.

சுவாதி யாகம்
சுவாதி யாகம்

ஒளியும் ஒலியும் தேவதைகளைச் சென்றடையும் வல்லமை கொண்டவை. தீபத்தின் ஒளி, மந்திரங்களின் ஒலி இரண்டும் தெய்வத்தை அடைந்து வேண்டுபவர்கள் வேண்டுதலை நிறைவேற்றச் செய்பவை. இதில் யாகங்கள் ஹோம குண்ட ஒளி, வேத மந்திரங்களின் ஒலி இரண்டையும் கொண்டிருப்பதால் சிறப்பான வழிபாடு என்று போற்றப்படுகின்றன. யாகத் தீயில் ஆகுதிப் பொருள்களான பசு நெய், அபூர்வ மூலிகைகள், மலர்கள், கனி வகைகளை அர்ப்பணம் செய்யும்போது அவை யாகத் தீயில் கலந்து புனிதம் பெற்று அதன் மணமும் புகையும் கதிர் வீச்சும் எல்லா திசைகளிலும் பரவும். இதனால் புவியிலும் வான மண்டலத்திலும் பல நன்மைகள் உண்டாகின்றன. யாகப் புகைக்கு அணுக்கதிர் வீச்சைக் கூட எதிர்க்கும் ஆற்றல் உண்டு என ஆய்வுகள் சொல்கின்றன.

உலக நன்மைக்காவும், நல்ல காரியத்தின் பொருட்டு நமக்காக ஒன்றை வேண்டிக்கொள்ளும்போதும் அந்த யாகம் புனிதம் அடைகின்றது. கருணையோடு தேவதைகளை திருப்திப்படுத்தி நாம் மேற்கொள்ளும் யாகமும் சங்கல்பமும் நிச்சயம் பலன் தரும் என்கின்றன புனித நூல்கள். மூல வடிவான அக்னியை இறைவனாக பாவித்து நாம் செய்யும் யாகங்கள் அநேக நன்மைகளை அளிக்கக் கூடியவை. அதில் மிக முக்கியமான நலன்களை அளிக்கும் யாகமாக விளங்குவது மகா சுவாதி ஹோமம். இது 9 விதமான யாகங்களை தன்னுள் அடக்கிய மகா வேள்வி என்று போற்றப்படுகிறது. நட்சத்திரங்களில் பெரும் ஒளி பொருந்தியது என்று போற்றப்படும் சுவாதி நட்சத்திரம் திருமகளுக்கும் நரசிம்மர் மூர்த்திக்கும் பிரியமான நட்சத்திரம்.

இஞ்சிமேடு கோயில்
இஞ்சிமேடு கோயில்

சுவாதி என்றால் தமிழில் 'வாள்' என்று பொருள். சுடர் விடும் வாளைப்போல தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டது சுவாதி நாள் பூஜை. சுவாதி என்ற சொல்லிலே விஷ்ணு, திருமகளுக்கான ஐக்கிய ஸ்வரூப சக்திகள் அமைந்துள்ளதாக ஆன்மிக நூல்கள் கூறும். ராகு பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதி. இந்த நட்சத்திர நாளின் பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம மூர்த்தி அவதரித்தார். சுவாதி நட்சத்திரத்தின் பெருமைகளில் ஒன்றாக நரசிம்ம ஜயந்தி விளங்குகிறது. ஒவ்வொரு சுவாதி நாளும் நரசிம்மருக்கு விசேஷம் என்பர்.

சுவாதி நாளில் நரசிம்ம மூர்த்திக்கு பானக நிவேதனம் செய்து, துளசி, வெண்மை வஸ்திரம் சாத்த சகல சங்கடங்களும் விலகும் என்பது நம்பிக்கை. இதனால் வரும் சுவாதி நாள் அன்று (14-8-2021) இஞ்சிமேடு எனும் யக்ஞபுரியில் ஸ்ரீகல்யாண நரசிம்மருக்கு விரிவான திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளன.
ஆடி அம்மன் தரிசனம் - சிக்கல்களைத் தீர்ப்பாள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சதுஸ்தான அர்ச்சனம் என்று போற்றப்படும் கும்ப, பிம்ப, யாக, மண்டல ரூபமாக நரசிம்ம மூர்த்தியை நான்கு திருக்கோலங்களில் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். அதன் பிறகு நான்கு சோடஷ பூஜைகள் நடத்தி மகா சுவாதி யாகம் தொடங்கும். இதில் தன்வந்திரி மகா யாகம், பாக்கியலட்சுமி மகா யாகம், வைணதேய ஆஞ்சநேய யாகம், லட்சுமி நரசிம்ம யாகம், சுதர்சன மகா யாகம், பூவராக மகா யாகம், லட்சுமி ஹயக்ரீவ யாகம், ஸ்ரீராம யாகம், ஸ்ரீசந்தான கோபால யாகம் போன்ற 9 யாகங்கள் நிறைவுற்றதும் சகல சந்நிதிகளிலும் அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.

இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள்
இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள்

சக்தி விகடன் வாசகர்கள் இந்த யாகத்தின் பெரும் பலன்களை அடையவென்றே சக்தி விகடனும் GRT நிறுவனமும் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலய நிர்வாகமும் இணைந்து வரும் சுவாதி திருநாளில் 14-8-2021 காலை 9 மணி முதல் இந்த புனித பூஜையை நடத்த உள்ளது. இந்த மகா சங்கல்ப பூஜையில் கலந்து கொண்டு எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுகிறோம்.

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் மஞ்சள் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

அடுத்த கட்டுரைக்கு