திருமகளோடு அலைக்கடலில் அமிர்த கலசத்தோடுத் தோன்றியவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். பொருளுக்குத் திருமகள் என்றால் உடல் நலம், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அதிபதி ஸ்ரீதன்வந்திரி பகவான்.
தேவதைகளின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவக் கடவுள், வைத்தியப் பெருமாள் என்றெல்லாம் போற்றப்படுபவர் தன்வந்திரி பகவான். இவரை வழிபட்டு, இவருக்கான ஸ்ரீதன்வந்திரி மஹாஹோமத்தில் கலந்து கொண்டால், சகல வியாதிகளும் நீங்கி ஆரோக்கிய வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
தன்வந்திரி பகவானை நோயுள்ளவர்கள் வழிபட்டால், தீராத நோய்களும் தீரும். நோய்கள் வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்கள் வழிபட்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். தன்வந்திரி பகவானுக்கு சனிக்கிழமை மிகச் சிறந்த நாள் என்கின்றன ஆன்மிக நூல்கள். நாளுக்கு நாள் நோய்கள் பெருகிவரும் இவ்வேளையில் சகலரும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற, ஆகஸ்ட் 20-ம் தேதி (2022) ஆவணி மாதம் 4-ம் நாள் தேய்பிறை நவமி ரோஹிணி நட்சத்திர நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை, நம் வாசகர்கள் பூரண நலமும் நீண்ட ஆயுளும் பெற மஹாதன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம், சேலம் ஜங்ஷன், ஸ்டீல் பிளான்ட் ரோடில் ஜாகீர் அம்மாபாளையம் அருகே ஸ்ரீவீரமாதுருபுரியில் அமைந்துள்ள ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவான் சந்நிதியில் மஹாதன்வந்திரி ஹோமத்தை நடத்த இருக்கிறோம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம், சகல தெய்வங்களுக்குமான பிரமாண்ட ஆலயமாக விளங்கி வருகின்றது. தெய்வங்களின் அருள் மட்டுமின்றி எண்ணற்ற சித்தர்கள்; யோகிகள் அருள் சாந்நித்யமும் பெற்று நாளும் பக்தர்களின் எண்ணிக்கையால் புகழ்பெற்று வருகின்றது. அருள்மிகு செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர் ஆசியால் தொடங்கப்பட்ட இந்த ஆஸ்ரமம், சகல தெய்வ சந்நிதிகளையும் கொண்டு, நாள்தோறும் சிறப்பு ஆராதனைகளும் ஹோம வைபவங்களும் கொண்டு சிறப்புடன் விளங்கி வருகின்றது. ஸ்ரீதீர்த்த பிள்ளையார் தொடங்கி ஷீரடி சாயிபகவான் வரை இங்கு எல்லா தெய்வங்களின் திருச்சந்நிதிகளும் உள்ளன. அதிலும் வள்ளி, தெய்வயானை சமேத ஸ்ரீகாவடி பழனியாண்டவர், ஸ்ரீசர்வலோகநாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர், ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீதிருப்பதி வேங்கடாசலபதி, பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீதன்வந்திரி பகவான் சந்நிதிகள் இங்கு மிக மிக விசேஷம் எனலாம்.
சகல தெய்வங்களின் சந்நிதிகளையும் கொண்டு இருப்பதால் இது சர்வ வர ஸ்தலமாக விளங்கி வருகின்றது. இங்கு வந்து வேண்டியவர்களுக்கு கிடைக்காத வரங்களே இல்லை; இங்கு வந்து வேண்டியவர்களின் சகல வியாதிகளும் நீங்கியுள்ளன என்கிறார்கள் இந்த பகுதி மக்கள். இங்கு உடல் மற்றும் மனப்பிணிகள் நீங்க ஸ்ரீதன்வந்திரி ஹோமத்துடன் மூலமந்திர ஜபம், சிறப்பு அர்ச்சனைகள், ஆராதனைகளும் நடைபெற உள்ளன. தன்வந்திரி பகவானின் அருளைப் பெற இந்த ஹோமம் ஒரு அருமையான வாய்ப்பு எனலாம்.

உங்களின் ஆரோக்யம் மேம்பட, திருஷ்டி நிவர்த்தி, ருண ரோக நிவர்த்தி, நவகிரக தோஷ நிவர்த்தி, ஆயுள் தோஷ நிவர்த்தி கிடைக்க சிறப்பான வழிபாடுகள் இங்கு சிரத்தையுடன் நடைபெற உள்ளன. உங்களின் தடைகள் விலகி, கஷ்டங்கள் குறையவும் இந்த ஹோம வழிபாடு நிச்சயம் பலன் அளிக்கும் என்று நம்பலாம். மேலும் கடுமையான தோற்று நோய்கள் வராமல் இருக்கவும், சர்க்கரை நோய், புற்று நோய், வாத நோய், வலிப்பு நோய், குடல் சம்மந்தமான நோய்கள், உறுப்பு குறைபாடுகள், மனம் சம்மந்தமான நோய்கள் போன்ற எல்லாவகை நோய்களும் நீங்கவும் இந்த மஹாஹோமத்தில் நீங்களும் பங்கேற்கலாம். பாதிக்கப்பட்ட நோயாளிகள்தான் பங்கேற்க வேண்டும் என்றில்லை. அவர்களுக்காக நீங்களும் பங்கேற்றுப் பிரார்த்திக்கலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
சக்தி விகடன் வாசகர்களாகிய உங்கள் குடும்ப க்ஷேமத்துக்காகவும் உங்கள் சுற்றத்தார் ஆரோக்கியத்துக்காகவும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்! ஸ்ரீதன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டால் உடல் - மனநோய்கள், தோஷங்கள், துன்பங்கள் கொண்டவர் அவை எல்லாம் நீங்கி நிச்சயம் பலன் பெறுவர். உடல் குறைபாடுகள் நீங்கி நோய் அச்சமின்றி பூரண ஆயுளை அடைவர் எனப்படுகிறது. தீராத வியாதிகளை உடையோர், வியாதி குறித்த பயம் கொண்டோர், பூரண ஆரோக்கியம் வேண்டுவோர், நீண்ட ஆயுள் வேண்டுவோர் என அனைவரும் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது நல்லது என ஆகமங்கள் கூறுகின்றன. எனவே துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் சூழ இந்த அபூர்வ ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.

ஓம் நமோபகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீமஹா விஷ்ணவே நம:
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்+ ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404