Published:Updated:

முருகப்பெருமானின் 9-ம் படை வீட்டில் சூரசம்ஹாரம் - தரிசித்துப் புண்ணியம் பெற சேலத்துக்கு வாங்க!

கந்த சஷ்டி

ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோயிலில் இந்த ஆண்டு சூரசம்ஹாரம் வருகிற ஐப்பசி 14-ம் தேதி 31.10.2022 திங்கட்கிழமை நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் 9-ம் படை வீட்டில் சூரசம்ஹாரம் - தரிசித்துப் புண்ணியம் பெற சேலத்துக்கு வாங்க!

ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோயிலில் இந்த ஆண்டு சூரசம்ஹாரம் வருகிற ஐப்பசி 14-ம் தேதி 31.10.2022 திங்கட்கிழமை நடைபெறுகிறது.

Published:Updated:
கந்த சஷ்டி
சேலத்தில் குறைதீர்க்கும் கோயிலாகவும் வியாதிகளை நீக்கும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது முருகனின் ஒன்பதாம் படை வீடு ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமம். சேலம் ஜங்ஷன், ஸ்டீல் பிளான்ட் சாலையில், ஜாகீர் அம்மாபாளையம் ஸ்ரீ வீரமாதுருபுரியில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் தினசரி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபடும் தலமாக உள்ளது.

இறையருள் பெற்ற சித்தர் செங்கோட கவுண்டர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட முருகப்பெருமானின் ஒன்பதாம் படைவீட்டை இப்போது இவர்களின் குமாரர் சோமசுந்தரம் இறை சேவையை தொடர்ந்து வருகிறார்.

ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்
ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம்

ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோயிலின் சிறப்புகள்:

ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில், உலகத்தில் முதன்முறையாக 109 லட்சுமி அமைந்துள்ளது. 108 லட்சுமிகள் 6.4.2022 திங்கள் அன்று ஐந்தரை அடி உயரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. அதிலும் 130 அடி உயரத்தில் ஸ்ரீ விஸ்வரூபலட்சுமி திருப்பணி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. திரு விஸ்வரூப செல்வ லட்சுமி 16 வகையான செல்வங்களை அருளும் சக்தி வாய்ந்தது . திருமுருகன் திருவடியையே சிந்தித்து வழிபடும் அடியார்களுக்கு வேண்டுவதை வழங்கும் ஸ்ரீ காவடி பழனியாண்டவர்க்கு 25.10.2022 செவ் வாய்க்கிழமை முதல் 31.10.2022 திங்கட்கிழமை வரை 72 ஆம் ஆண்டு கந்த சஷ்டி பூஜை ஸ்ரீ சூரசம்ஹார ஸ்கந்த லீலா மஹோத்ஸவமும், லட்ச அர்ச்சனையும், 30.10.2022 ஞாயிற்றுக் கிழமை சஷ்டியன்று 108 வலம்புரி சங்காபிஷேகம் சூரசம்ஹாரம், திருமுருகன் திருவாக்கு அருளியபடி நடைபெறுகிறது.

ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோயிலில் இந்த ஆண்டு சூரசம்ஹாரம் வருகிற ஐப்பசி 14-ம் தேதி 31.10.2022 திங்கட்கிழமை நடைபெறுகிறது.

இந்த திருக்கோயிலில் திருச்செந்தூரில் நடைபெறுவது போல் மிகவும் பிரம்மாண்டமான முறையில் சூரசம்ஹாரம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் பல கடவுள்களின் வேடமிட்டு நடனம், நாடகம் என பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றுவர்.  

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம் என்றால் என்ன?

முருகப்பெருமான் சூரபத்மனை தனது ‘வேல்’ மூலம் கொன்றார் இந்த தெய்வீக செயல் சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. அதையே தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி மற்றும் தர்மமாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு மறுநாள் முருகனுக்கும் தேவசேனாவுக்கும் தெய்வீக திருக்கல்யாணம் நடைபெறும்.

ஸ்கந்த புராணத்தின் படி, சூரபத்மன், சிம்மமுகன் மற்றும் தாரகாசுரன் ஆகியோரின் தலைமையில் அசுரர்கள் தேவர்களை வென்று பூமியைக் கைப்பற்றினர். அவர்கள் மனிதர்களைத் துன்புறுத்தி அதர்மத்தை கையாண்டனர். அவர்கள் பற்றி பிரம்மா, தேவர்கள் மற்றும் மனிதர்கள் சிவபெருமானிடம் முறையிட்டு, அசுரர்களுக்கு முடிவு கட்டும்படி வேண்டினர். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி முருகப்பெருமானைப் பெற்றெடுத்து அசுரர்களை வதம் செய்ய முருகனை அனுப்பி வைத்தார்கள்.

முருகப்பெருமான் அசுரர்களுடன் ஆறு நாள்கள் தொடர்ந்து போரிட்டு அரக்கன் சூரபத்மனின் அனைத்து உதவியாளர்களையும் நண்பர்களையும் கொன்று இறுதி நாளில் முருகனுக்கும் சூரபத்மனுக்கும் கடும் போர் நடந்தது. இறுதியாக, முருகப்பெருமான் தனது வேலால் சூரபத்மனின் உடலைத் துளைத்தார். திடீரென்று, அரக்கன் சூரபத்மன் ஒரு பெரிய மாமரமாக மாறினான், ஆனால் முருகப்பெருமான் தனது வேலால் மரத்தை செங்குத்தாக இரண்டு துண்டுகளாக வெட்டினார்.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

அந்த இரண்டு துண்டுகள் மயில் மற்றும் சேவல் என மாறின. மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டார் முருகப் பெருமான். 

சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினார்.

அதன் தொடர்ச்சியாக, முருகப்பெருமான் – தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சஷ்டி நாளில் நடக்கும் புகழ்பெற்ற ‘வெற்றிவேல்’ மந்திரம் கந்தன் அரக்கன் சூரபத்மனை வென்றதுடன் தொடர்புடையது.

அறுபடை வீடுகளின் இரண்டாவது வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் மிகவும் பிரசித்திபெற்ற சூரசம்ஹாரம் விழா வருடம் வருடம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கின்றனர்.

ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமம்
ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமம்
திருச்செந்தூரில் நடைபெறுவது போலையே மிகவும் பிரபலமாக சேலம் ஜங்ஷன், ஸ்டீல் பிளான்ட் சாலையில், ஜாகீர் அம்மாபாளையம் ஸ்ரீ வீரமாதுருபுரியில் அமைந்துள்ள முருகனின் ஒன்பதாம் படை வீடு ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமத்திலும் வருடா வருடம் சூரசம்ஹாரம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.