Published:Updated:

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
News
சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

நவகிரகங்களில் மெதுவாக நகரும் தன்மை உடையவர் சனிபகவான்.

நிகழும் சார்வரி வருடம் மார்கழி 11-ம் நாள் (26.12.2020) சனிக்கிழமை இரவு 4:49 மணிக்கு (விடிந்தால் 27.12.2020) உத்திராடம் நட்சத்திரம் 2-ம் பாதம் - மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) சனி பகவான்.

மகரம், சனிபகவானின் சொந்தவீடு. அங்கே அவர் ஆட்சி பலம் பெற்று அமர்கிறார். சனிபகவான் அடுத்த இரண்டரை ஆண்டு களுக்கு அங்கு அமர்ந்து பலன் தரப்போ கிறார். ஏற்கெனவே மகரத்தில் நீச குரு அமர்ந்திருக்கிறார்.

நவகிரகங்களில் மெதுவாக நகரும் தன்மை உடையவர் சனிபகவான். அதனால் அவருக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 30 ஆண்டு களுக்கு ஒருமுறை மாற்றங்களையும் ஏற்றங் களையும் கொண்டுவரும் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி திகழ்வதால், மற்ற எல்லாப் பெயர்ச்சிகளையும்விட மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது.

சனியின் பார்வை பெறும் ராசிகள் அல்லது சனி அமர்ந்திருக்கும் இடத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பலன்கள் சொல்வது வழக்கம். அவ்வாறு இந்த சனிப்பெயர்ச்சியில் பலன் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக் காரர்கள் யார் என்பது குறித்துக் காணலாம்.

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

பரிகாரம் தேவையான ராசிக்காரர்கள்

பொதுவாக ராசியிலும் ராசியிலிருந்து 2, 4, 7, 8, 10, 12 ஆகிய இடங்களிலும் சனிபகவான் அமர்வது நல்ல பலன்களைத் தராது என்பது ஜோதிட நம்பிக்கை.

தற்போதைய பெயர்ச்சியில் - கோசாரப்படி பாதிக்கப்படுவோர் மகரம், கும்பம், மேஷம், மிதுனம் கடகம், கன்னி, துலாம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் ஆவர்.

எனினும் சனிபகவான் தன் சொந்த வீட்டில் ஆட்சி பலன் பெற்று அமர்கிறார். ஆகவே, மேற்சொன்ன ராசிகளில் சிலவற்றுக்குப் பாதக பலன்கள் குறைவாகவும் சாதக பலன்கள் அதிகமாகவும் அமைய வாய்ப்பு உண்டு.

பலன் பெரும் ராசிக்காரர்கள்

ராசிக்கு 3, 6, 9, 11 ஆகிய இடங்களில் சனிபகவான் அமரும்போது யோக பலன்களே உண்டாகும். அவ்வாறு நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியில் பலன்பெறும் ராசிகள், விருச்சிகம், சிம்மம், ரிஷபம், மீனம் ஆகியன.

ராசி எதுவாக அமைந்தாலும் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானையும் அவரின் குருவான பைரவரையும் வழிபடுவது மிகவும் சிறப்பாகும். அவ்வாறு வழிபடுவதன் மூலம் அனைத்து ராசிக் காரர்களுக்கும் நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

பைரவர் சிவனின் அம்சம். எனவே சிவ வழிபாடுகள் சனி பகவானின் பார்வையால் உண்டாகும் தீமைகளை முழுமையாக நீக்கும். அத்துடன் சனிபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்வதாலும் பாதிப்பு களில் இருந்து விடுபடலாம். சனிபகவானுக் குப் பிரீத்தியான வழிபாடுகளில் குறிப்பிடத் தக்கது பரிகார ஹோமம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்த வகையில் வரும் சனிப்பெயர்ச்சியையொட்டி... வாசகர்களின் நன்மைக்காகவும், கோசார ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பின் அவை விலகவும், சனி பகவானின் திருவருளால் நன்மை சேர்க்கும் பலாபலன்கள் அதிகரிக்கவும் வேண்டி சிறப்புப் பரிகார ஹோம வைபவம் நிகழவுள்ளது.

பாண்டிச்சேரி - கடலூர் சாலையில் இடையார்பாளையம் பேருந்து நிறுத்தத்துக்கு மேற்கே உள்ள தர்ப்பை வனத்தில் - ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) அமைந்துள்ளது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம். அனுகிரக மூர்த்தியாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளும் இந்த ஆலயத்தில், சக்தி விகடனும் ஸ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் இணைந்து நடத்தும் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம், 27.12.2020 ஞாயிறன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நவகிரகங்கள் ஒவ்வொன்றின் மூலமந்திரம் சொல்லிச் செய்யப்படும் மகாமந்திர ஹோமம், பரமேஸ்வரனான சிவனுக்குப் ப்ரீதியான ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் எனச் சிறப்பாக வைபவங்கள் நடைபெற வுள்ளன. இவற்றில் மகா அற்புதமான பலன்களை அருளவல்ல சனிப்பெயர்ச்சி பரிஹார ஹோமத்தில் உங்களுக்காகவும், உறவுகள் மற்றும் நண்பர்களின் நலன் வேண்டியும் நீங்களும் சங்கல்பம் செய்து கொள்ளலாம்.

சிவாம்சமான பைரவ மூர்த்தியின் திருவருள் இருந்தால் கெடுபலன்கள் விலகும். ஜாதகத்தில் சனிக்கிரகத்தின் நிலை பாதகமாக இருப்பின் அதனால் உண்டாகும் பாதிப்புகளும் நீங்கிவிடும் என்கின்றன ஞான நூல்கள்.

அவ்வகையில் சகல சம்பத்துகளையும் வாரி வழங்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் அருளும் ஆலயம் இது. இங்கே சனிபகவானுக்கான வேண்டுதல்கள் செய்யும்போது அதை அவர் முழுமை யாகவும் மகிழ்ச்சியாகவும் ஏற்று அனைவருக்கும் நல்ல பலன்களையே அருள்வார்.

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

தொழிலில் மேன்மை, பணியில் உயர்வு, பணவரவில் இருந்த தடைகள் நீங்கி செல்வ வளம் சேர்வது, ஆரோக்கியத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் தேடிவரும். எனவே இந்த சனிப்பெயர்ச்சி ஹோமத்தில் நீங்களும் சங்கல்பம் செய்து நன்மைகள் பெறலாம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) 6.1.2021 தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் (2.1.2021 - சனிக் கிழமைக்குள்) வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு விவரங்களுக்கு: 89390 30246

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

அஷ்டாங்க நமஸ்காரம்!

கோயிலில் கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்குவது மரபு. இதை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?

`அஷ்டாங்கம்’ என்றால், எட்டு உடல் உறுப்புகள் என்று பொருள்.

மார்பு, மனம், கண்கள், சிரம், வாக்கு, கைகள், கால்கள், காதுகள் - ஆகிய அத்தனையும் வணக்கத்தில் இணைய வேண்டும் என்பர். இந்த எட்டில் மார்பு, காதுகள், கால்கள் இந்த மூன்றையும் சேர்க்காத வணக்கம், பஞ்சாங்க நமஸ்காரமாக மாறும்.

பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வணக்கத்தில், இந்த மூன்றையும் தவிர்க்க வேண்டும்.

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்; பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தால் போதும் என்கின்றன ஞானநூல்கள்.

- சா.முருகானந்தம், சென்னை-45