Published:Updated:

சேரமான் பெருமான் குருபூஜை!

`சேரர் குலம் செய்த புண்ணியங்களால் பிறந்தவர்' என்று போற்றப்படும் சேரமான் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

சேரமான் பெருமான்
சேரமான் பெருமான்

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் சேரர் குடியில் பிறந்தவர் சேரமான் பெருமான். இவரது காலம் கி.பி 9-ம் நூற்றாண்டு. இவர் சிவ பூசையின்போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார் என்றும், அதனால் `கழறிற்று அறிவார்’ என்று பெயர் பெற்றார் என்றும் பெரியபுராணம் கூறுகிறது.

சிவபெருமான்
சிவபெருமான்

`சேரர் குலம் செய்த புண்ணியங்களால் பிறந்தவர்' என்று போற்றப்படும் சேரமான் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் பெருமாக்கோதையார். சிறு வயது முதலே திருஅஞ்சைக்களத்து இறைவனைத் தொழுது, பக்தி செலுத்தி வாழ்ந்தவர்.

பீட்ரூட் நிறத்தில் கேரட்; கடைவிரித்தும் கொள்வாரில்லை! - கண்ணீர்விட்ட விவசாயி

சுந்தரர் திருவஞ்சைக்களம் தலத்தில் `தலைக்குத் தலைமாலை’ எனும் திருப்பதிகத்தைப் பாடினார். அவரது பாடலைக் கேட்ட சிவபெருமான் இந்திரனிடம் சுந்தரரைப் பூத உடலுடன் கயிலாயத்துக்கு அழைத்துவரச் சொல்லிக் கட்டளையிட்டார்.

சிவபெருமான்
சிவபெருமான்

இந்திரன் தனது ஐராவதம் எனப்படும் வெள்ளையானையோடு திருவஞ்சைக்களத்துக்கு வந்து சுந்தரரை ஐராவதத்தின் மீதேற்றி கயிலாயம் அழைத்துச் சென்றார். அப்போது, சுந்தரரின் நண்பரான சேரமான் பெருமானும் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் கயிலாயம் செல்லும் காட்சியைக் கண்டார்.

அப்போது 'தானும் கயிலாயம் செல்ல வேண்டும்' என்ற எண்ணத்துடன் குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரமான `நமசிவாய’ எனும் திருமந்திரத்தைக் கூற குதிரையும் விண்ணேக சேரமான் பெருமானும் கயிலாயம் சென்றார்.

சேரமான் பெருமான்
சேரமான் பெருமான்

இன்று (7.8.2019) சேரமான் பெருமானின் குருபூஜை தினம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தின் போது இந்த குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சிறப்பு மிக்க இந்த நாளில் சேரமான் பெருமானை எண்ணி வழிபடுவோம்.