Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 24

கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 24

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கண்டுகொண்டேன் கந்தனை
பிரீமியம் ஸ்டோரி
கண்டுகொண்டேன் கந்தனை

டைக்கழி முருகனை வழிபட்டால் நவகோள்கள் நல்லதே செய்யும் என்பதை ‘திருவிடைக்கழி முருகர் அந்தாதி’ 71-ம் பாடல் உறுதி செய்கிறது. குராமரத்தடியில் ‘பத்ரலிங்கம்’ என்னும் பலி பீடம் உள்ளது. இங்குதான் கந்தன் தவம் புரிந்தான் என்பதால் அர்த்த ஜாமத்தில் இந்த பத்ரலிங்கத்துக்கு முதலில் பூஜை செய்த பிறகுதான் மூலவருக்கு பூஜை செய்வது வழக்கம்.

தினமும் நான்குகால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயிலில் மாதக் கார்த்திகை மற்றும் மகா கந்த சஷ்டி விழா ஐப்பசி மாதத்தில் நடைபெறுகிறது. திருமால், பிரம்மன், வசிஷ்டர், முசுகுந்தர், சேந்தனார், அருணகிரிநாதர் முதலானோர் இத்தலத்தில் வழிபட்டு அருள்பெற்றனர்.

`தருமருவும் எத்தலத்தரும் மருவ முத்தியைத்தரு திருவிடைக்கழிப் பெருமாளே' என்ற அருணகிரியார் வாக்கிற்கிணங்க இத்தலத்தில் முக்திபெற்ற பேரருளார் சேந்தனார் ஆவார்.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கரா யிருந்தவர் சேந்தனார். திருவெண்காடர் தன் மகன் மருதவாணர் மூலம் ‘காதற்ற ஊசியும் வாராது காண் நும்கடை வழிக்கே’ என்ற உண்மையை உணர்ந்து வைராக்கியம் வரப்பெற்று துறவறம் மேற்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் சொத்துகளைப் பொது மக்களுக்கு வழங்க தன் கணக்கர் சேந்தனாரிடம் கூற, அவரும் நிதி அறையைத் திறந்து பொதுமக்களுக்கு வழங்க, சோழ அமைச்சர் சேந்தனாரைக் கைது செய்து சிறையிலிட்டான். இதையறிந்த பட்டினத்தார் திருவெண்காடு விநாயகரை வேண்ட, அவர் அருளால் சிறை நீங்கப் பெற்றார். (திருவெண்காட்டில் உள்ள இந்த கணபதிக்கு ‘விலங்கு தெறிந்த விநாயகர்’ என்று பெயர்.)

சேந்தனார் மனைவி மகனுடன் தில்லைக்கு அருகில் விறகு விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். தினமும் சிவபிரானை வழிபாடு செய்து சிவனடியார் ஒருவருக்கு உணவு அளித்த பிறகு தாம் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள் நடராஜப் பெருமானே சிவனடியாராக வந்து அவரது இல்லத்தில் அன்புடன் அளித்த களி உணவை ஏற்று, அதன் மிகுதியைத் தன் திருமேனியில் காட்டி சேந்தனாரின் பேரன்பை உலகுணரச் செய்தார். (சிவபெருமான் சேந்தனார் இல்லத்தில் களி உண்ட நாளே திருவாதிரைத் திருநாள். அதன் நினைவாக இன்னும் அந்த நாளில் நடராஜப்பெருமானுக்கு நாம் களி நிவேதனம் செய்து உண்டு களிப்படைகிறோம்).

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

தில்லையில் மார்கழித் திருவிழாவில் ஓடாது தடைப்பட்ட திருத்தேரைத் தில்லைக் கூத்தன் விருப்பப்படி திருப்பல்லாண்டு பாடி, தேர் தன் நிலையினை அடையுமாறு செய்தார். இவர் பாடியுள்ள திருவிசைப்பா பதிகங்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகிய தலங்களுக்குரியதாகும். இவர் பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கண்டராதித்த சோழ அரசர் காலத்தில் வாழ்ந்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்தம் வாழ்வின் பிற்பகுதியில் திருக்குராவடிவேலனை வழிபட்டு இவ்வூரில் திருமடம் அமைத்து வாழ்ந்தார். ஒரு தைப்பூச நன்னாளில் சிவபெருமான், உமாதேவியர், முருகப் பெருமான் புடைசூழ வந்து சேந்தனார், அவர் மனைவி மகனுடன் மூவரையும் கயிலைக்கு அழைத்துச் சென்றதாக திருவிடைக்கழியில் பாடிப் பரவிய திருவிசைப்பாப் பதிகம் முருகப்பெருமானுக்கென்று பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பதிகத்தில் வரும் ‘சுப்பிரமணியன்’ என்ற சொல் முதன்முறையாகத் தமிழ் இலக்கியத்தில் இதில் தான் இடம்பெற்றுள்ளது என்பது ஆய்வாளர் கருத்து.

கண்டுகொண்டேன் கந்தனை
கண்டுகொண்டேன் கந்தனை

குராவின் நிழல் மேவும் குமரப்பெருமானிடம் ஆராத அன்புகொண்ட அருணகிரியாரின் திருவிடைக்கழித் திருப்புகழ் எட்டு பாடல்கள் கிடைத்துள்ளன. மற்றும் திருச்செந்தூர் திருத்தணிகை, சுவாமிமலை, எட்டுக்குடி, எழுகரைநாடு ஆகிய தலப்பாடல்களிலும் குராவடிக்குமரனை அழைப்பார். அவருக்கு அநேக தத்துவங்களையும், அபரிமித வித்தைகளையும் அளித்த தலங்களில் திருவிடைக்கழியும் ஒன்றாகும்.

குரவைலிங்கன் என்பவர் இயற்றியுள்ள திருவிடைக்கழித் தலபுராணம் கையெழுத்துப் பிரதியாக சென்னை டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூல் நிலையத்தில் உள்ளது. இன்னும் அச்சாகவில்லை. இக்கோயிலில் 18 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. மிகப்பழைமையான இத்திருக்கோயிலுக்கு முசுகுந்த சக்ரவர்த்தி திருப்பணி செய்துள்ளதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது.

திருப்பிடவூர் என்றதலம் திருவிடைக்கழியின் ஒரு பகுதியாக இருந்து கால வெள்ளத்தில் அழிந்துவிட்டது. அங்குள்ள சிவாலய விக்ரகங்கள் தற்போது திருவிடைக்கழி முருகன் கோயிலின் உட்பிராகாரத்தில் உள்ளன. இந்தத் திருப்பிடவூர் பற்றி சேந்தனார் தம் திருவிசைப்பாவில் பாடியுள்ளார். இத்தலத் திருப்புகழ் ‘பகரும்முத்தமிழ்’ என்று தொடங்கும் பாடல் சகல செல்வ யோக மிக்கப் பெருவாழ்வு தரும் அற்புதமான பாராயணத் திருப்புகழாகும்.

நீர்வளம் குறையாத வயல்களும் சோலைகளும் நிறைந்த திருவிடைக்கழியில் அழகன் முருகனை ஆண்டுக்கு ஒரு முறையாவது வழிபடும் அடியவர்களுக்குக் கொடியவினைப் பயன்கள் சாராது ; மனம் சோர்வடையாது; உடலுக்கு வரும் நோய் மற்றும் பிறவிப்பிணி ஒழியும்; வாழ்வில் தெவிட்டாத இன்ப அருள் பெருகும்.

கனககிரி இலகு கந்தன்

எந்தை வருக ரகுநாயக வருக

மைந்த வருக மகனே இனிவருக

என் கண் வருக எனதாருயிர் வருக அபிராம

இங்குவருக அரசே வருக முலை

உண்க வருக மலர் சூடிட வருக

என்று பரிவினொடு கோசலை புகல

வருமாயன் சிந்தை மகிழும் மருகா…

பிள்ளைத் தமிழ் பிரபந்தங்களில் தளர் நடையிட்டு வரும் சேயைத் தளராத் தமிழ்நடையில் வாவா என்றழைக்கும் வாரனைப் பருவம் என்னும் வருகைப் பருவம் மிகவும் அழகாகச் சுவையாக அமைந்திருக்கும்.

திருச்செந்தில் கந்தனை தரிசிக்கச் சென்ற அருணை முனிக்கு அவன் மாமன் தசரத ராமன் தத்தித் தத்தி நடந்து வரும்போது அவனது தாய் கோசலை ‘மைந்தா, மகனே, கண்ணே, ராஜா’ என்றெல்லாம் ஆசையுடன் பாசமுடன் அழைக்கும் அழகிய காட்சி நினைவுக்கு வருகிறது. மேலே காணப்படும் அந்தச் சொல்லோவியம் கம்பனில்கூடக் காண இயலாத காட்சி.

மருகன் புகழைப் பாட வந்த அருணகிரி, மாமன் புகழைப் பேசி நம்மை ரசிக்க வைக்கும் அருமையைத் திருப்புகழில் பல இடங்களிலும் நாம் படித்து இன்புறலாம். இப்படித் திருமால் புகழ்மட்டுமல்ல, கணபதி, சிவன், அம்பிகை என்று எல்லாக் கடவுளர்களையும் கந்தனோடு உறவாடச்செய்து போற்றிப் பாடிய ஒப்பற்ற தெய்விகத் தமிழ் கவிஞர் அருணகிரியார் ஒருவரே.

பல மலைகளுக்கு அதிபதியானவன் மால் மருகன். குறிஞ்சி நிலத்தின் சொந்தக்காரன். தலம்தோறும் அவன் புகழைப் பாட வந்த சந்த முனிவர் கனககிரி என்னும் தலத்தில் கந்தனைக் காண்கிறார். முன்பு பரிவினோடு கோசலை புகல வரும் மாயனைக் கண்டவர், இங்கே கலகல என்று தண்டை ஒலிக்க தளிர்நடையிட்டு வரும் குழந்தையைப் பரிவோடு கௌரி கொஞ்சும் கடம்பனாக தரிசிக்கிறார்!

- காண்போம்...

அஷ்ட மங்கலப் பொருள்கள்

ஷ்ட மங்கலச் சின்னங்களாக எட்டு பொருள்கள் ‘சிவ பூஜாபத்ததி’யில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவை: கண்ணாடி, பூரணக் கும்பம், ரிஷபம், இரட்டை சாமரம், ஸ்ரீவத்சம், ஸ்வஸ்திகம், சங்கு, அடுக்கு தீபம்.

கண்டுகொண்டேன் கந்தனை - 24

சில சிவாலயங்களில், இந்த அஷ்ட மங்கலச் சின்னங்கள் கருவறையின் நிலைப்படியில் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. கும்பகோணத்தை அடுத்த திருந்துதேவன்குடியில் உள்ள கற்கடேஸ்வரர் கோயிலிலும், தஞ்சை பெரிய கோயிலில் அணுக்கன் வாயிலிலும் இந்த அஷ்ட மங்கலச் சிற்பங்களைக் காணலாம்.

- முத்து.இரத்தினம், வரதம்பாளையம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism