Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 30: கனவில் வந்தாள் வள்ளிதேவி! - கதிர்காமம் தொடர்ச்சி...

கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
கந்தன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 30: கனவில் வந்தாள் வள்ளிதேவி! - கதிர்காமம் தொடர்ச்சி...

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
கந்தன்
பிரீமியம் ஸ்டோரி
கந்தன்
திர்காமம் மலையைச் சுற்றியுள்ள காடுகளில் வசிக்கும் வேடுவர் களுக்குக் கந்தப்பெருமானே கண்கண்ட தெய்வம்.

வள்ளித் திருமணம் நடந்த இடம் கதிர்காமம் என்றும், முருகன் தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்றும் போற்றுகின்றனர். இங்கு கதிரை மலைக்கு அருகில் உள்ள மலையை வள்ளி மலை என்றழைக்கிறார்கள்.

தமிழ் மொழியறியாத அங்குள்ள வேடுவர் தலைவர் `பண்டிஹோத்தோ' என்பவர் ஒருமுறை தெரிவித்த செய்தி, செய்தித்தாளில் வந்துள்ளது. `வள்ளி என் அக்கா; கந்தன் என் மைத்துனர். வள்ளி பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். அக்காவை மணந்துகொண்ட கந்தனுக்கு ஆண்டு தோறும் எடுக்கும் பெருவிழாவில் கலந்துகொள்வது எங்கள் கடமை.

அப்போது திருவிழாக்காலம். இரவு நல்ல தூக்கத்தில் இருந்தேன். என் கனவில் வந்த வள்ளியக்கா `என்ன, நீ இங்கே துங்குகிறாய்... அங்கே உன் மைத்துனன் கந்தனுக்குப் பெருவிழா நடக்கிறது. அங்கு சென்று உன் ராஜ மரியாதையைச் செய்' என்று கட்டளையிட்டார். அங்கே சென்று எனது பணி முடிந்ததும் மீண்டும் காட்டுக்குத் திரும்பி விடுவேன்' - வேடுவர் தலைவரின் அனுபவத்தை நாம் படிக்கும்போது நமக்கும் மெய்சிலிர்க்கிறதல்லவா!

கந்தன்
கந்தன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதிர்காமத்தில் வேடர் ஒருவர் வேலரைப் பூஜித்துப்பேறு பெற்ற வரலாறு `சுப்பிரமண்ய பராக்ரமம்' என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. ஒருமுறை சாபம் பெற்ற பிரம்மன் பூமியில் அந்திமான் என்னும் வேடனாகப் பிறந்தான். தான் கொல்ல எத்தனித்த பிப்பிலாத முனிவரால் அவன் ஞானம் வரப்பெற்றான். முருகவேளை அன்புடன் பூஜித்தான். கார்த்திகை விரதமிருந்து ஆறெழுத்தை ஓதி வேடத்தன்மை நீங்கி அரசனாகி, இடைவள்ளல்கள் எழுவரில் ஒருவனாயினான். இந்தச் செய்தியை, அருணகிரிநாதரின் பழமுதிர்ச்சோலைத் திருப்புகழின் `வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ்கதிர் காமம் உடையோனே' என்ற வரிக்கான விளக்கத்தில் எடுத்துரைக்கிறார், தணிகைமணியார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, ஆன்மிக அனுபவத்தைத் தேடி பல நாடுகளுக்கும் சென்றவர், ஆங்கிலேய ஆறுமுக அடியாரான `பாட்ரிக் ஹாரிகன்'. பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கும் நண்பர். எங்களோடு சிறுவாபுரி, திருப்போரூர் பாத யாத்திரைகளில் கலந்துகொண்டவர். இலங்கை கதிர்காமத்துக்கும் சென்று வந்தவர்.

அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. சிந்தனையில் கந்தனை எப்போதும் வரிந்திருப் பார். `நான் சுப்ரமண்ய கடவுளைத் தவிர, வேறு எந்தக் கடவுளையும் ஒப்புக் கொள்ள மாட்டேன்' என்ற பக்தியோடு இருப்பவர்.

இலங்கையிலுள்ள திருக்கோண மலையி லிருந்து கதிர்காமம் தலத்துக்குக் காட்டுப் பாதையில் 14 ஆண்டுகள் பாத யாத்திரை செய்தவர். நாங்கள் கதிர்காமம் சென்றபோது உடனிருந்து பல தலங்களிலும் தரிசனம் செய்து வைத்ததுடன், தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

`கதிர்காமத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. அது ஓர் அறிவு நிலை கடந்த ஆழ்ந்த உட்பொருளுடைய தெய்வத்திறனுடைய புண்ணியத்தலம் (MYSTIC SHRINE)' என்று என்னிடம் அவர் கூறியதை அடிக்கடி எண்ணி வியந்ததுண்டு. அவர் எனக்கு டைரியில் எழுதிக்கொடுத்தது `சும்மா இரு' என்பதுதான். அவர் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருப்புகழ் லக்ஷ்மி அம்மாள் என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தார். அந்த அம்மையார் 400 திருப்புகழ்ப் பாடல்களுக்கு மேல் மனனம் செய்தவர். அவற்றை மிக அற்புதமாக கணீர் இசையுடன் பாடுவார். உறவினர் யாரும் கிடையாது. தனிமையான வாழ்க்கை. திருப்புகழ் பாடுவது தான் பொழுதுபோக்கு.

ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் திருவல்லிக்கேணி தேரடி வீதியில் திருப்புகழ் பாடிக்கொண்டு செல்வார். அவருடன் நான்கு ஐந்து பேர் செல்வார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருமுறை அந்த அம்மையாரைப் பேட்டி கண்டு பத்திரிகையில் கட்டுரை எழுதினேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கதிர்காமம் சென்றுவந்த அனுபவத்தை விவரித் தார். கதிர்காமத்தை தரிசிக்க அவர் சென்ற அன்றைய இரவு, அத்தலத்தில் தூக்கம் வராமல் `இந்தக் கதிர்காம முருகன் எப்படியிருப் பான்... திரையைத்தானே காட்டுகிறார்கள். வடிவத்தைக் காண முடியவில்லையே' என்று மனத்தில் பலவித எண்ணங்களோடு புரண்டு கொண்டிருந்தவர், அப்படியே தூங்கிப்போனார். கனவில் குழந்தை முருகன் மிக அழகான ஆடை ஆபரணங்களுடன் அவர் அருகில் படுத்துக்கொண்டிருந்தானாம்.

`ஓ... நீ இப்படித்தான் இங்கு காட்சியளிக் கிறாயா...' என்று மகிழ்ந்து அவனை அணைத்துக்கொள்ள விழித்தபோது முருகன் மாயமாக மறைந்துவிட்டானாம். இதை என்னிடம் அவர் சொன்னபோது பக்தி பரவசத்தில் அம்மையாருக்குப் பேச்சு எழவில்லை!

அருணகிரிநாதர் அத்தலத் திருப்புகழில் `பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகுகோடி நின்ற பதமடியர் காணவந்த கதிர்காமா!' என்று அனுபவிக்கிறார்.

கனவில், குழந்தை முருகன் மிக அழகானஆடை ஆபரணங்களுடன் அந்த மூதாட்டியின் அருகில் படுத்துக்கொண்டிருந்தானாம்!
கண்டுகொண்டேன் கந்தனை - 30: கனவில் வந்தாள் வள்ளிதேவி! - கதிர்காமம் தொடர்ச்சி...

அதாவது, `கந்தப்பெருமான் பல ஆயிரக்கணக்கான தலங்களிலும் கோடிக் கணக்கான மலைகளிலும் நின்று அருள்பாலிக் கிறான். அப்படிப்பட்ட அவனுடைய திருவடிகளை அடியார்கள் காணும் பொருட்டு கதிர்காமத்தில் எழுந்தருளி வந்துள்ளான்' என்று, வேறு எந்தத் தலத்திலும் இல்லாத தனிச் சிறப்புடன் பாடியுள்ளார். எனில், கதிர்காமம் தலத்தின் பெருமைதான் என்னே!

கண்காணாத மூலையிலே கதிர்காமம் இருக்கிறது. கருத்தும் காணா வகையிலே பரம ரகசியமாகக் கதிர்காமப் பொருள் மறைந்திருக்கிறது. ஆனாலும் அந்தத் தலத்துப் பெருமை எவ்வளவு காலமாக எவ்வளவு விரிவாகப் பரவியிருக்கிறது!

இவ்வளவும் பக்தியினால் விளையும் விளைவுகள்... இறைவனுடைய திருவருட் சக்தியின் பிரபாவம்... அவற்றை அனுபவத் தினால் மட்டுமே உணர முடியும். அவர்கள் அடையும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

- இன்னும் வரும்...

`அழிவிலும் நன்மை உண்டு!’

தாமஸ் ஆல்வா எடிசன், தன் 67-வது வயதில், கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள தனது தொழிற்சாலையைத் தீயில் இழந்தார். அதற்கு அவர் சிறிதளவே காப்பீடு செய்திருந்தார்.

கண்டுகொண்டேன் கந்தனை - 30: கனவில் வந்தாள் வள்ளிதேவி! - கதிர்காமம் தொடர்ச்சி...

தனது பெரும் உழைப்பில் உருவானவை எல்லாம் தீயில் கருகி வீணாவதைப் பார்த்தும், ’அழிவில் பெரும் நன்மை இருக்கிறது! நம்முடைய எல்லா தவறுகளும் பொசுங்கிப் போய்விட்டன. இனி நாம் புதிதாக எதையும் தொடங்கலாம். நன்றி ஆண்டவனே!’, என்று சொன்னாராம் எடிசன்.

இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்தும் அதனால் சோர்ந்து விடாத எடிசன், அடுத்த மூன்று வாரங்களில் ஒலிப்பதிவுக் கருவியைக் கண்டுபிடித்தாராம்!

- அ.ஐஸ்வர்யா, சென்னை-4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism