Published:Updated:

நினை அவனை! - 15

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

- பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 15

- பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

Published:Updated:
நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்

தஸநனவிஹீனம் ஜாதம் துண்டம்

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்

ததபி ந முஞ்சத் யாஸா பிண்டம்

கருத்து : உடல் தளர்ந்துவிட்டது. தலை நரைத்துவிட்டது. வாயிலோ பற்கள் இல்லை. கோலையூன்றிக்கொண்டு தள்ளாடி நடக்கவேண்டியிருக்கிறது. ஆனாலும் ஆசைகள் விடுவதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நினை அவனை! - 15

ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஒருவர். நோயின் தீவிரம் பாடாய்ப்படுத்தவே, தன் உறவினர்களிடமெல்லாம், “எனக்குக் கொஞ்சம் விஷம் கொடுத்துவிடுங்கள். அதைச் சாப்பிட்டுச் செத்துப்போகிறேன்’’ என்று புலம்பத் தொடங்கினார் அவர்.

உறவினர்களும் நண்பர்களும் “அப்படி யெல்லாம் சொல்லாதீர்கள்’’ என்று கண்ணீரோடு அவரை சமாதானப்படுத்தி வந்தார்கள்.

ஆனால் அந்த அன்பரோ, தன்னைத் தினமும் பரிசோதிக்கும் மருத்துவரிடமும் புலம்பத் தொடங் கினார். ‘தனக்கு உலகின் மீது வெறுப்பு’ என்றும், ‘விஷ ஊசிபோட்டுக் கொன்றுவிடுங்கள்’ என்றும் கெஞ்சினார். இதுகுறித்து அவரின் உறவினர்கள், மருத்துவரிடம் கவலை தெரிவித்தனர்.

அவரோ, “பொதுவாக நோயாளிகள் இவ்வாறு புலம்புவது வழக்கம்தான். இதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். வேண்டுமானால் அதை இன்றே உங்களுக்குப் புரியவைக்கிறேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படியே, ஒரு பாட்டிலோடு நுழைந்த மருத்துவர், அதை நோயாளி அன்பரிடம் தந்து விட்டு, “உங்களுக்கு அமைதி தேவை. இதோ இந்த பாட்டிலைப் பிடியுங்கள். இதில் பத்து மாத்திரைகள் உள்ளன. தினமும் ராத்திரி வேளையில் ஒரே ஒரு மாத்திரை சாப்பிடுங்கள். அதைவிட அதிகமாகச் சாப்பிட்டால் விபரீதம்தான். அதன்பிறகு, உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லை’’ என்று கூறிவிட்டு நகர்ந்தார். மறுநாள் காலை மருத்துவர் வந்தபோது அந்த பாட்டிலில் சரியாக ஒன்பது மாத்திரைகள் மீதம் இருந்தன!

நினை அவனை! - 15

உயிர் ஆசை அனைவருக்குமானது. அதற்காக அந்த ஆசையை விட்டுவிட வேண்டும் என்று கூற வரவில்லை. இருக்கும்போதே குறைந்தபட்சம் பேராசைகளை அறுத்தெறிந்துவிடுவது நலம் என்கிறார்கள் ஞானிகள்.

தினமும் பல மரணச் செய்திகளைச் பத்திரிகைகளில் படிக்கிறோம்; தொலைக்காட்சி வழியே பார்க்கிறோம். உறவுகளையும் நண்பர் களையும்கூட இழந்திருக்க வாய்ப்பு உண்டு. இவையெல்லாம் நமக்குள் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டாமா?

குளக்கரையில் யட்சன், “உலகில் மிகப்பெரிய அதிசயம் எது?” என்று கேட்க, “இன்று இறந்த பிணத்தைப்பார்த்து நாளை இறக்கப்போகும் பிணங்கள் அழுவதுதான்’’ என்றாராம் தருமர்.

நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காலச் சக்கரம் நழுவிக்கொண்டிருக்கிறது.

“ஏதோ... இப்பதான் வேலைக்குச் சேர்ந்ததுபோல் இருக்கு. ஆனால், இருபது வருஷங்கள் ஓடிப் போச்சே... ரிட்டயர்டு ஆகப்போறேனே...'' என்று சிலர்கூறக் கேட்டிருக்கலாம். இவ்வளவு வேகமாக நாள்கள் கழிந்துகொண்டிருக்க, நாம் ஏன் வஞ்சம் வளர்க்க வேண்டும்; பகைமை பாராட்ட வேண்டும். இதெல்லாம் அர்த்தமற்ற செயல்கள் அல்லவா! எனவே, மனத்தைப் பக்குவப்படுத்திக்கொள்வதே ஏற்ற வழி.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில், `பிறந்தார் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

பிறந்து வளரும்போதே ஆயிரம் ஆசைகள் நம்மைச் சூழ்கின்றன. நாமும் அவற்றில் அமிழ்ந்துவிடுகிறோம். ஆகவே, துன்பக்கடலில் மூழ்குகிறோம்.

எனவேதான் சான்றோர், `அடுத்தப் பிறவியில் நான் இப்படிப் பிறக்க வேண்டும்' என்று வேண்டுவதைவிட, `பிறவாத்தன்மை வேண்டும். உன்னடியில் நிரந்தரமாக இருக்க வேண்டும்' என்று பிரார்த்திக்கிறார்கள்.

போதிசத்துவர், ஒரு பிறவியில் காசியில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தார். அங்கே தெருவில் திரிந்துகொண்டிருந்த நான்கு பேர் மதுவின் அடிமைகளாக இருந்தார்கள்.

அவர்கள் ஒருநாள், போதிசத்துவரை உறங்க வைத்துவிட்டு, அவரிடமிருக்கும் செல்வங்களைக் கொள்ளையடிக்கலாம் எனத் ​தீர்மானித்தார்கள். தங்களிடமிருந்த மதுக்குடுவையில் கொஞ்சம் தூக்க மாத்திரைகளைக் கலந்தனர்.

அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதிசத்துவரை அணுகி, “ஐயா, இந்தக் குடுவையில் மிக உயர்ந்த வகை மது இருக்கிறது. அதை உங்களைப் போன்ற கனவான் குடிக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கிறோம்’’ என்றார்கள்.

போதிசத்துவர் மது அருந்துபவர் அல்லர். ‘இந்த நால்வரும் எதற்காகத் தன்னிடம் கருணை காட்ட வேண்டும்’ என்று யோசித்தார். இதில் ஏதோ ​தந்திரம் உள்ளது என்பதை உணர்ந்தார்.

எனவே அவர், “இப்போது அரண்மனைக்குச் செல்கிறேன். அரசரைச் சந்திக்கும்போது மது அருந்திவிட்டுச் செல்லக் கூடாது. எனவே, திரும்பி வரும்போது இந்த மதுவை அருந்துகிறேன்’’ என்றார்.

அதன்படியே அவர் திரும்பும்போது மீண்டும் மதுக்குடுவையை நீட்டி, “இந்தக் குடுவையில் உள்ள மது உங்களுக்காகக் காத்திருக்கிறது’’ என்றார்கள்.

அப்போது போதிசத்துவர் புன்னகைத்தார்.

“நான் உங்களை நம்பமாட்டேன். கண்ணாடிக் குடுவையில் உள்ள மதுவின் அளவு சிறிதும் குறையவில்லை. உண்மையில் இது சிறந்த மதுவாக இருந்திருந்தால், நீங்கள் கொஞ்சமாவது குடித்திருப்பீர்கள். எனவே, இதில் ஏதோ விஷமம் இருக்கிறது. நஞ்சுப்பொருள்கள்கூடக் கலக்கப் பட்டிருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

மோசடிப் பேர்வழிகள் ஏமாந்தனர்!

எவ்வளவு உயர்ந்த மதுவானாலும் அதை அருந்துவதை அறவே தவிர்ப்பதுதான் நல்லது. ஆனால், நாம் உட்கொள்ளவேண்டிய ஒன்றை, ருசிக்கவேண்டிய ரசம் ஒன்று உண்டு. நாமோ, அதை அருந்தாமலேயே இருக்கிறோம்!

ஆம்! ‘பிபரே ராமரசம்’ என்கிறார் தியாகராஜ சுவாமிகள். ஆனால், ராமநாமத்தை நாம் பருகுவது இல்லை. அப்படியே பருகினாலும், மேலோட்ட மாக நம் உதடுகள்தான் ‘ராம... ராம...’ என்கின்றன. நம் கை இயந்திரத்தனமாக ‘ஸ்ரீராமஜெயம்’ என்று எழுதுகிறது. நம் மனமோ உலக ஆசைகளில் அல்லவா ஆழ்ந்திருக்கிறது. இந்த நிலையிலிருந்து ​மாற வேண்டாமா?

- நினைப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism