Published:Updated:

நினை அவனை! - 23

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை! - 23

பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

Published:Updated:
நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

“கஸ்த்வம் கோஹம் குத ஆயாத

கா மே ஜனனீ கோமே தாத

இதி பரிபாவய னிஜ ஸம்சாரம்

சர்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்”

கருத்து : நீ யார்... நான் யார்... எங்கிருந்து வந்தோம்... என் தாய் யார்... என் தந்தை யார்... இந்த வினாக்களை எழுப்பிக் கொள். அப்போது, இந்த உலகம் சாரமற்றது என்றும், கனவு போன்றது என்பதும் தெரியவரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

த்யகாமன் என்ற சிறுவன் தன் தாய் ஜபாலாவை அணுகி ‘`அம்மா! நானும் மற்ற சிறுவர்களைப் போல ஒரு ரிஷியின் ஆசிரமத்துக் குச் சென்று பிரம்மசார்யாகக் குருகுலக் கல்வி பெற விரும்புகிறேன். அங்கு அவர்கள் ‘உனது கோத்திரம் என்ன?’ என்று கேட்பார்கள். நான் என்ன சொல்ல...’’ என்று வினவினான்.

நினை அவனை
நினை அவனை

ஜபாலா கலங்கினாள். காரணம், அவள் முன்னாளில் கணிகையாகத் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவள். அவள் தன் மகனை இறுக அணைத்துக்கொண்டு அன்புடன் சொன்னாள்.

‘`மகனே... நீ என்ன கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்பது எனக்குத் தெரியாது. என் இளமை காலத்தில் பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருந் தேன். நீ என்ன கோத்திரத்துக்கு உரியவன் என்பதை நான் தெரிந்துகொள்ளவில்லை. என் பெயர் ஜபாலா; உன் பெயர் சத்யகாமன். ஆகவே, உன்னை நீ ‘சத்யகாம ஜபாலான்’ என்று அறிமுகம் செய்துகொள்வாய்’’ என்றாள். அந்தச் சிறுவன் கௌதம ரிஷியிடம் சென்று, ‘`பிரம்மசார்யாக வசிக்க விரும்பி, தங்களிடம் வந்தடைந்தேன்’’ என்றான். எதிர்பார்த்தது போலவே அவர் அவனிடம், ‘`நீ என்ன கோத்திரத் தைச் சேர்ந்தவன்?’’ என்று கேட்டார்.

‘`ஐயனே! என் தாயிடம் இதைப்பற்றிக் கேட் டேன். அவள், தன் இளமையில் பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது என்னைப் பெற்ற தாகவும் அதனால் நான் எந்த கோத்திரத்துக்கு உரியவன் என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறிவிட்டாள். என் தாயின் பெயர் ஜபாலா; ஆகவே, நான் சத்யகாம ஜபாலன்; இதுவே எனது பெயர்’’ என்றான்.

கௌதமர் வியப்படைந்தார். என்றாலும் உண்மையை அவனும் அவன் தாயும் கூறியது அவர் மனத்தைக் குளிர்வித்தது. ‘`பிரம்மோபதேசம் விரும்புகிறவன் பின்பற்ற வேண்டிய முக்கிய தர்ம மாகிய சத்தியத்திலிருந்து விலகாமல், உள்ளதை உள்ளபடி கூறியதால், உன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார்.

`நான் யார்' என்ற கேள்விக் கான ஆரம்ப கட்டமே `என் தாய் யார், என் தந்தை யார்...' என்ற கேள்விகள். அவற்றையும் தாண்டி யோசித்தால், மேலும் பல உண்மைகள் புலப்படும்.

நினை அவனை
நினை அவனை

‘நீங்கள் யார்...’ என்று கேட்டால், உங்கள் பெயரைக் கூறுவீர்கள். ஆனால், அதுவல்ல நீங்கள். அதாவது கேள்வியை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள். ஒன்றைப் பற்றி நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை எனில், அதுபற்றி நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்றுதானே அர்த்தம்!

உலகில் பிற பொருள்கள், பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்குமுன் சுய ஆராய்ச்சி செய்து கொள்வது நல்லது. மனவியல் நிபுணர்கள்கூட இதைத்தான் கூறுகிறார்கள்.

‘`உங்களைப் பற்றிய மூன்று கோணங்கள் உண்டு. `நீங்கள் எப்படிப்பட்டவர்' என்பது குறித்து நீங்கள் ஒரு கருத்து வைத்திருப்பீர்கள். அது முதலாவது. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது குறித்த மற்றவர்களிடம் ஒரு கருத்து இருக்கும். அது இரண்டாவது. உண்மையிலேயே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது மூன்றாவது.’’

நினை அவனை
நினை அவனை

இந்த மூன்றாவது கோணத்தை அறிய வேண்டு மானால் முதல் இரண்டு கோணங்களிலுள்ள தவறுகளைக் களைய வேண்டும். அதற்கு மேற்படி கேள்விகள் உதவும். ஈசாப் கதையொன்றில் வரும் நீதி இது: ‘கேள்விகளை எழுப்பிக் கொள்ளுங்கள். இனிமையானதற்கு முதலிடம் கொடுக்க வேண்டாம். முதலில் கசப்பானதை அனுபவியுங்கள். பின்னர் இனிமை தானாகவே கிடைக்கும்!’

வணிகன் ஒருவன், தொலை​தூரத்தில் இருந்த சந்தைக்குச் சென்று நிறைய பொருள்களை வாங்கிவரத் திட்டமிட்டான். அதற்காக ஒரு மலையைக் கடந்து செல்லவேண்டிய நிலை. வணிகன், மூன்று அடிமைகளை வேலைக்கு அமர்த்திக்கொண்டான். ``ஆளுக்கு ஒரு மூட்டையை எடுத்துக்கொள்ளுங்கள்’' என்று அங்கிருந்த மூன்று மூட்டைகளைக் காண்பித்தான்.

அவற்றில் இரண்டு கிட்டத்தட்ட காலியாக இருந்தன. மூன்றாவது உணவு மூட்டை; மிகக் கனமாக இருந்தது. முதலில் சென்ற அடிமை உணவு மூட்டையை எடுத்துக் கொண்டான். மற்ற அடிமைகள் இருவரும் அவனைப் பார்த்துச் சிரித்தனர்.

“சரியான முட்டாள்! மிகக் கனமான மூட்டையைத் தூக்கிக்கொள்கிறானே’’ என்றனர். ஆனால் பயணம் செல்லச் செல்ல அந்த மூட்டையிலிருந்த உணவு கொஞ்சம் கொஞ்சமாகக் காலி யாகத் தொடங்கியது. மூட்டையின் கனமும் குறையத் தொடங்கியது. வழியிலும், சந்தையிலும் வணிகன் வாங்கிய பொருள்கள் மிகக் கனமானவை.

முதலாமவனை ஏளனம் செய்த அடிமைகள் இருவரும் அந்த மூட்டைகளைச் சுமந்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. கசப்பான விஷயத்தை அனுபவிப்பது ஏற்புடையதாக இருக்காதுதான். ஆனால், அதற்குப் பிறகு நடக்கவிருக்கும் நன்மைகளுக்கு அதுவே அடித் தளமாக அமையலாம்.

`நான் யார்' என்ற ​ஆராய்ச்சியில் இறங்குவது, தொடக்கத்தில் மனத்துக்கு உவப்பில்லாததாக இருக்கலாம். ஆனால், அதன் மூலம் பல மாயைகள் அறுபட்டுத் தெளிவு கிடைக்கும்.

கிரேக்க நாட்டில் டயோஜனஸ் என்ற தத்துவ வாதி ஒருவர் இருந்தார். எளிமையான வாழ்க்கை நடத்தினார் அவர். ஒருமுறை, செல்வந்தரான அஸ்டீபஸ் என்ற கவிஞர் அவரைக் காண வந்தார்.

“டயோஜனஸ் அவர்களே... நீங்கள் ஒருமுறை அரசரைப் பார்த்துப் புகழ்ந்து பேசுங்கள். பொன் பொருள் பரிசுகள் கிடைக்கும். நீங்கள் இப்படித் துன்பப்பட வேண்டாமே’’ என்றார் அஸ்டீபஸ்.

உடனடியாகப் பதிலளித்தார் டயோஜனஸ்.

“என்னைப்போல் நீங்களும் எளிய வாழ்வைப் பின்பற்றினால், நம்மைவிட அறிவில் குறைந்த வர்களைப் புகழ்ந்து பேசாமல் கம்பீரமாக வாழலாமே’’ என்றார்.

இதுவல்லவா ஞானம். டயோஜனஸ், தனது கடந்த காலத்தில் தன் மனத்தில் கேள்விகளை எழுப்பிக்கொண்டதால் உருவான ஞானம் அது!

- நினைப்போம்