மா குரு தன ஜன யௌவன கர்வம்

ஹரதி நிமேஷாத்கால ஸர்வம்

மாயா மயமித மகிலம் ஹித்வா

ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா

கருத்து : செல்வம், கல்வி, இளமை இவற்றில் எதனாலும் நாம் கர்வம் கொள்வது மடமை. ஒரு விநாடியில் இவற்றையெல்லாம் காலன் பறித்துக்கொண்டு விடலாம். இது மாயை என்பதைப் புரிந்துகொண்டு பிரம்மபதத்தில் கவனம் செலுத்துவதே நல்லது.

பணம் ஒரு சாதனம். அதைக் கொண்டு காமம் கொள்ளலாம்; தர்மமும் செய்யலாம். காமத்தை நோக்கி மனது தானாகவே ஓடும்; தர்மம் செய்யத்தான் மனதுக்குப் பயிற்சி தேவை. இதையே ‘அர்த்தம் அனர்த்தம்’ என்கிறார்கள்.

திருக்குறளிலும் அறம், பொருள்... அதன் பிறகே இன்பம்!திருநின்றவூரில் பிறந்தவர் பூசலார். சிவபக்தி மிக்கவர். சிவனுக்காக ஒரு கோயில் கட்ட ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் செல்வம் சிறிதும் இல்லை. பலரிடம் கேட்டுப் பார்த்தும் பொருள் சேரவில்லை. பின்னர், தன் மனத்திலேயே கோயில் கட்ட முடிவெடுத்தார். ஆலயம் கட்டத் தேவையான நிதி, சாதனங்கள் போன்றவற்றையும் சிற்பி, கைவினைஞர்கள் போன்றோரையும் தன் மனத்தில் வருவித்தார். அடிவாரம் முதல் கருவறை, தீர்த்த வடிகால், பிராகாரம், மதில், கோபுரங்கள் யாவற்றையும் முறைப்படி - ஆகமம் வழுவாமல், மானசிகமாகக் கட்டி முடித்து, கும்பாபிஷேகத்துக்காக ஒரு நாளும் பொழுதும் நிச்சயித்தார்.

அதே காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டி முடித்த அரசனும், பூசலார் குறித்த அதே நாள் மற்றும் பொழுதில் குடமுழுக்கு செய்ய நாள் குறித்திருந்தான். குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், இறைவன் அரசனுடைய கனவில் தோன்றினார்.

‘`நான், நாளை திருநின்றவூரில் பூசலார் கட்டியுள்ள கோயிலில் புகத் தீர்மானித்திருக்கிறேன். எனவே, நீ காஞ்சிக் கோயில் கும்பாபிஷேகத்துக்கு வேறொரு நாளை நிச்சயம் செய்’’ என்று அருள் செய்து மறைந்தார் ஈசன்.

வியப்புற்று எழுந்த அரசன், இறைவன் குறிப் பிட்ட அடியாரை நேரில் தரிசிக்க விரும்பினான். திருநின்றவூர் சென்று விசாரித்தான். ``அங்கே கோயில் எதுவும் புதிதாகக் கட்டப்படவில்லை'' என்றார்கள் ஊர் மக்கள். மன்னவன் பூசலாரிடமே கேட்டுவிடலாம் என்று அவரது இல்லத்துக்குச் சென்றான். பூசலார் முதலில் திகைத்தார். பின்னர் இறைவன் கருணையை எண்ணியெண்ணி வியந்தார். தாம் பக்தியோடு மனதில் கட்டிய திருக்கோயில் குறித்தே மன்னனின் கனவில் வந்து சொல்லியிருக்கிறார் ஈசன் என்று எடுத்துரைத்தார் பூசலார். மானசிக பக்தியின் மகிமையை உணர்ந்து மகிழ்ந்தான் மன்னன்.

உண்மை என நாம் நினைப்பது கற்பனையா கவும் கற்பனை, மாயை என நாம் நினைப்பது உண்மையாகவும் இருக்கக்கூடும். இந்த இரண்டின் வித்தியாசத்தை எளிமையாக ஆழமாக விளக்கும் ஒரு நிகழ்வு உண்டு.

வகுப்பாசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம் ‘`நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதைச் சோதித்துப்பார்க்கப் போகிறேன்” என்றபடி, ஒவ்வொரு மாணவனிடமும் ஒரு தாளைத் தந்தார்.

‘`இந்த அறையின் நீளம் எவ்வளவு. இதற்கானப் பதிலை எழுதுங்கள்’’ என்றார்.

சில நொடிகளிலேயே அனைவரும் விடைகளை எழுதித் தந்துவிட்டார்கள். அந்தத் தாள்களைப் பரிசீலித்தார் ஆசிரியர். பதினைந்து அடியிலிருந்து இருபது அடி வரை ஆளாளுக்கு ஓர் எண்ணை எழுதியிருந்தார்கள்.

ஆசிரியர் புன்னகைத்தார். ‘`நீங்கள் யாருமே உண்மையை எழுதவில்லையே’’ என்றார்.

மாணவர்கள் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக்கொண்டனர், ஒருவர் எழுதியதுகூடவா சரியில்லை எனும் சிந்தனையோடு.

`‘ஐயா, அப்படியானால் இந்த அறையின் உண்மையான நீளம்தான் என்ன’’ என்று கேட்டான் ஒரு மாணவன்.

“இந்த அறையின் நீளம் எனக்குத் தெரியாது. அதேபோல் உங்களுக்கும் தெரியாது. எனவே ‘எனக்குத் தெரியாது’ என்று எழுதியிருந்தால், அதுதான் உண்மை. அப்படி யாரும் எழுத வில்லையே’’ என்றார் ஆசிரியர்.

இதில் பொதிந்துள்ள உண்மையை உணர மறுப்பவர்களுக்கு, வேறொரு கதையின் மூலம் ஒரு கேள்வியை எழுப்ப விருப்பப்படுகிறேன்.ஒரு தேர்வில் ‘8 x 7 எவ்வளவு?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஆளுக்கொரு விடையை எழுதினார்கள். ஆனால் சரியான விடையான 56 என்பதை யாருமே எழுதவில்லை. அதற்காக 55 என்று விடை எழுதிய மாணவனுக்கு, ‘அவன்தான் இருப்பதிலேயே கிட்டத்தட்ட சரியான விடையை எழுதியவன்’ என்று முழு மதிப்பெண்ணைக் கொடுத்தால் எப்படியிருக்கும்!

அப்படித்தான் உண்மை போலத் தோற்றம் அளிப்பதை உண்மை என நம்புவதும்.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ் செல்வம்

போக்கும் அதுவிளிந்தற்று

- என்கிறது ஒரு திருக்குறள். அதாவது, ஒரு கேளிக்கை நிகழ்ச்சி அரங்கில் நடக்கும்போது, அதைப் பார்ப்பதற்குக் கூட்டம் வந்துசேரும். நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தக் கூட்டம் கலைந்து விடும். அதுபோலவே செல்வமும். செல்வம் எப்போது வேண்டுமானாலும் நம்மிடமிருந்து மறைந்துவிடலாம்.

தம்மபதம் எனப்படும் புத்தசமய நூல் இதை விரிவாகவே உணர்த்துகிறது. இதில் தம்ம முத்திரைகள் என்று மூன்றைக் குறிப்பிடுகிறார்கள். அவை :

1. உலகில் தோன்றுவன அனைத்தும் நிலையற்றவை. அவை கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டிருப்பவை. அவை அழிவுக்கு உட்பட்டவை.

2. உலகில் தோன்றுவன அனைத்தும் துக்கத் துக்கு ஆட்பட்டவை. திருப்தியின்மைக்கு உட்பட்டவை.

3. உலகில் தகாதகர்கள் (புத்தர்கள்) தோன்றி இந்த உண்மைகளைப் போதித்தாலும், போதிக்கா விட்டாலும் இவை மறுக்க முடியாதவை. நிலை நாட்டப்பட்டவை.

இதைவிட வேறென்ன விளக்கம் தேவை?

இதைத் தாண்டியும் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால், ஒரு மன்னனுக்கு நிகழ்ந்த அனுபவங்களை அறியலாம்.

அரசன் ஒருவனுக்கு மிகுந்த கவலை.

‘வேறு சில அரசாங்கங்களும், தேசங்களும் என்னுடையதைவிடப் பெரியதாக இருக்கின்றனவே. வேறுசில மன்னர்கள் என்னை விடவும் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்களே...’ என்று ஏங்கி வருந்தினான். இதனால் எழுந்த எண்ணங்கள் அவன் மன அமைதியைக் கெடுத்தன. விரைவில் படுத்தப் படுக்கையானான். மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

மன்னனைச் சோதித்துப் பார்த்த மருத்துவர், அவனைப் பீடித்திருப்பது மனநோய் என்பதைப் புரிந்துகொண்டார்.

‘`மிக மிக மகிழ்ச்சி கொண்ட ஒருவனின் மேலாடையை நீங்கள் ஒருநாள் முழுவதும் அணிந்துகொண்டால் உங்கள் நோய் நீங்கிவிடும்’’ என்றார்.

மன்னர் ஒப்புக்கொள்ள, அப்படியான ஒருவ னின் மேலாடையைக் கொண்டுவர எட்டுத் திக்குகளுக்கும் பறந்தனர் வீரர்கள்.

ஆனால் மக்களிடம் பிரச்னை கள் நிறைய இருந்தன. அவை சார்ந்த துக்கங்களும் அதிகம். மகளுக்குத் திருமணம், மகனின் கல்வி, மாமியார் கொடுமை, மருமகள் கொடுமை, ஆணவக் கணவன், அகங்கார மனைவி, குறைவான செல்வம், உடல் நோய் எனப்போன்ற பலவித காரணங்களால் அவர்கள் மகிழ்ச்சியின்றி இருந்தார்கள்.

நிறைய பணத்தையும், நகைகளையும் வீட்டில் வைத்திருந்தவர்கள், அவற்றைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டுமே என்று கவலைப்பட்டனர்!

நிறைவில் குடியானவன் ஒரு வனைக் கண்டார்கள். அவன் மட்டும் மகிழ்ச்சியாகக் காணப் பட்டான். ‘`உன் மேலாடையை மன்னனுக்குக் கொடு. எவ்வளவு தொகை தேவை என்றாலும் தருவார்’’ என்றனர் வீரர்கள்.

அந்தக் குடியானவன் வாய் விட்டுச் சிரித்தான்.

‘`மேலாடையா... அதெல்லாம் எனக்குக் கிடையாது. கோவணங்கள் மட்டுமே என் சொத்து’’ என்றான்.

விவரம் அறிந்ததும் மன்னன் யோசித்தான். ‘`என் செல்வங்கள் எல்லாம் என் மகிழ்ச்சிக்குப் பயன்படவில்லை. இனி, செல்வத்தில் பற்று வைக்காமல், நியாயமான ஆட்சியைச் செலுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன்'' என்று உறுதியேற்றான். அவன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாயிற்று.

- நினைப்போம்...