Published:Updated:

நினை அவனை! - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

காற்றைப்போலக் குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் அலைபாயும் மானிடனே... குடும்பம், செல்வம் இவை குறித்து மட்டுமே நீ சிந்திக்கிறாய்.

நினை அவனை! - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

காற்றைப்போலக் குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் அலைபாயும் மானிடனே... குடும்பம், செல்வம் இவை குறித்து மட்டுமே நீ சிந்திக்கிறாய்.

Published:Updated:
நினை அவனை
பிரீமியம் ஸ்டோரி
நினை அவனை

கா தே காந்தா தனகத சிந்தா

வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா

த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்கதி ரேகா

பவதி பவார்ணவ தரணே நௌகா

கருத்து : காற்றைப்போலக் குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் அலைபாயும் மானிடனே... குடும்பம், செல்வம் இவை குறித்து மட்டுமே நீ சிந்திக்கிறாய். அடக்கிக்கொள். பிறவிக்கடலைக் கடக்கும் படகு நல்லோர் கூட்டுறவுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறவிப் பெருங்கடலைத் தாண்ட உதவும் நல்லதொரு தோணி போன்றது, நல்லோரின் உறவு. கடலில் தோணியில் பயணிக்கும்போது, அலைகளால் ஏற்படும் அதிர்வுகளை, அதுவே பெரும்பாலும் தாங்கிக்கொள்ளும். அதுபோன்றதே நல்லவர்களின் கூட்டுறவும். நமக்கு நேரக்கூடிய இன்னல்களில் பெரும்பகுதியை ஒரு கேடயம் போல இருந்து அவர்கள் தாங்கிக்கொள்கின்றனர். நல்லோர் கூட்டுறவால் இறைவனை அடைய முடியும். இதுபற்றி, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சுவையாக விளக்குவார்.

நினை அவனை! - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

‘`உலகப் பொருள்கள்மீது சிறிதளவு பற்று இருந்தாலும் ஆண்டவனுடைய காட்சி கிட்டாது. தீக்குச்சி ஈரமாக இருக்கும்போது, ஆயிரம் முறை கிழித்தாலும் பற்றாது; பல குச்சிகள் வீணாகும். உலகப்பற்றுகொண்ட மனம், ஈர நெருப்புக்குச்சியைப் போன்றது” என்பார் அவர்.

மேலும் சத்சங்கத்தின் மகிமைகளைக் குறித்துக் கூறும்போது, ``ராதை, ‘நான் எல்லாவற்றையும் கிருஷ்ணமயமாகப் பார்க்கிறேன்’ என்று சொன்ன போது, ‘நாங்கள் அப்படிக் காணவில்லையே! என்ன உளறுகிறாய்’ என்றனர் தோழிகள்.

``தீக்குச்சி ஈரமாக இருக்கும்போது, ஆயிரம் முறை கிழித்தாலும் பற்றாது; பல குச்சிகள் வீணாகும். உலகப்பற்றுகொண்ட மனம், ஈர நெருப்புக்குச்சியைப் போன்றது”.

அதற்கு ராதை, ‘தோழிகளே, கண்ணில் பக்தி எனும் மையைத் தீட்டிக்கொண்டு பாருங்கள். அப்போது காண முடியும்’ என்று சொன்னாள். இதற்காகத்தான், நாம் சிறிது முயற்சி செய்தாவது சத்சங்கத்தில் ஈடுபட வேண்டும். குடும்பத்தில் எப்போதும் லௌகீகப் பேச்சுக்குத்தான் இடம் இருக்கிறது. இந்த நோய் சதாகாலமும் இருந்து கொண்டேயிருக்கும். ராம பக்தனின் வீட்டில் வளரும் கிளி, கூண்டில் இருந்தாலும் ‘ராம்... ராம்...’ என்று சொல்கிறது. ஆனால், அதுவே காட்டில் பறந்து செல்லத் தொடங்கும்போது ‘கீ...கீ...’ என்று முன்போலவே கத்த ஆரம்பித்துவிடும்’’ என்று விளக்குவார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

மாயையின் வசப்படும்போது பலவித விபரீதங்கள் நடக்கின்றன. இதைப் பின்வரும் கதை விளக்கும்.

விளக்கு ஒன்று கண்ணாடிக் கூண்டுக்குள் எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கமாக வந்த ஒருவர் “விளக்கின் ஒளியை இந்தக் கண்ணாடிக் கூண்டு குறைத்துவிடுகிறது’’ என்று கூறியபடி, நகர்ந்தார். இதைக்கேட்ட விளக்கு கடும் கோபத்தோடு கண்ணாடிக் கூண்டிடம், ‘`நீ இல்லாவிட்டால் என் ஒளி மேலும் அதிகமாக இருக்கும். பலருடைய பாராட்டுகளைப் பெற்றிருப் பேன். உன் காரணமாக என் புகழ் குறைகிறது’’ என்றது.

“ஓ! உனக்கு அப்படி ஓர் எண்ணம் வந்து விட்டதா... நான் செல்கிறேன்’’ என்றபடி அங்கிருந்து நகர்ந்தது கண்ணாடிக் கூண்டு.அப்போது பலமாக காற்று வீசியது. அடுத்த நொடியே விளக்கு அணைந்தது.

பாதுகாப்பான கண்ணாடிக் கூண்டைத் தனக்கு இடைஞ்சலாகக் கருதியது விளக்கு. இதுதான் மாயை. மாயையின் விளைவாக பிணக்கு ஏற்பட்டது; கண்ணாடிக் கூண்டு விலகியது. மாயையின் காரணமாக விளக்கே அணைந்துவிட்டது.

பாதுகாப்பு என்பது ‘பரமனின் பாதம்’ எனும் கூண்டு. நம்மில் பலரும் அ​தன் அருமையை அறியாதவர்களாகவே இருக்கிறோம். ‘எனக்கு இறைவனின் அருமை புரிகிறது’ என்பவர்களும் அடிக்கடி மாயையின் வசம் ஆட்படுகிறார்கள். ஆன்மாவைவிட உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பத்ரகிரி என்ற சித்தர் இப்படி ஆதங்கப்படுகிறார்:

‘தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல் உடக்கைக் கழற்றி உனை அடைவது எக்காலம்’.

`இந்தப் பூத உடல் நிலையானது என்று நினைத்து அலைபாய்கிறோம். குடும்பத்துக்கு நல்லது என்று எண்ணி பலவற்றையும் சேர்க்கிறோம். இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இறைவனை அடைவது எப்போதோ' என்கிறார் அவர். ஆனால், சரியான சிந்தனை என்பது நமக்கு உண்டாக வேண்டுமே! ஒருவேளை, சரியான சிந்தனை உண்டானாலும் குரங்கு மனம் காரணமாக அது எப்படியெல்லாம் சீர்கெட்டுப் போகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

நினை அவனை! - 13 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்

குறிப்பிட்ட கடற்பகுதியில் கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாயின. அருகிலிருந்த தீவுவாசிகள், விபத்துகளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

ஆகவே, தீவின் ஓரத்தில் கூடாரம் அமைத்து அதில் விபத்துக்குள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். கப்பல்களுக்கு விபத்து ஏற்பட்டால், உடனடியாக படகில் பயணித்து கப்பலை நெருங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கூடாரங்களுக்குக் கொண்டுவந்து சிகிச்சை அளித்தார்கள்.

அதனால் பிழைத்தவர்கள், தீவுவாசிகள் செய்த உதவி குறித்துப் பெருமையாகப் பேசினார்கள். இதுபற்றி கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து ஊர்க் காரர்கள், தீவுவாசிகளின் பணியில் தங்களை இணைத்துக்கொண்டனர். புதிதாக படகுகள் வாங்கப்பட்டன. சிகிச்சைக் கூடாரமும் பெரிய கட்டடமானது.

நாளடைவில் கப்பல் விபத்துகள் அரிதாயின. பல நாள்கள், அங்கிருந்தவர்களுக்கு வேலை இல்லாத நிலை. ஆகவே, வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். நாளடைவில் கப்பல் விபத்து நடந்தபோதும், அரைகுறை மனத்துடனேயே மீட்புப் பணியைச் செய்தார்கள். ஆனால், அவர்களிலும் சிலர் சிரத்தையை விட்டு விடவில்லை. அவர்கள் தனியே பிரிந்து சென்று பணியைத் தொடர்ந்தார்கள்.

காலப்போக்கில் அவர்களின் புகழ் பரவவே, வெளிநாடுகளிலிருந்து பலரும் வந்து அவர்களோடு சேர்ந்தார்கள். நாளாக நாளாகப் பழைய கதை அங்கும் தொடங்கியது. ஒருகட்டத்​தில் கப்பல் விபத்துகள் நடந்துகொண்டேயிருக்க, தீவிலுள்ள அனைவரும் களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்படித்தான் பேரின்பத்தை மனத்தில் தேக்கி இறைவனை நாடத் தொட​ங்கும் மனிதன், மீண்டும் மீண்டும் பணம், குடும்பம் என்று சிற்றின்பங்களில் ​மூழ்கிவிடுகிறான். நல்லோர்களின் நட்பும் ஒருமித்த மனமும் தொடர்ந்து இருக்கும்போதுதான் பிறவிக் கடலைத் தாண்ட முடியும்.

- நினைப்போம்...