Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 2 | எளியவர்களுக்கு உதவுவதே இறைப்பணி | வியக்க வைக்கும் கண்ணகி நகர் சுந்தரம் ஐயா!

சுந்தரம் ஐயா
சுந்தரம் ஐயா

அதிலும் வறுமையும் அறியாமையும் இணைந்து, வாட்டி வதைக்கும் எளிய மக்களுக்காக வாழ்ந்து, அவர்களைக் கரைசேர்த்துவிடும் அடியார்கள் தொண்டு மகத்தானது. அந்த மாமனிதர்கள் வரிசையில் நாம் காண இருப்பவர் சுந்தரமய்யா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனிதருக்குள் எந்த பேதமும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறது நம் தர்மம். ஆதிசங்கரரை ஓர் எளிய மனிதராக வந்து ஆட்கொண்ட சிவபெருமான், ஆரூரில் பிறந்த அனைவருமே சிவகணத்தார் என்று நமிநந்தி அடிகளுக்கு எடுத்துச் சொன்ன தியாகராஜ பெருமான், நீலகண்ட யாழ்ப்பாணருக்கு பலகை இடச் சொன்ன ஆலவாயப் பெருமான், திருநாளைப் போவாரை மரியாதையோடு தில்லைக்குள் அழைத்த நடராஜர் என ஆயிரம் ஆயிரம் நிகழ்வுகள் மூலம் பிறப்பால் பேதமில்லை என்று சிவம் உணர்த்திய லீலை அநேகம்

`உன்னுள்ளும் என்னுள்ளும் நிறைந்திருக்கும் ஈசனே, சகல ஜீவராசிகளிலும் உறைந்திருக்கிறான்' என்பதை உணர்வதுதான் ஆத்மார்த்த தரிசனம். அதிலும் வறுமையும் அறியாமையும் இணைந்து, வாட்டி வதைக்கும் எளிய மக்களுக்காக வாழ்ந்து, அவர்களைக் கரைசேர்த்துவிடும் அடியார்கள் தொண்டு மகத்தானது. அந்த மாமனிதர்கள் வரிசையில் நாம் காண இருப்பவர் சுந்தரமய்யா!

சுந்தரம் ஐயா
சுந்தரம் ஐயா

சென்னை, கண்ணகி நகர்... எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதி. இங்கேதான் பாவங்கள் முற்றிலுமாக அகல அருள்புரியும் மத்திய காசி விஸ்வநாதர் ஆலயம் இருக்கிறது. படித்தவர்களும் பெரியவர்களும் இருக்கும் பகுதிகளைவிட ஏழ்மையும் எளிமையும் நிலவும் இங்கேதான் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஈசனும் விரும்பினார்போலும்... விஸ்வநாதர் ஆலயம் பிரமாண்டமாக எழுந்துவிட்டது.

அந்த ஆலயம் குறித்தும், அந்தப் பகுதியில் வசிக்கும் `சுந்தரம் ஐயா' என்ற மகா புருஷரைப் பற்றியும் கேள்விப்பட்டு, ஒருநாள் கண்ணகி நகருக்குள் நுழைந்தோம். வட இந்திய பாணியில் உருவாக்கப்பட்டிருந்த ஈசன் கோயில் நம்மை மலைக்கவைத்தது. கைகூப்பி கோபுரத்தை வணங்கினோம். இந்த ஆலயத்தைக் கட்டி அங்குள்ள மக்களை ஆன்மிக வழிக்குத் திரும்பியவர் சுந்தரம் ஐயா.

சுந்தரம் ஐயா
சுந்தரம் ஐயா

ஆலயத்தை உருவாக்கியது, பூசைகள் செய்வதெல்லாம்கூட தனக்கு இரண்டாம் பட்சம்தான் என்று கூறும் சுந்தரம் ஐயா, இங்கிருக்கும் ஆண்களில் பலர் மது, போதைப் பழக்கங்களில் விழுந்துகிடந்தார்கள். அவர்களை, மெள்ள மெள்ள அவற்றிலிருந்து மீட்டு வந்ததுதான் நாங்கள் ஆற்றிய முக்கியமான சேவை என்று தோன்றுகிறது. சக மனிதர்களை நேசிப்பதும், வழிகாட்டுவதும்கூட சிவபூஜைக்கு சமமே. இப்படி இந்த ஆலயத்துக்கு வந்து, மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் எத்தனையோ பேர் என்கிறார். தினமும் பகல் ஒரு மணிக்கு ஆலயத்தில் அன்னதானம் அளிக்கிறார்கள். எந்த வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான ஆலயத்தின் பிற சிறப்புகளையும் அங்கு தொண்டு செய்யும் நல்ல உள்ளங்களைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு