திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

சேஷ தீர்த்தத்தில் பால், வெல்லம் சமர்ப்பணம்!

ஶ்ரீஹயக்ரீவர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீஹயக்ரீவர்

கே.லட்சுமிதேவி

திருவகீந்திரபுரம் என்று அழைக்கப்படும் திருவந்திபுரத்தில் அருளும் பெருமாள் திருப்பதி வேங்கடவனின் அண்ணன் என்று கருதும் வழக்கம் உள்ளதால், திருப்பதிக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இங்கு செலுத்தலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பெருமாள் கோயில்களை இடித்துவிடும் நோக்கத்துடன் வந்த மன்னன் ஒருவன், ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் 'இது என்ன கோயில்' என்று கேட்டான். அந்த மன்னன் குறித்து அறிந்திருந்த சிறுவர்கள், `இது சிவன் கோயில்' என்று சொன்னார்களாம். ஆனாலும் சந்தேகம் தீராத மன்னன் உள்ளே சென்று பார்த்தபோது வில்வமரத்துடன் சிவனாகவே காட்சி கொடுத் தாராம் பெருமாள். ஹரியும் சிவனும் ஒன்று அல்லவா!

சேஷ தீர்த்தத்தில் 
பால், வெல்லம் சமர்ப்பணம்!

இந்த ஆலயத்தின் பிராகாரத்தில் ஒரு புன்னை மரத்தின் வேரில் இருந்து கிடைக்கப்பெற்ற மூர்த்தங்களில் நம்மாழ்வார் மூர்த்தமும் ஒன்று. அதனால் இந்தத் தலத்தில் இரு நம்மாழ்வார் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன.

ஶ்ரீதேசிகன் சுவாமிகள் வாழ்ந்த திருமாளிகை இன்றும் அங்கு உள்ளது. அங்குள்ள திருக்கிணறு சந்நிதியில் சேவை சாதிக்கும் திருமேனிகள் ஶ்ரீதேசிகரின் திருக்கரங்களாலேயே அமைக்கப்பட்டவை என்னும் பெருமையை உடையன.

இங்குள்ள ஶ்ரீசேஷ தீர்த்தத்தில் பால், வெல்லம், உப்பு ஆகியவற்றைச் சமர்ப்பிக்கும் வழக்கம் பக்தர்களிடையே உள்ளது. இவ்வாறு செய்வதால் பிணி களிலிருந்து நிவாரணம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இத்தலத்தில் ஶ்ரீஹயக்ரீவர் எழுந்தருளியிருக்கும் மலைக்குச் செல்ல மொத்தம் 74 படிகள் அமைந்துள்ளன. இந்த74 என்கிற எண்ணிக்கை ஶ்ரீபாஷ்யக்காரர் என்று போற்றப்படும் ராமாநுஜரின் 74 சிம்ஹாசனாதிபதிகளைக் குறிக்கும் என்கிறார்கள் அடியவர்கள்.

அக்கின் நாயக்கர் என்கிற பாளையக்காரர் இந்த மலைக்காட்டில் மறைந்திருந்து, தம்மைக் காப்பாற்றுமாறு இத்தல இறைவனை வேண்டிக்கொண்டார். பெருமாளின் அருளால் அவருக்கு விரைவில் தொல்லைகள் நீங்கின. அந்த நன்றிக்காக அவர் பெருமாளுக்கான நித்திய ஆராதனத்தும், மாசி மக கருடோத்சவத்துக்கும் அநேக நிலங்களை மானியமாக அளித்தார் என்கிறது தலவரலாறு.