Published:Updated:

ஸ்ரீராமனின் நாமங்கள்!

ஸ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராமன்

துக்கத்தை நாசம் செய்ததால், ‘துக்கநாசக ராமன்.’

ஸ்ரீராமனின் நாமங்கள்!

துக்கத்தை நாசம் செய்ததால், ‘துக்கநாசக ராமன்.’

Published:Updated:
ஸ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராமன்

ஸ்ரீமந் நாராயணனின் பல்வேறு அவதாரங்களில் மிகவும் சிறப்பானது ராமாவதாரம். சித்திரை மாதத்தில் சுக்லபட்சத்தில் நவமி திதி கூடிய புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீராமர் அவதரித்தார்.

வாழ்க்கையின் உதாரண புருஷனான ஸ்ரீராமனை சீதாராமன், ஜயராமன், கல்யாணராமன், ஜானகிராமன் என்றெல்லாம் அழைத்து வழிபடுகிறோம் நாம். நமக்குத் தெரியாத வேறு சில அபூர்வப் பெயர்களும் ஸ்ரீராமனுக்கு உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ரீபவித்ர ராமன்: இந்திரனால் களங்கப்பட்டு, கௌதம முனிவரின் சாபத்தால் கல்லான அகலிகை, ஸ்ரீராமனின் காலடி பட்டு சாபவிமோசனம் பெற்றாள். அந்த ரிஷி பத்தினியை புனிதவதியாக்கி அருள் செய்ததால் ராமன், ‘பவித்ர ராமன்’ ஆனார்.

ஸ்ரீஉதாரகுண ராமன்: தசரதரின் சொற்படி (சீதா, லட்சுமணனுடன்) கானகம் சென்று, பெருந்தன்மையின் இலக்கணமாக விளங்கியதால், ‘உதாரகுண ராமன்’.

ஸ்ரீபரதவத்ஸல ராமன்: தன்னைத் தேடிக் காட்டுக்கு வந்த தம்பி பரதனின் விருப்பத்துக்கு இணங்கி, அவனிடம் தனது பாதுகைகளை அளித்த சகோதர பாசத்தினால் ‘பரதவத்ஸல ராமன்’.

ஸ்ரீபராக்கிரம ராமன்: பஞ்சவடி பர்ணசாலையில் அரக்கர்களான கரன், தூஷணன், திரிசரன் ஆகியோரையும் அவர்களின் படைகளையும் அடியோடு அழித்த பராக்கிரமச் செயலால், ‘பராக்கிரம ராமன்’.

ஸ்ரீமோட்ச பலபிரத ராமன்: சுக்ரீவனுக்காக வாலியைக் கொன்றபோது, ‘ராம’ நாமத்தை உச்சரித்து ஸ்ரீராமனின் அருளைப்பெற்றான் வாலி. இவ்வாறு அடியார்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அருளியதால், ‘மோட்ச பலபிரத ராமன்’.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீதாரக நாம ராமன்: ராவணனால் வெட்டப்பட்ட இறக்கைகளை ராமநாம மகிமையால் மீண்டும் பெற்ற ஜடாயுவின் அண்ணன் சம்பாதி, வானர வீரர்களுக்கு சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார். எல்லோரும் உய்யும் ராமநாமத்தால், ‘தாரக நாம ராமன்’.

ஸ்ரீராமன்
ஸ்ரீராமன்

ஸ்ரீதுக்கநாசக ராமன்: அசோக வனத்தில் சீதை சிறைப்பட்டிருந்தபோது, ராமனின் கணையாழியைக் கொடுத்த அனுமன், ஸ்ரீராமன் சொன்ன நல்ல செய்தி களையும் தெரிவித்தார். கணையாழியைக் கண்ட சீதை, கணவனையே நேரில் கண்டதைப் போல் மகிழ்ச்சியால் தனது துக்கத்தை மறந்தாள். இவ்வாறு துக்கத்தை நாசம் செய்ததால், ‘துக்கநாசக ராமன்.’

ஸ்ரீகருணாகர ராமன்: போரில் ராவணன் நிராயுத பாணியாக நின்றபோது, ‘இன்று போய் நாளை வா!’ சொல்லி அருள்பாலித்ததால் ‘கருணாகர ராமன்’.

ஸ்ரீசரணாகத ரட்சக ராமன்: சீதையை ராமனிடம் ஒப்படைக்குமாறு ராவணனிடம் வேண்டினான் விபீஷணன். அதனால் கோபம் அடைந்த ராவணன் அவனை, நாட்டைவிட்டு வெளியேறுமாறு கட்டளை இட்டான். அதனால் விபீஷணன் தன் நான்கு அமைச்சர்களுடன் ராமனைச் சரணடைந்தான். பகைவனின் தம்பியையும் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டதால், ‘சரணாகத ரட்சக ராமன்’.

- கே.என்.மகாலிங்கம், பாண்டிச்சேரி-4

`கிரகண' காலத்திலும் திறந்திருக்கும் கோயில்!

`கிரகணக் காலத்தில் கோயில்களில் பூஜைகள் நடத்தக்கூடாது' என்பது விதி. ஆனால், கிரகண நேரத்தில் திறந்திருக்கும் கோயில் ஒன்றும் உள்ளது. கர்ப்பிணிகளும் அந்த நேரத்தில் அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். கும்பகோணம் அருகிலுள்ள திருநாறையூர் சிவன் கோயில்தான் அது. சனி பகவான், மனைவி, குழந்தைகளுடன் குடும்ப சமேதராக அருள்பாலிக்கும் அற்புதக் கோயில் இது!

- மேவானி கோபாலன், கும்பகோணம்.

அரச மரம்... மகா புண்ணியம்!

மும்மூர்த்திகளின் வடிவமாகக் கருதப்படும் அரச மரத்தைக் காலை வேளையில் வலம் வந்தால் சகல நலன்களும் பெறலாம். அரச மரத்துக்கு வடமொழியில் ‘அஸ்வத்த விருட்சம்’ என்று பெயர். அமாவாசை திதியுடன் இணைந்த திங்கள்கிழமையில் அரச மரத்தை வலம் வந்து வணங்குவது, மிகவும் புண்ணியம் தரும்.அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறு நாளுக்குள் அழிந்துவிடும். அரச மர நிழல் படும் நீர் நிலைகளில் வியாழன் மற்றும் அமாவாசை நாள்களில் நீராடுவது, பிரயாகை - திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்!

- குமார், மதுராந்தகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism