Published:Updated:

கேட்காமலேயே கொடுக்கும் தெய்வம் பாபா

பாபா
பிரீமியம் ஸ்டோரி
பாபா

வாசகர் அனுபவம்

கேட்காமலேயே கொடுக்கும் தெய்வம் பாபா

வாசகர் அனுபவம்

Published:Updated:
பாபா
பிரீமியம் ஸ்டோரி
பாபா

பாபாவை வணங்கினால் நம் தேவைகளை நாம் கேட்காமலேய அவர் நிறைவேற்றுவார். கேட்டுவிட்டால் கட்டாயம் ஆசீர்வதிப்பார்.

என் சகோதரி ஒருத்தி தர்ம புரியில் வசித்து வந்தாள். அவள் மகன் பெயர் ஹரிஷ். அவனுக்குச் சிறுவயதில் ஏற்பட்ட போலியோ தாக்குதலால் கால்கள் செயலிழந்த நிலையில், சிறப்பு ஷூ போட்டுக் கொண்டுதான் மெள்ள நடப்பான்.

கேட்காமலேயே கொடுக்கும் தெய்வம் பாபா

அவன் பத்தாவது படிக்கும் போதே அவனது தாய் விபத்தில் இறந்துவிட்டார். அவன் தன் சொந்த முயற்சியில் எம்.எஸ்ஸி வரை படித்து அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ளான். அவனுக்கு நெடுநாள்களாக பெண் தேடிக் கொண்டிருந்தோம்.

ஒரு நாள் பாபாவின் சிறிய படம் ஒன்று என் கையில் கிடைத்தது. நான் அந்தப் படத்தில் உள்ள பாபாவின் கண்களையே உற்று நோக்கினேன். அவரின் காருண்யம் மிக்க விழிகள் என்னை என்னவோ செய்தன.

என் மனதின் பாரத்தை எல்லாம் அவர் பாதத்தில் இறக்கிவைக்க முயன்றேன். `பாபா! அந்தப் பையன் சிறு வயதிலிருந்தே மிகவும் துன்பப்பட்டுவிட்டான். இனியாவது அவன் வாழ்வில் நல்லவை நடக்கட்டும். அவனுக்குத் திருமணம் செய்து வைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். அதற்கு நீங்கள் ஆசி கூறுங்கள்' என மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.

மனதின் பாரம் குறைந்ததுபோல் இருந்தது. சரியாய் ஒரு வாரத்தில் என் சகோதரியின் மகனிடம் இருந்து செய்தி வந்தது. `ஒரு நல்ல இடத்தில் நிச்சயமாகிவிட்டது' என்று சொன்னான். இதைக் கேட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாபாவின் முன் போய் நின்று என் நன்றியைச் சொன்னேன்.

அவன் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தற்போது இரண்டு பெண் குழந்தை களின் தந்தை அவன். பாபாவை வணங்கினால் நம் தேவைகளை நாம் கேட்காமலேய அவர் நிறைவேற்றுவார். கேட்டுவிட்டால் கட்டாயம் ஆசீர்வதிப்பார்.

- வி.ஷீலாதேவி