Published:Updated:

ஶ்ரீ சாயி வாசகர் அனுபவம்

ஷீர்டி சாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
ஷீர்டி சாயிபாபா

ஷீர்டி சாயிபாபா

ஶ்ரீ சாயி வாசகர் அனுபவம்

ஷீர்டி சாயிபாபா

Published:Updated:
ஷீர்டி சாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
ஷீர்டி சாயிபாபா

அருள் செய்தார் பாபா!

ஷீர்டி சாயிபாபா தன் அடியவர்களின் வாழ்வில் பல அற்புதங்களைப் புரிந்து வருகிறார். “என் முன்னர் பக்தியுடன் உங்களது கரங்களை நீட்டுவீர்களானால் இரவும் பகலும் உங்களுடன் கூடவே நான் இருக்கிறேன்” என்பது பாபாவின் அருள்மொழி. இதை மெய்ப்பிக்கும் வகையில் நிகழ்ந்த அற்புதம் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஷீர்டி சாயிபாபா
ஷீர்டி சாயிபாபா


கடந்த மே மாதம் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அப்போது ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி இல்லாததால் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தனர். அத்தோடு நெருங்கிய நண்பர்கள் சிலர் கொரோனாவால் இறந்த செய்தி வேறு அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலைமையில் என் மகளுக்கும் அடுத்து எனக்கும் பின் என் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அப்போது இங்கு நிலவிய மோசமான சூழ்நிலையில் வெளியே செல்லவே பயமாக இருக்க நாங்கள் எங்கள் தெய்வமான சாயிபாபாவை முழுமையாகச் சரணடைந்தோம். பாபாவின் உதியை (விபூதி) மருந்தாக நீரில் கரைத்து தினமும் நம்பிக்கையுடன் குடித்து வந்தோம். மேலும் எங்களின் குடும்ப ஹோமியோ டாக்டர் அனுப்பிய மருந்தையும் எடுத்துக் கொண்டபோது காய்ச்சல் குறையத் தொடங்கியது. ஆனால் கொரானாவின் தாக்கத்தால் மிகவும் பலவீனமானோம். சிறிது நடந்தாலும் எனக்கும் மனைவிக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. யாரையும் உதவிக்குக் கூப்பிட முடியாத நிலை.

‘பாபா நீங்கள் தான் காத்தருள வேண்டும்' என மனதாரப் பிரார்த்தனை செய்தேன். என்ன ஆச்சர்யம்... எதேச்சையாக அந்த நேரத்தில் நண்பரின் மகள் ஒருவர் எங்களைத் தேடிவந்தார். அவளும் பாபா பக்தைதான். எங்கள் நிலைமையைப் பார்த்தவள் உடனே அவள் பெற்றோர்களிடம் தெரிவிக்க, அன்றிலிருந்து எங்களுக்குத் தேவையான மருந்துகள், சத்தான உணவுகள் எனத் தொடர்ந்து பதினைந்து நாள்கள் சலிக்காமல் அனுப்பி உதவி செய்தனர். பின் கருணைக் கடலான பாபாவின் அருளால் முழுமையாக குணம் அடைந்தோம்.

- ராதா கிருஷ்ணன், ஹைதராபாத்

முதல் தரிசனம்!

சாயி பாபாவைப் பற்றி எனக்குத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் தான் தெரியும். அவர் ஆலயம் சென்று தரிசனம் செய்ததே இல்லை. எப்போதாவது வாய்ப்புக் கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். ஆனால் அவ்வப்போது மனதில் பாபாவை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன்.

அப்போதுதான் எனக்கு 3 பேர் அறிமுகம் ஆனார்கள். அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என் மகள் வீடு பெங்களூருவில் இருக்கிறது. அங்கு இவர்கள் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்களில் ஒருவர், "ஷீர்டி பாபா தரிசனம் செய்து இருக்கீங்களா?" என்று கேட்டார். நான், "இல்லை, ஆசை உண்டு. ஆனால் இதுவரை வாய்ப்புக் கிடைக்கவில்லை" என்று சொன்னேன்.

அடுத்த நிமிடம், "அடுத்த மாதம் நாங்கள் ஒரு குழுவாக ஷீர்டி போகிறோம். உங்களால் வரமுடியுமா?" என்று கேட்டார். எனக்கு ஷீர்டி பாபாவே என்னை அழைப்பதுபோல் மனதில் தோன்றியது. உடனே சரி என்றேன். நானும் என் குடும்பத்தினர் நால்வரும் அவர்களோடு ஷீர்டி சென்று வந்தேன்.

அந்த மூன்று நண்பர்களும் ஆண்டுதோறும் இப்படி அநேக பக்தர்களை ஷீர்டி அழைத்துச் செல்வது உண்டாம். ஷீர்டிநாதனை தரிசனம் செய்த பாக்கியமும் இப்படிப்பட்ட நல்லவர்களின் நட்பும் எனக்குக் கிடைத்தது. இப்போது என் வாழ்வில் எல்லாம் பாபா மயம்.

- ஆ. சிவசூரியன், தூத்துக்குடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism