`பாபா மாமி’ ரமா சுப்ரமணியன்

கலியுகத்தில் எண்ணற்ற பக்தர்களுக்குக் கண்கண்ட தெய்வமாய்த் திகழும் ஷீர்டி ஸ்ரீசாயிபாபாவுக்கு உகந்த தனித்துவம் மிக்க வழிபாடு ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை. பாபாவை தரிசிக்க ஷீர்டிக்குச் செல்லும் பக்தர்கள், அங்கு நடைபெறும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு பூஜிப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள்.

புராணங்களும் ஞானநூல்களும் போற்றும் ஸ்ரீசத்யநாராயண பூஜையின் அடிப்படையிலேயே ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் முதலில் சத்யநாராயண பூஜையின் மகிமையைத் தெரிந்துகொள்வோம்.

ஸ்ரீசத்யநாராயண பூஜை மகிமை!

த்யாயேத் சத்யம் குணாதீதம் குணத்ரய சமன்விதம்

லோகநாதம் த்ரிலோகேஷம் கௌஸ்துபாபரணம் ஹரீம்

நீலவர்ண பீதவஸ்த்ரம் ஸ்ரீவத்ஸபாதபூஷிதம்

கோவிந்தம் கோகுலானந்தம் ப்ரம்மாத்யைரபி பூஜிதம்

சத்தியத்தைக் குணமாக உடையவரும், அனைத்துக் குணங்களையும் சமநிலையில் காண்பவரும், லோகநாதரும், மூன்று உலகங்களின் அதிபதி ஆனவரும், கௌஸ்துப மணியை ஆபரணமாக தரித்தவருமான ஸ்ரீஹரியே உம்மைத் துதிக்கிறோம்.

நீலவர்ணத்தை உடையவரே, பீதாம்பர வஸ்திரத்தை இடையில் தரித்தவரே, ஸ்ரீவத்ஸம் அலங்கரிக்கும் உன் பாதங்களை வணங்கு கிறோம். கோவிந்தரே, பிரம்மதேவரும் வணங் கும் கோகுலநந்தரான உம்மை வணங்குகிறோம்.

இவ்வாறு ஸ்ரீசத்யநாராயணரின் மகிமை யைப் போற்றுகிறது அவருக்கான தியான ஸ்லோகம்.

பொதுவாக பூஜை வழிபாடுகளைக்குறித்த விவரங்களை, ரிஷிகள் மற்றும் குருமார்களின் மூலம் நாம் அறிந்துகொள்வோம். ஆனால், ஸ்ரீசத்யநாராயண பூஜையின் மகிமைகளை ஸ்ரீமந் நாராயணரே நாரதர் மூலம் இவ்வுலகுக்கு அருளியதாக ஞானநூல்கள் சொல்கின்றன. இறைவனால் நேரிடையாக அறிவிக்கப்பட்ட காரணத்தால், பெரும் மகத்துவம் பெற்றுத் திகழ்கிறது ஸ்ரீசத்யநாராயண பூஜை.

இந்த வழிபாட்டுக்கான கரு, புண்ணிய க்ஷேத்திரமான நைமிசரண்யத்தில் உருவானது. இந்தத் தலத்தில் ஒருமுறை முனிவர்கள் ஒன்றுகூடி உலக நன்மைக்காக மிகப்பெரிய யாகம் வளர்த்தனர். அந்தப் பணி நிறைவேறி யதும் நாரதர் மூலம் அருளப்பட்ட ஸ்ரீசத்ய நாராயண வழிபாட்டின் வரலாற்றை அங்கு இருந்த அனைவருக்கும் எடுத்து உரைத்தனர்.

இந்தக் கலியுகத்தில் முன்வினைகளாலும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களாலும் அளவற்ற துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் மக்கள். அவர்களின் துயரங்களை எல்லாம் தீர்க்கும் உபாயமாக... நாராயணர் நாரதர் மூலம் இந்த வழிபாட்டினை அருளிச் செய்த திருக்கதையை நாமும் அறிவோம்.

ஒரு முறை பூமிக்கு வந்த நாரதர் மகரிஷி, இங்கே மக்கள் படும் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தினார். வைகுண்டம் சென்றவர் ஸ்ரீமந் நாராயணரை தரிசித்து, ``பூவுலக மனிதர் களின் துன்பங்களைப் போக்கி நீங்களே அவர்களை ரக்ஷிக்க வேண்டும். அவர்கள், தங்களுடைய துயரங்களிலிருந்து மீள்வதற்கான உபாயத்தைத் தாங்களே அருளவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டார்.

அவரின் வேண்டுதலை ஏற்று, அவருக்கு ஸ்ரீசத்யநாராயண பூஜையின் மகிமைகளை எடுத்துக்கூறினார் மகாவிஷ்ணு. அத்துடன், இந்தப் பூஜையை பக்தியோடு செய்யும் அன்பர் களின் இல்லங்களுக்கு தாமே சென்று அவர்களின் நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதாக வாக்களித்தார்.

அற்புதமான ஸ்ரீசத்யநாராயண பூஜையை பெளர்ணமி தினங்களிலோ மகாவிஷ்ணுவுக்கு உகந்த விசேஷ நாள்களிலோ செய்து பலன் பெறலாம். இந்தப் பூஜையின் தனிச்சிறப்பு...வேண்டுதல் நிமித்தம் சங்கல்பிக்கும் அன்பர்கள், தமது வேண்டுதல் நிறைவேறியதும் எம்பெருமா னுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அனுசரிக்கும் விரத வழிபாடு இது.

இந்தப் பூஜையில் வேண்டுதலைக் கூறி சங்கல்பம் செய்யும் பக்தர்களுக்கு, `நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும்’ என்ற நம்பிக்கையை, ஸ்ரீமந் நாரயணரே அளிக்கிறார்.

இந்தப் பூஜையின் முடிவில், ஏற்கெனவே இந்த வழிபாட்டைச் செய்து பலன் அடைந்த அருளாளர்களின் - அடியார்களின் திருக் கதை களைச் சொல்வதும் கேட்பதும் விசேஷம்.

அவரவர் வீட்டிலேயே மிக எளிமையான முறையில் செய்ய இயலும் இந்த வழிபாட் டின் மூலம், ஸ்ரீசத்யநாராயணரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற முடியும் என்கிறார் நாரத முனிவர்.

மேலும், ஒவ்வொருவரின் இல்லத்திலும் கிரக லட்சுமியாய் மகா லட்சுமி உறைந்திருக் கிறாள். அவளின் பதியான நாராயணரை இந்த வழிபாட்டின் மூலம் போற்றுவதால், திருமகளும் மனம் மகிழ்வாள். அவளின் அருளால் லட்சுமிகடாட்சமும் நம் இல்லத்தில் எப்போதும் நிறைந்திருக்கும்!

இனி ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜையைப் பற்றி அறிவோம்.

ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை

பீமாஜி பாட்டீல் என்ற பாபாவின் தீவிர பக்தர் ஒருவர், புனே பகுதியில் அமைந்த `ஜூன்னர்’ என்ற மலைப்பகுதியில் வசித்து வந்தார். அவர் தொடர்ந்து பல வருடங்களாக ஸ்ரீசத்யநாராயண பூஜையைச் செய்து வந்தார். ஜூன்னர் மலைப்பகுதி மிகப் பழைமையான ஜோதிர்லிங்கத் தலமான பீமாசங்கருக்கு அருகிலுள்ளது.

ஒருநாள், பீமாஜி பாட்டிலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் அடிக்கடி ரத்த வாந்தி எடுத்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் காசநோய்க்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.

மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிறைவில் `என் நோயைத் தீர்க்கும் மாமருந்து, என் சத்குரு சாயிபாபாவிடம் மட்டுமே உள்ளது. அவர் இந்த நோயிலிருந்து என்னை நிச்சயம் விடுவிப்பார்’ என்று தீர்மானித்தார்.

பாபாவை தரிசிக்க ஷீர்டிக்குப் புறப்பட்டார். அவர் ஷீர்டியை நெருங்கும் வேளையில், நோயின் தீவிரம் மெள்ள மெள்ள குறைவதை உணர்ந்தார். அவர் விரைந்து சென்று பாபாவின் அருகில் அமர்ந்து கொண்டார்.

பாபா அவரிடம், ``பொறு! உன் கவலைகளைத் தூர எறி. உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு வேதனை அடைந் தாலும், இம் மசூதியில் கால் வைத்ததும், அவன் மகிழ்ச்சி யின் பாதையில் செல்கிறான். இங்கே உள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். அவர் உன் வியாதியை நிச்சயமாகக் குணப்படுத்துவார்!’’ என்றார்.

அதுவரையிலும் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்த பீமாஜிபாட்டில், பாபாவின் சந்நிதானத்தில், நோய்க்கான எவ்வித அறிகுறியும் இன்றி, ஆனந்தமாக அமர்ந்து கொண்டிருந்தார்.

அதன் பிறகு, பாபா அவரை இரண்டு கனவுகள் மூலம் குணப்படுத்தினார். ஆம்! கனவிலேயே சிகிச்சை முடிந்தது; பூரணக் குணம் அடைந்தார் பீமாஜிபாட்டில். அதனால் மிகவும் மகிழ்ந்த அந்த அன்பர், பாபாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு சபதத்தை மேற்கொண்டார்.

`நான் இதுவரை ஸ்ரீசத்யநாராயண பூஜையைச் செய்து வந்தேன். பாபா என்ற ஸ்ரீமந் நாராயணரரின் அவதாரம், என் வியாதியை பூரணமாகக் குணப்படுத்தியது. ஆகவே, இனி நான் ஸ்ரீசாயி சத்ய நாராயண பூஜையைத் தொடங்கு வேன். என் வேண்டுதலை நிறைவேற்றியது போலவே, பாபா அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றுவார்’ என்று தீர்மானித்தார்.

அதன் பொருட்டு ஸ்ரீதாஸ்கணு மகராஜை தரிசித்த பீமாஜிபாட்டில், தன் சபதத்தைத் தெரிவித்து, பூஜைக்கான விதிமுறைகளைக் கற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீதாஸ்கணு மகராஜ், முதன்முதலாக ஸ்ரீசாயி குரு சரித்திரம் என்ற புனித நூலை ஸ்ரீசாயிபாபா உடலுடன் வாழ்ந்த காலத்திலேயே இயற்றி, ஸ்ரீசாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் பெற்றவர்.

அவர், பீமாஜி பாட்டிலின் கோரிக்கையை ஏற்று, பூஜைக்கான விதிமுறை களை உருவாக்கி அளித்தார். பீமாஜி பாட்டீல், முதன் முதலாக 1909-ம் ஆண்டு, பாபா உடலுடன் வாழ்ந்த காலத்திலேயே இந்தப் பூஜையை நடத்தத் தொடங்கினார்.

அன்று தொடங்கப்பட்ட ஸ்ரீசாயி சத்ய நாராயண பூஜை, ஷீர்டியில் இன்றளவும் பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில், நடைபெற்று வருகிறது.

இந்தப் பூஜையைச் செய்த அடியவர்கள் அனைவருக்கும் ஸ்ரீசத்ய நாராயணரான பாபா, அனைத்து நலன்களையும் வழங்கி வருகிறார். ஸ்ரீசாயிபாபாவின் ஆரத்தி பாடலில் ஒரு வரி வரும்.

`ஷீர்டிமாஜே பண்டர்புர சாயிபாபா ரமா வர' என்ற பாடல் வரியில், ஷீர்டியே பண்டரி புரம் என்றும் ரமாதேவியின் மணவாளரான விட்டலனே அங்கு வீற்றிருக்கும் சாயிபாபா என்றும் போற்றிப் பாடப்பட்டுள்ளது.

இனி, மகத்துவம் மிக்க இந்த வழிபாட்டினைச் செய்யும் விதிமுறைகளை அறிவோம்.

வழிபாட்டு முறைகள்...

வழிபாட்டுத் தினத்தன்று காலையில் பூஜையறையை, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாக்கோலம் இடவேண்டும்.

ஒரு சிறிய மண்டபம் போன்று சிறு மேடை அமைக்கலாம். அல்லது மனைப் பலகை போதுமானது. மேடையில் அல்லது பலகையில் கோலமிட்டு ஸ்ரீசத்யநாராயணர் ஸ்ரீசாயிபாபா படங்களை வைக்கவேண்டும்.

இயன்றால் பூஜாபீடத்தை அல்லது பலகையைச் சுற்றிலும் மாவிலை முதலான தோரணங்களால் அலங்கரிக்கலாம். மண்டபம் - பலகை மேற்கு நோக்கி இருக்கலாம்.

பூஜைக்கு முன் திருவுருவங்களை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இடவேண்டும்.

இரண்டு வாழைக்கன்றுகளை வாங்கி இரு பக்கமும் சாய்த்து வைக்கலாம். பூஜை செய்யும் அன்பர்கள், தங்களுக்கு ஒரு மனைப்பலகை போட்டு, வடக்கு நோக்கி அமர்ந்தபடி பூஜையை ஆரம்பிக்கலாம்.

பூஜைக்குத் தேவையான பொருள்களை முன்னதாகவே சேகரித்து தயாராக வைத்துக் கொள்ளவும் (தேவையான பொருள்கள் குறித்த விவரத்தைப் பெட்டிச் செய்தியில் காணலாம்.).

உங்களுக்கு இடப் பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மீது ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டு, அதன்மீது அரிசியைப் பரப்பி வைத்துக்கொள்ளலாம்.

அரிசியின் பரப்பில் ஆறுமுனை உள்ள ஷட்கோணம் கோலத்தை விரலால் வரைந்து கொள்ளவும். பின்னர் சுத்தமான நீர் நிரப்பிய ஒரு கலசத்தைக் கோலத்தின் நடுவில் வைக்க வேண்டும்.

அந்தக் கலசத்துக்குப் பூச்சூட்டி, சந்தனக் குங்குமத் திலகம் இட்டு, கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தைவைத்து, அதன் மீது மஞ்சள் பூசிய தேங்காயை வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விநாயகப் பெருமானை மனத்தில் தியானித்து இந்தப் புண்ணியக் கலசத்தில் எழுந்தருளுமாறு வேண்டிக்கொண்டு, கலசத்தையே விநாயகராகக் கருதி வழிபட்டு பூஜையைத் தொடங்கலாம்.

அற்புதமான இந்தப் பூஜையை வழிநடத்தும் ஒருவரின் சொல்லை பின்பற்றி பூஜையைச் செய்து முடிக்க வேண்டும்.

தூப-தீபம், ஆராதனை உள்ளிட்ட தெய்வ மூர்த்தங்களுக்கான அனைத்துப் பணிவிடைகளையும் முறைப்படி செய்யவேண்டும்.

பூஜை நிறைவேறியதும், ஸ்ரீசாயிநாதரின் 108 நாமங்களைச் சொல்லியபடி (ஸ்ரீசாயி அஷ்டோத்திர நாமாவளி), ஸ்ரீசாயிநாதர், ஸ்ரீசத்தியநாராயணர் இருவரின் திருவுருவங்களுக்கும் பூக்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.

தொடர்ந்து கோதுமை மாவு, நெய், சர்க்கரை மற்றும் பால் கலந்த வெள்ளை நிற கோதுமை கேசரியைப் பிரசாதமாக நைவேத்தியம் செய்வது விசேஷம்.

அடுத்து, கற்பூரம் காட்டி இந்தப் பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

பூஜை முடிந்ததும், இந்த வழிபாட்டைச் செய்து பலன் அடைந்தவர் களின் புண்ணியக் கதைகளைப் படித்து விளக்கிச் சொல்லலாம். பின்னர் ஸ்ரீசாயிபாபாவின் ஆர்த்தியும், மங்கல ஆரத்தியும் எடுக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட வேண்டும்.

பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டிய படி விரைவில் அருளும் வல்லமை பெற்றது இந்த வழிபாடு. ஷீர்டி ஸ்ரீசாயிநாதர் தன் பொருட்டு பக்தர்கள் வழிபட அனுமதித்த தனித்துவமான வழிபாடு இது என்பார்கள்.

நோய், கடன், பொருளாதாரப் பிரச்னைகள், வழக்குகள், வேலையின்மை, கல்யாணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை முதலான சகல பிரச்னைகளும் தீர்ந்து சுபிட்சம் அடைய வரம் அருளும் அபூர்வ பூஜை இது.

இந்தப் பிரச்னைகள் அனைத்தும் விலகி அனைவரும் வாழ்வில் நன்மை அடையவும், வாசகர்களின் நலன் வேண்டியும் ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளது சக்தி விகடன்.

ஷீர்டி ஸ்ரீசாயிநாதரின் மகா சமாதித் திருநாளான விஜயதசமி புண்ணிய தினத்தில் - 26.10.2020 திங்கள்கிழமை அன்று (காலை 9:30 - 12:00 மணி வரை) சக்தி விகடனும் துவாரகா மாயி ஆத்மஞானியர் மையமும் இணைந்து நடத்தும் இந்த அற்புதமான வழிபாட்டில், வாசகர்களும் முன்பதிவு செய்துகொண்டு `இணைய வீடியோ’ மூலம் (Zoom Meet) கலந்து கொண்டு வழிபட்டுப் பலன் அடையலாம்.

வாசகர்களின் கவனத்துக்கு...

இந்தப் பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.250/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷீர்டி ஸ்ரீசாயிசத்யநாராயணர் பூஜை - சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் நன்மைக்காக வழிபாட்டில் சிறப்புச் சங்கல்பமும் பிரார்த்தனையும் நடைபெறும்.

விஜயதசமித் திருநாளான 26.10.2020 திங்களன்று காலை 9:30 மணியளவில் வழிபாடு தொடங்கும். முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள் வீடியோ (zoom meet) மூலம் வழிபாட்டை தரிசிக்கலாம். அதற்கான இணைப்பு முகவரி (zoom meet link) முதல் நாளே அதாவது 25.10.2020 ஞாயிறன்று வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள், தரிசனத்துக்காக வீடியோ இணைப்பில் இணைவதோடு, அவரவர் வீட்டிலிருந்தபடி வழிபாடும் செய்யலாம். அங்ஙனம் வழிபட விரும்பும் வாசகர்கள், தங்கள் வீட்டில் பூஜைக்குத் தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பொருள்களுடன் முன்னதாகத் தயாராகிக்கொள்ளவும்.

வாசகர்கள் அவரவர் வீட்டிலேயே வழிபட ஏதுவாக, ஸ்ரீசத்ய நாராயணர், ஷீர்டி ஸ்ரீசாயிபாபா வண்ணப்படங்களும் வழிபாட்டு முறைகள், ஸ்ரீசாயி அஷ்டோத்திர நாமாவளி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பும் (Pdf வடிவில்) மின்னஞ்சல் மூலம் முன்னதாக அனுப்பிவைக்கப்படும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்பதிவு செய்யும் முதல் 300 வாசகர்களுக்கு ஷீர்டியில் இருந்து விசேஷமாகப் பெறப்பட்ட புனிதம் மிக்க உதி பிரசாதம் 1.11.2020 தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

முன்பதிவு விவரங்களுக்கு:

73974 30999; 97909 90404

ஆன்லைனில் பதிவு செய்ய...

https://events.vikatan.com/149-sri-sai-sathya-narayana-poojai/