திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

‘சாஸ்தாவின் அருளால் மண்ணும் பொன்னாகும்!’

ஸ்ரீ பூரண- புஷ்கலை மகா சாஸ்தா ஐயனார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீ பூரண- புஷ்கலை மகா சாஸ்தா ஐயனார்

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து, திருமுடி மகா சாஸ்தா எனப்படும் ஐயனாரை தரிசித்துச் செல்கிறார்கள் சுற்றுவட்டாரத்து மக்கள்.

`வம்சமும் பூமியும் வாழையடி வாழையாகச் செழித்தோங்க வேண்டும்’ என்று பக்தர்கள் மனமுருகி வேண்டுதல் வைத்து, பொங்கலிட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட, அவர்களின் வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றி அருள்கிறார் மகா சாஸ்தா ஐயனார்.

அதுமட்டுமா? செய்வினையில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் விடுபடுவதற்காக, கோயிலுக்கு முன்னேயுள்ள முன்னடியான் எனப்படும் சின்னானார் சந்நிதியில் கிடா வெட்டி, படையலிட்டு குடும்பத்துடன் வணங்கிச் செல்கின்றனர். இதன் பிறகு, அந்தக் குடும்பத்துக்குக் காவல் தெய்வமாகி அவர்களைக் காத்து நிற்கிறார் ஐயனார்!

ஸ்ரீ பூரண- புஷ்கலை மகா சாஸ்தா ஐயனார்
ஸ்ரீ பூரண- புஷ்கலை மகா சாஸ்தா ஐயனார்

தரங்கம்பாடியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவி லுள்ளது பொறையார். இங்கே, கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ பூரண- புஷ்கலை மகா சாஸ்தா ஐயனார் சந்நிதியிலேயே மேற்காணும் வழிபாடுகளும் ஐயனாரின் அருள் அற்புதங்களும் நிகழ்கின்றன.

இந்த ஐயனாரின் சந்நிதியில விதை நெல்லை வைச்சு வேண்டிக்கொண்டு நிலத்தில் விதை விதைத்தால், மண்ணும் பொன்னாகும்; மழையும் தேனாகும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள். இவ்வழியே பயணிபோர் வழித்துணையாக வந்து அருளும்படி வணங்கி, இந்த ஐயனாரிடம் வேண்டுதல் வைத்துச் செல்கிறார்கள்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து, திருமுடி மகா சாஸ்தா எனப்படும் ஐயனாரை தரிசித்துச் செல்கிறார்கள் சுற்றுவட்டாரத்து மக்கள். தை மாதம் மற்றும் ஆடி மாதங்களில், குல தெய்வமாகக் கொண்ட அன்பர்கள், பொங்கல் வைத்தும், விளைச்சல் தானியங்களை காணிக்கையாகச் சமர்ப்பித்தும் வழிபடுகிறார்கள்.

கிரகக் கோளாறு, காத்துக் கருப்பு என்று வேதனைப்படுபவர்கள், இந்த ஐயனாருக்கு 51 எலுமிச்சைப் பழங்கள் கொண்ட மாலையைச் சார்த்தி, அர்ச்சனை செய்தால்... தோஷங்கள் யாவும் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை!

- மா.நந்தினி, சென்னை