Published:Updated:

Aadi Krithigai | ஆடிக் கிருத்திகையின் சிறப்புகள் | வீட்டில் வழிபடுவது எப்படி?| Saraswathi Ramanathan

Aadi Krithigai | ஆடிக்கிருத்திகையின் சிறப்புகள் | வீட்டில் வழிபடுவது எப்படி? | Saraswathi Ramanathan

பொதுவாக, கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் என்பார்கள். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது. 'ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள். இந்த ஆடிக்கிருத்திகையை எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகிறார் சரஸ்வதி ராமநாதன்.