Published:Updated:

தொடர் நஷ்டம் தீர்க்கும் தானம்... எந்த தானத்துக்கு என்ன பலன்? - அதிகாலை சுபவேளை

`கோரக்கர் சமாதி
`கோரக்கர் சமாதி

தொடர் நஷ்டம் தீர்க்கும் தானம்... எந்த தானத்துக்கு என்ன பலன்? - அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

5. 6. 21 வைகாசி 22 சனிக்கிழமை

திதி: தசமி காலை 7.55 வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: ரேவதி

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை

திருமலை ஆஞ்சநேயர்
திருமலை ஆஞ்சநேயர்
TTD_PHOTO

சந்திராஷ்டமம்: பூரம்

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

தொடர் நஷ்டம் தீர்க்கும் தானம்

நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களில் முக்கியமானவை தானம், தர்மம் ஆகியன. ஏதேனும் ஒரு நற்பலனை எதிர்பார்த்துச் செய்வது தானம். குறைந்தபட்சம் புண்ணிய பலனாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செய்வது. அதையும் எதிர்பாராமல் தருவது தர்மம். இந்த உலகில் எதுவும் எதிர்பாராமல் தர்மம் செய்தவன் ஒருவனே கர்ணன் என்கின்றன ஞானநூல்கள். அதே நேரத்தில் எதிர்பார்ப்புடன் செய்தாலும் தானம் என்பதும் உயர்ந்த விஷயம்தான். இல்லாதவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய ஒன்றை வேண்டும் நேரத்தில் தருவது மிக உயர்ந்த தானமாகும். அப்படிப்பட்ட தானங்களை நம் முன்னோர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட தானம் செய்யும்போது குறிப்பிட்ட பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. அப்படித் தொடர் நஷ்டத்தைச் சந்திக்கும் ஒருவர் செய்ய வேண்டிய தானம் எது? எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்னும் தகவல்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

பக்தி : மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும். முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதில் பொறுமை தேவை. உணவு விஷயங்களில் கவனமாக அவசியம் - இறைவன் இருக்க பயம் ஏன்?!

ரிஷபம்

தன்னம்பிக்கை : மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். உங்கள் ஆலோசனை பாராட்டப்படும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

மிதுனம்

பொறுமை : செயல்களில் பொறுமை அவசியம். பேச்சில் தேவையற்ற சொற்களைத் தவிர்ப்பதுநல்லது. பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

கடகம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொண்டு நடப்பார்கள். உறவினர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். - ஜாலி டே!

சிம்மம்

நிதானம் : நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். இறைவழிபாடும் நாம ஜபமும் மனதுக்கு ஆறுதல் அளிக்கும். யாரோடும் தேவையின்றி வாக்குவாதம் செய்ய வேண்டாம். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

கன்னி

சோர்வு : முற்பகலில் உற்சாகமும் பிற்பகலில் சோர்வும் ஏற்படும் நாள். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். நண்பர்கள் உதவுவார்கள். - ஆல் இஸ் வெல்!

துலாம்

சாதகம் : அனைத்து செயல்களும் நன்மையாக முடியும் நாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் நன்மைகள் அதிகரிக்கும். சகோதர உறவுகள் சாதகமாக இருப்பார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

விருச்சிகம்

ஆரோக்கியம் : செலவுகள் அதிகரிக்கும் நாள். சிக்கனம் தேவை. பிற்பகலுக்கு மேல் நல்ல தகவல்கள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்!

தனுசு:

பணவரவு : எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. சகோதர உறவுகளை அனுசரித்துச் செல்வதும் அவசியம். குடும்பத்தினர் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். - சவாலே சமாளி!

மகரம்

மகிழ்ச்சி : பணப்புழக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். உறவினர்கள் நல்ல தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். - என்ஜாய் தி டே!

கும்பம்

நன்மை : புதிய முயற்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணவரவும் உண்டு. - நாள் நல்ல நாள்!

மீனம்

குழப்பம் : மனதில் சிறு குழப்பம் நிலவும். தேவையில்லாமல் கவலைப்படுவீர்கள். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். அவர்கள் மூலம் சுபச்செய்திகள் தேடிவரும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

அடுத்த கட்டுரைக்கு