Published:Updated:

நாளை, வறுமை நீக்கி வளமான வாழ்வு அருளும் ரோகிணி விரதம்!

மகாவீரர்
மகாவீரர்

இந்த விரதத்தை மேற்கொண்டால், வீட்டில் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதிகம். மேலும் இந்த விரதம் சுமங்கலிகள் மேற்கொண்டால் அவர்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமென்கின்றன சமண சமய நூல்கள்.

ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திர தினம் வருவதுண்டு. அதில் எந்த நாளில் சூரிய உதயத்துக்குப் பின் ரோகிணி நட்சத்திரம் வருகிறதோ அன்றே ரோகிணி விரத நாளாக சமணர்கள் கடைப்பிடிக்கிறார்கள். சமண சமயம் கடுமையான விரத முறைகளைக் கொண்டது, அனைத்து விரதங்களையும் கடைப்பிடிக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் ரோகிணி விரதமாவது கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி.

மகாவீரரை வழிபட உகந்த ரோகிணி விரதம்
மகாவீரரை வழிபட உகந்த ரோகிணி விரதம்

பொதுவாக இந்த விரதத்தைப் பெண்கள் கடைப்பிடிப்பார்கள். ரோகிணி நட்சத்திர நாள் முழுவதும் விரதமிருந்து மகாவீரரை வழிபடுவர். அதிகாலையில் எழுந்து புனித நீராடி அந்த நாளின் விரதத்தைத் தொடங்குவர். சமண தீர்த்தங்கரர்களின் விக்ரகம் அல்லது படத்துக்கு மாலை அணிவித்துப் பூஜை செய்துவழிபடுவர். அந்த நாள் முழுவதையும்  இறைவழிபாட்டிலும் தியானத்திலும் செலவு செய்வர். முற்றிலும் உணவைத் தவிர்த்து மறுநாள் மிருகசீரிட நட்சத்திரம் பிறந்ததும் உணவு உட்கொள்வர்.

ரோகிணி விரத பலன்கள்

இந்த விரதத்தை மேற்கொண்டால், வீட்டில் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதிகம். மேலும் இந்த விரதம் சுமங்கலிகள் மேற்கொண்டால் அவர்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமென்று சொல்லப்படுகிறது. பொதுவாக இந்த விரதம் தொடங்கினால் மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடித்தால் அனைத்துச் செல்வங்களும் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் மாதத்தில் ஒரு நாள் விரதம் என்பது உடலையும் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும் என்பது நம்பிக்கை.

மகாவீரர்
மகாவீரர்

நாளை (23.5.20) ரோகிணி நட்சத்திர நாள். அருகக் கடவுளை வணங்கி அருள்பெறுவோம்.

2020 -ல் வரும் ரோகிணி விரத தினங்கள்

மே 23, ஜூன் 20, ஜூலை 17, ஆகஸ்ட் 13, செப்டம்பர் 10, அக்டோபர் 7, நவம்பர் 3, நவம்பர் 30, டிசம்பர் 28.

அடுத்த கட்டுரைக்கு