திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

தேவை முன்யோசனை!

வ.வே.சு.ஐயர்
பிரீமியம் ஸ்டோரி
News
வ.வே.சு.ஐயர்

சிந்தனை விருந்து ஓவியம்: ரமணன்

`சதுரங்க விளையாட்டைப்போலவே முன் யோசனைதான் வாழ்க்கையிலும் வெற்றியைப் பெற்றுத் தரும்’ என்கிறார் ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் பக்ஸ்டன். தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படுவது `குளத்தங்கரை அரசமரம்.’ அதை எழுதிய வ.வே.சு .ஐயருக்கு முன் யோசனை அதிகம்.

தேவை முன்யோசனை!

அது, ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்த காலம். `எஸ்.எம்.எஸ்.எம்டன்’ என்கிற ஜெர்மானிய போர்க் கப்பல் சென்னை கடற்கரைக்கு அருகே வந்து குண்டுகளை வீசி ஆங்கிலேயர்களைப் பதறவைத்திருந்த நேரம். அப்போது புதுச்சேரியில் இருந்தார் வ.வே.சு.ஐயர்.

எம்டன் கப்பலுக்கும் சுதேசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதியது ஆங்கிலேய அரசு. அதனால் புதுச்சேரி கவர்னரிடம் அவர்களைக் கண்டுபிடித்து, வட ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப் பரிந்துரை செய்திருந்தது. பிரெஞ்சு காவல்துறை எத்தனையோ குற்றச்சாட்டுகளை சுதேசிகளின் மேல் வைத்தாலும் ஒன்றைக்கூட நிரூபிக்க முடியவில்லை. அதேநேரத்தில் தாம் எப்போது வேண்டுமானாலும் நாடுகடத்தப்படலாம் என்கிற அச்சம் வ.வே.சு.ஐயருக்கு எழுந்தது.

அவர், திருக்குறள் மீது தீராத பற்றுக் கொண்டவர். அதை உலகம் முழுக்கக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேட்கை வெகு காலமாகவே அவருக்கு இருந்தது. எனவே தாம் பிடிபடுவதற்குள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.

1914. நவம்பர் 1. மொழிபெயர்ப்பு பணியில் இறங்கினார் ஐயர். `நாளை காலையில் நாடு கடத்தும் ஆணை வந்துவிடுமோ?’ என்கிற எண்ணத்திலேயே தீவிரமாக, அதேநேரத்தில் தெளிவாக குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

தேவை முன்யோசனை!

1915, மார்ச் 15-ம் தேதி அந்தப் பணி நிறைவுற்றது. `The Kural or The Maxims of Thiruvalluvar' என்கிற அந்த நூல் 1916-ம் ஆண்டு வெளி யானது. பதிப்பாளர்: சுப்ரமணிய சிவா. அப்போதைய விலை இரண்டு ரூபாய் நான்கணா. இக்கட்டான சூழலிலும் வ.வே.சு.ஐயரின் முன் யோசனை அரிய பொக்கிஷத்தை உலகத்துக்குத் தந்தது.

ப்படித்தான் ரெண்டு பேர் பேசிக்கிட்டாங்க பாருங்க...

``உங்க பக்கத்து வீட்டுக்காரர் தன்னோட கோழியை உங்க வீட்டு நிலத்தில் மேயவிடுறா‌ர்னு சொன்னீங்களே... இ‌ப்போ எ‌ப்படி இரு‌க்கு!''

``கோ‌ழியா... எ‌ங்கப் ப‌க்க‌ம் வரதே இல்ல!''

``அ‌ப்படி எ‌ன்ன செ‌ஞ்சீங்க?''

``நானே 6 முட்டைகளை வா‌ங்‌கி வ‌ந்து புதருக்கு அடியில் வை‌ச்‌சி‌ட்டு, மறுநாள் அவர் பார்க்கு‌ம்படியா மு‌ட்டைகளை எடு‌த்தே‌ன். அவ்வளவுதான் விஷயம் முடிஞ்சது!''