Published:Updated:

`ஆசை அடங்குமா?'

ஶ்ரீமுத்துசுவாமி தீட்சிதர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமுத்துசுவாமி தீட்சிதர்

சிந்தனை விருந்து

`ஆசை அடங்குமா?'

சிந்தனை விருந்து

Published:Updated:
ஶ்ரீமுத்துசுவாமி தீட்சிதர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமுத்துசுவாமி தீட்சிதர்

`அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்’ என்கிறார் வள்ளுவப் பெருமான். `எதன் மீதும் ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது’ என்பது இதன் பொருள். இந்த உண்மை நம் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், ஆசைப்படுவதை நிறுத்த முடிகிறதா... இறுதிமூச்சு உள்ளவரை மனிதர்களுக்குத்தான் எத்தனை ஆசைகள்?!

`ஆசை அடங்குமா?'

றைவழிபாட்டில் ஒன்றிப்போகிறவர்களுக்கு, இறையைத் தவிர வேறு எதன்மீதும் பற்றில்லாமல் போகும். சிலருடைய ஆசையைப் போக்குவதற்கான வழியும் அவர்களுக்குத் தெரியும். அதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர். பாடுவதோடு வீணை வாசிப்பதிலும் வல்லவர். ஒருகாலத்தில் பல வித்வான்கள், ஹம்சத்வனி ராகத்தில் இவர் இயற்றிய `வாதாபி கணபதிம் பஜே ஹம்’ கீர்த்தனையோடுதான் கச்சேரியைத் தொடங்குவார்கள். தீட்சிதர் அம்பாள் மீது பாடிய `கமலாம்பா நவாவர்ண கிருதிகள்’ அற்புதமானவை.

முத்துசுவாமி தீட்சிதருக்கு இரு மனைவிகள். தீட்சிதர் சதா இறை துதி, இசை என்று மூழ்கிக் கிடப்பவர். அவருடைய இரண்டாவது மனைவிக்கோ நகைகள் மீது அலாதிப் பிரியம். எப்போது பார்த்தாலும் நகை இல்லை என்று குறை பட்டுக்கொண்டேயிருந்தார். தீட்சிதர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்தப் பெண்மணிக்கு ஆசை தணியவில்லை.

ஒருநாள், தன் இரண்டாவது மனைவியை அழைத்தார் தீட்சிதர். அவரை முன்னே அமர வைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தார். லலிதா ராகத்தில் அமைந்த `ஹிரண்மயீம் லக்ஷ்மீம்...’ என்ற கிருதி. தீட்சிதரின் வீணை இசையும், குரலும், பக்தி பாவமும் அவர் மனைவியின் மனதை அப்படியே உருகவைத்துவிட்டன.

அன்று இரவு தீட்சிதரின் மனைவிக்கு ஒரு கனவு. கனவில் வந்தது மகாலட்சுமி. திருமகள் பேரழகு, ஜொலிக்கும் ஆபரணங்களோடு காட்சி அளித்தாள். அந்தக் காட்சி தீட்சிதர் மனைவியின் நெஞ்சை நிறைத்துவிட்டது. அதற்குப் பிறகு நகை குறித்த பேச்சையே அவர் எடுக்கவில்லை!

ம் ஊரில் நகைமேல் பைத்தியமாக இருக்கும் ஒரு பெண்மணி, கணவனிடம் சொன்னாள்: ``ஏங்க எனக்கு இந்த நகைமேல இருக்குற ஆசையே போயிடுச்சுங்க...’’

ஆச்சர்யத்தோடு கணவன் கேட்டான்... ``ஏன்?’’

``பின்னே எத்தனை நாளைக்குத்தான் பழைய நகைகளையே போட்டுக்கிட்டு இருக்குறது... நாளைக்குக் கடைக்குப் போய் எல்லாத்தையும் போட்டுட்டு, புதுசா வேற நகை எடுத்துத் தாங்க!