Published:Updated:

சிரிப்பு மகான்

சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

சிந்தனை விருந்து

சிரிப்பு மகான்

சிந்தனை விருந்து

Published:Updated:
சிந்தனை விருந்து
பிரீமியம் ஸ்டோரி
சிந்தனை விருந்து

உலகின் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத சிரிப்பு என்கிற கொடையை இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கிறார். ஆனால், மனிதர்கள் வாழ்க்கை ஓட்டத்தில், அன்றாடப் பாடுகளில் சிரிப்பைத் தொலைத்துவிடுகிறார்கள். சிரிப்பைப்போல நம்மை உயிர்ப்போடும் நிம்மதியோடும் வைத்திருக்கும் ஒன்று வேறு இல்லை.

சிரிக்கும் புத்தர்
சிரிக்கும் புத்தர்


`எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சிரித்துக்கொண்டே இருங்கள். அதைவிட உங்களைப் பாதுகாக்கும் மலிவான மருந்து வேறு இல்லை’ என்கிறார் லார்டு பைரன். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தக் கவிஞர் சொன்னதை, அண்மையில்தான் பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.

தற்போது `சிரிப்பு சிகிச்சை’ (Laughter Therapy), `சிரிப்பு யோகா’ (Laughter Yoga) இவையெல்லாம் நம்மூரிலேயே சல்லிசாகக் கிடைக்கின்றன. பல வீடுகளின் பூஜை அறையிலும், வரவேற்பறையிலும் சின்னதாகவோ, பெரிய அளவிலோ ஒரு சிலையைப் பார்க்கலாம். தொப்பை துருத்தித் தெரிய, இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தியபடி அந்தச் சிலை சிரித்துக்கொண்டிருக்கும். ஒரு நண்பர் வீட்டில் இதைப் பார்த்தபோது, `இதை வீட்ல வெச்சா அதிர்ஷ்டமாம்...’ என்றார். அது அப்படியல்ல.

அந்தச் சிலையாக இருப்பவர் ஜப்பானியர்கள் பெரிதும் மதித்த ஒரு ஞானி. அவரை `சிரிக்கும் புத்தர்’ என்கிறார்கள். அவருடைய இயற்பெயர் ஹோட்டே (Hotei). அவர் வாயைத் திறந்து யாருக்கும் அருள்மொழியோ, ஆசியோ வழங்கியதில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு ஞானம் கிடைத்தது. அவ்வளவுதான். மனம்விட்டு சிரிக்க ஆரம்பித்தார். கிராமம் கிராமமாகப் போவார். ஒரு பொது இடத்தில் நின்று கொண்டு யாரையும், எதையும் பற்றியும் கவலைப்படாமல் சிரித்துக் கொண்டேயிருப்பார்.

மக்கள் கூடி நின்று ஆச்சர்யத்தோடு பார்ப்பார்கள். சிறிது நேரத்தில் கூட்டத் தில் யாரோ ஒருவர் சிரிப்பார். அவரைத் தொடர்ந்து இன்னொருவர். பிறகு கூட்டம் மொத்தமுமே சிரிக்க ஆரம்பிக்கும். இப்படிச் சிரிப்பதால் அவர்களுக்கு நல்ல பலனும் கிடைத்தது. மனம் லேசானது; புலன்கள் கூர்மையாகின; ஓர் உறுதி உள்ளுக்குள் எழுந்தது. கிட்டத்தட்ட 45 வருட காலம் சிரிப்பின் மகத்துவத்தை ஊர் ஊராகச் சென்று பரப்பிய மகான் ஹோட்டே.

விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன். ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருந்த வரிடம் கேட்டார்... ``நெல்லை எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்?’’

``11:30 மணிக்கு.’’

``பாண்டியன் எக்ஸ்பிரஸ்?’’

``10:30 மணிக்கு.’’

``திருச்சி எக்ஸ்பிரஸ்?’’

``9:30 மணிக்கு வரும். அது சரி நீங்க எங்கே போகணும், திருநெல்வேலிக்கா, மதுரைக்கா, திருச்சிக்கா..?’’

``அதெல்லாம் இல்லை. தண்டவாளத்தை கிராஸ் பண்ணணும். அவ்வளவுதான்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism