டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், தெய்வத் தமிழ் இசையால் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட இசைமணி பத்மஶ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் மகன்.

உயிர் காக்கும் மருத்துவப் பணியில் இருந்தாலும் இறை பக்தியோடும் இதயச் சுத்தியோடும் தமிழிசையால் ஆன்மிகப் பயிர் வளர்த்து வருபவர். சக்தி விகடனின் `எனது ஆன்மிகம்’ பகுதிக்காக அவரைச் சந்தித்தோம்.

‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே...’ என்று தன் கணீர் குரல் எடுத்துப் பாடிக் கொண்டிருந்தார். அந்தக் கணத்தில் நாம் இறை சாந்நித்தியத்தில் நிலைத்தோம். கண்மூடிக் கேட்டபோது, ஐயா சீர்காழி கோவிந்தராஜனின் அருள்முகம் நினைவில் வந்துபோனது. பாடலைப் பாடி முடித்து சில நொடி அமைதிக்குப் பின், சிவசிதம்பரம் நம்மோடு பேசினார்.

“எனது ஆன்மிகம், என் பெற்றோர் அருளியது. என் தாயார் சுலோச்சனா கோவிந்தராஜன், தந்தையார் நாடறிந்த இசைமணி பத்மஶ்ரீ சீர்காழி கோவிந்தராஜன். இந்த இரண்டு தெய்வங்களும் காட்டிய இறைவழியே என் ஆன்மிக வழி.

நான் வளர்ந்தது திருமயிலையில். சிறுகுழந்தையான என்னைப் பெற்றோர் நடைப்பழக்கியதே மயிலை கபாலீச்சரத்தில்தான். அவர்களுக்குப் பிள்ளை யாகப் பிறந்ததால், இறை நம்பிக்கையாளர்களாக வளரும் பாக்கியம் எனக்கும், என் சகோதரியான ஞானவல்லி சிதம்பரத்துக்கும் கிடைத்தது.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெற்றோர் வழி அறிகிற ஆன்மிகம் தனித்துவம் வாய்ந்தது. அவர்கள்தாம் நம்மைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று ‘இறைவன் என்றும் இருப்பவன், எங்கும் இருப்பவன், எப்போதும் நமக்குத் துணையாக இருப்பவன்’ என்று சொல்லித் தருவார்கள். என் பெற்றோரும் ‘எல்லா சூழ்நிலையிலும் அந்த மகத்தான சக்தி நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது’ என்பதை எப்போதும் போதித்து அருளினர்.

என் அத்தையாரின் பெயர் ஜோதி. வள்ளல் பெருமான்மீது என்னுடைய பாட்டனாருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அத்தைக்கு ஜோதி எனப் பெயர் வைத்தார். வள்ளலார் வழியில் ஈடுபட்டு அநேக தர்மங்கள், அன்னதானங்கள் செய்தவர் அவர். என் பெரியப்பா சொக்க லிங்கம், அடுத்தவர் நடராஜன், என் தந்தை கோவிந்தராஜன். இப்படி வழிவழியாக சிவன் மேல் மாறாத பக்திகொண்டது எங்கள் குடும்பம்.

தெய்வ நம்பிக்கை ஒருவரை நல்வழியில் நடத்துகிறது. மனத்தை நல்வழியில் செலுத்து கிறது. இறைநம்பிக்கையும் பயபக்தியும் இருக்கின்ற உள்ளத்தில் வஞ்சகம், சூது போன்ற கெட்ட எண்ணங்கள் உதிப்பதில்லை. இதையே தன் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர் எங்களின் தந்தை சீர்காழி கோவிந்த ராஜன்.

ஒருவன் வித்தையைக் கற்றுக்கொள்ளும்போது ‘வித்யா பக்தி’, இல்லறத்தில் இருக்கும்போது ‘இல்லற பக்தி’, மனித மனங்களோடு ஒன்றிப் பழகும்போது ‘சமூக பக்தி’ என அவர் வகுத்துக் கொடுத்த நெறிமுறைகளைக் கடைப்பிடித்தே இன்றளவும் வாழ்ந்து வருகிறோம். ‘அன்பே சிவம்’ என்பது சைவம் உணர்த்துவது. அன்பும் சிவமும் ஒன்றுதான் என்பதே வாழ்வின் முக்கியமான சித்தாந்தம்.

என் சங்கீத குரு என் தந்தை; ஆன்மிக குரு தமிழ்க்கடல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவரின் சொற்பொழிவுகள் என் மனத்தில் ஆழப்பதிந்து பலவித மாற்றங்களை ஏற்படுத்தின.

காஞ்சி மகா பெரியவா ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஶ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் திருவடிகளைப் பற்றி வளர்ந்தவன் நான்.

என் தந்தையார் எந்தத் திருத்தலத்துக்குப் பாடச் சென்றாலும் நாங்களும் உடன் சொல்வோம். காலை வேளையில் அந்தக் கோயிலில் தரிசனம் செய்வோம். இந்த வழக்கத்தை அவருக்குப் பின் நானும் பின்பற்றினேன். அப்படி ஒருமுறை திருச்செந்தூர் சென்றிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

திருச்செந்தூரில் கச்சேரி முடித்துவிட்டு, அன்று இரவு அங்கு தங்கி மறுநாள் சமுத்திரத்தில் நீராடினோம். அப்போது உடன் வந்த நண்பர் ஒருவர் ‘பக்கத்தில்தான் சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது. ஒருமுறை போய்வரலாமே’ என்றார்.

அவர் எளிதாகச் சொல்லிவிட்டார். ஆனால், சில நாள்களுக்கு முன்பு ஒரு விபத்து நடந்து என் தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அந்த விபத்துக்குப் பின் நான் பங்கேற்ற முதல் கச்சேரி திருச்செந்தூர் கச்சேரிதான். என்னால் அமர்ந்து பாட முடியுமா என்ற சந்தேகம் இருந்தாலும் முருகப்பெருமானின் அருளால் அன்று மூன்று மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து பாடி முடித்தேன்.

பக்கத்தில் என்று நண்பர் காட்டிய தூரமே ஒரு கிலோ மீட்டருக்கும் மேலிருக்கும். எப்படி நடப்பது என்று தயங்கினேன். ஆனால் சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் மகிமைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். திருச்சியில் இருக்கும் அவருடைய கோயிலுக்குப் போய் தரிசனம் செய்ததும் உண்டு. இந்தக் கலியுகத்தில் முருகப் பெருமானை தரிசித்த மகான்களுள் அவரும் ஒருவர். அவர் பெயரைச் சொல்லிவிட்டதால், மறுக்க முடியாமல் அவர்களோடு போனேன்.

நல்ல தரிசனம். மனம் அமைதியில் ஆழ்ந்தது. சிறிது நேரம் கழித்து வெளியே வந்தோம். இப்போது என்னோடு வந்த நண்பர்கள் அனைவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் முன்னால் நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் தனியாளாய் நடக்கிறேன். கடற்கரை மணலில் கால்கள் புதைந்து எழும்போது வலி அதிகமானது. யாரையாவது பிடித்துக்கொண்டு நடக்கலாம் என்றால், நண்பர்கள் முன்னால் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

நான் அவர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறேன். ஆனால் ஒருவர் காதிலும் விழவில்லை. ஒரு கட்டத்தில், `முருகப் பெருமானே’ என்று எனக்குள்ளாகப் புலம்பிக்கொண்டே அதற்குமேல் நடக்க முடியாது என்று நின்றுவிட்டேன். அப்போது யாரோ பின்னால் இருந்து, ‘பாபு’ என்று அழைத்தார்கள்.

என் தாத்தாவின் பெயர் சிவசிதம்பரம். அதையே எனக்கு வைத்தார்கள். வீட்டில் பாட்டி இருக்கும்வரை யாரும் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. மாறாக, அப்பாவிலிருந்து அனைவரும் ‘பாபு’ என்றே அழைப்பார்கள். பாபு என்று அழைத்த அந்தக் குரல் யாருடையது என்று திரும்பிப் பார்த்தேன்.

ஒரு துறவி நின்றிருந்தார். ஆறு அடிக்கும்மேல் உயரம். நல்ல திடகாத்திரமான உடல், மாநிறம், நெற்றியில் திருநீறு, கச்சம் போல் கட்டிய வேட்டி, மார்பில் துண்டை குறுக்காகக் கட்டியிருந்தார். முகமோ தேஜஸாக இருந்தது. கண்டால் கண்ணை அகற்ற முடியாத தேஜஸ்.

நான் பார்த்தபோது மீண்டும் அவர், ‘பாபு’ என்றார். பின்பு அவரே என்னை நோக்கி வந்தார். நான் ஒரு கணம் சுதாரித்துக்கொண்டு அவருக்கு நமஸ்காரம் சொன்னேன். அவரும், “என்ன பாபு, எப்படியிருக்க...” என்று நன்கு அறிந்தவர்போல் பேசினார். யார் அவர் என்று கேட்கத் தயக்கமாக இருந்தது. சிறுவயதிலிருந்து என்னை அறிந்தவராக இருக்கலாம்.

“நல்லா இருக்கேன்யா... நேத்து இங்கே கச்சேரி...”

“ம், தெரியும் தெரியும்...”

“நேத்து சுவாமி தரிசனம் பண்ணினேன்.”

``ம்... தெரியும்... தெரியும்”

“இப்போ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளை தரிசனம் செய்ய வந்தேன்”

அவர் என்னை ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “மூர்த்தி மேல ஈடுபாடு உண்டோ...” என்றார்.

அவரின் சொற்கள் என்னுள் ஊடுருவுவது போல இருந்தன.

“ஆமாம் ஐயா. திருச்சி கோயிலுக்குக் கூடப் போயிருக்கேன். இங்கே அதிஷ்டானம் இருப்பது இப்போதான் தெரியும். ஏதோ இன்னிக்கு அனுக்கிரகம் கிடைச்சது.”

அவர் என் பேச்சைக் கேட்டபடி தலையாட்டிக்கொண்டே வந்தார். என் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி விசாரித்துக்கொண்டு வந்தார். உறவினராக இருக்கலாம் அல்லது அப்பாவுக்கு நெருக்கமான - சென்னை கௌரிவாக்கத்தில் இருக்கும் சச்சிதானந்த சுவாமி மடத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அவர் யார் என்று விசாரிக்கவேயில்லை. விசாரிக்கத் தோன்றவில்லை. பேச்சு சுவாரஸ்யத்தில் நடந்து மண்டபம் வரைக்கும் வந்துவிட்டோம். மேட்டில் பக்க வாத்தியம் வாசிக்கும் நண்பர்கள் எல்லாம் நின்றிருந்தார்கள்.

நண்பர்களிடம், “என்னப்பா... விட்டுட்டு வந்துட்டீங்க... ஏதோ சுவாமிகள் வந்தார் அதனால் வந்து சேர்ந்தேன்” என்று சொல்லவும் நண்பர்களும் அவருக்கு வணக்கம் சொன்னார்கள். என் பையை நண்பர்களிடமிருந்து வாங்கி அதிலிருந்து என் பர்ஸை எடுத்தேன். சுவாமிகளுக்கு ஏதாவது சம்பாவனை செய்யலாம் என்பது என் எண்ணம். பர்ஸிலிருந்து நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு அவரை நோக்கித் திரும்பினால் அவரைக் காணோம்.

ஒரு கணம் உடல் ஆடிப்போனது. பத்து நொடிகளுக்கு முன்புவரை நின்ற மனிதர் எங்கு போனார்... நண்பர்களை விசாரித்தால், அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. நண்பர்களை நாலா திக்கிலும் அனுப்பி அவரைத் தேடச் சொன்னேன். அவ்வளவு விரைவாக எப்படி ஒருவர் கடக்க முடியும்... நண்பர்கள் ஓடினார்கள். நான் அப்படியே அமர்ந்துவிட்டேன்.

அப்போதுதான் என் கால்வலி நினைவுக்கு வந்தது. நடக்க முடியாமல் தானே நின்றோம்... அப்புறம் எப்படி இவ்வளவு தொலைவு வலி மறந்து நடந்துவந்தோம்... அந்த மனிதரைப் பார்த்த கணத்திலிருந்தே வலி மறந்து போய்விட்டது என்று புரிந்தது.

தேடிப்போன நண்பர்கள் சில நிமிடங்களில் திரும்பி வந்தார்கள். யாருக்கும் அவர் கிடைக்க வில்லை. மனம் தேம்பத் தொடங்கியது. கண்ணீர் பெருகி வழிந்தது. என்னைத் தேடி வந்து வழிநடத்திய அந்த தெய்வம் எது... என் வலி நீக்கிக் கரை சேர்த்த அந்த சக்தி எது... இறைவா... என்று வாய்விட்டுக் குரல்கொடுக்கவும், ‘முருகா... முருகா...’ என்ற பக்தர்களின் கோஷம் எழவும் சரியாக இருந்தது.

சுவாமி ஜயந்திநாதர் புறப்பாடு. அவர் கடற்கரை மண்டபம் வரை எழுந்தருளியிருக்கிறார். சிவாசார்யர் மகா தீபாராதனை செய்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் சுவாமி மீண்டும் கோயில் பிராகாரத்துக்குள் சென்றுவிட்டார்.

என் மேனி சிலிர்த்தது. வந்தது யார் என்று கண்டுகொண்டேன். ஓடிச்சென்று சுவாமி நின்ற இடத்தில் விழுந்து வணங்கினேன். இந்தக் கலியுகத்தில் தெய்வம் காட்சி தருமா என்று எத்தனையோ பேர் கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் பதில்... `தரும்!’.

மனித ரூபத்தில் எப்போது வேண்டு மானாலும் தெய்வம் தோன்றி வழிநடத்தும். நம் கவலைகளையும் வலிகளையும் நீக்கும். அதை தரிசிக்கவும் அனுபவிக்கவும் நமக்குத் தேவை உறுதியான நம்பிக்கை மட்டுமே.

‘உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை’ என்னும் மகாகவியின் வார்த்தையில் உள்ள சத்தியத்தைப் புரிந்து கொண்டேன். அதன்படியே என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.”

உணர்ச்சிப்பெருக்கோடு சிவசிதம்பரம் அவர்கள் பேசிமுடிக்க, நமக்கும் அவரோடு இணைந்து தெய்வத்தை நேரில் தரிசித்த திருப்தி. நன்றி சொல்லி விடைபெற்றோம்!