பழைமையான கோயில்கள், நம் பண்பாட்டின் அடையாளங்கள். அவை பராமரிக்கப்படாமல் சிதையும்போது, நம் பண்பாடும் வரலாறும் சேர்ந்தே சிதைகின்றன. ஆகவே, பழம்பெரும் ஆலயங்களைப் போற்றிப் பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உண்டு.

அந்த வகையில், வெகு சீக்கிரம் புனரமைக்கப்படவேண்டிய நிலையிலிருக்கிறது ஒரு திருக்கோயில். சுமார் 1000 வருடங்களுக்கு முன் உடையவர் ஸ்ரீராமாநுஜரால் கட்டப்பட்ட பெருமாள் ஆலயம் அது. திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் முக்கொம்பு அணைக்கு முன்னதாக சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ளது சிறுகாம்பூர். இங்குதான் ராமாநுஜர் எழுப்பிய ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே பாலாலயம் செய்யப்பட்ட போதிலும், இன்னமும் திருப்பணிகள் தொடங்கப்படவில்லை என்பதை அறிந்து அந்த ஆலயத்துக்குச் சென்றோம்.

ஆண்டாள் நாச்சியாரே, `அண்ணா' என்று அழைத்த பெருமைக்குரியவர் ஸ்ரீராமாநுஜர். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி, பெருமாளின் திருவருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்குமாறு அருள்விளக்கு ஏற்றிவைத்தவர் அவர். திருவரங்கம் முதலாக வைணவ ஆலயங்கள் பலவற்றிலும் மகிமைமிகு வழிபாடுகள் மற்றும் உற்சவ நடைமுறைகளை ஏற்படுத்திக்கொடுத்தவர்.

அதேபோல், ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பிற திவ்யதேசங்களிலும் முறைப்படி உற்சவங்களும் ஆராதனைகளும் நடத்தவேண்டி 74 சிம்மாசனாதிபதிகளையும் நியமித்து அனுப்பி வைத்தவர். ஆகம விதிமுறைகள் தவறாது பெருமாளுக்கு கைங்கர்யங்கள் நடைபெற வேண்டும் என்று இவையனைத்தையும், ‘திருவரங்கக் கோயிலொழுகு’ நூலில் பதிவும் செய்துவைத்தவர்.

திருவரங்கத்தில் கோரதம் அருகே ஒரு சிறிய கோசாலைவைத்துப் பராமரித்து வந்தார் ராமாநுஜர். அதேநேரம், பெருமாளுக்கு நிறைய நைவேத்தியங்கள் செய்யும்பொருட்டு, அதிக அளவில் பால், தயிர், அமுது தேவைகள் இருந்தன. ஆகவே, பெரிய கோசாலை அமைக்க விரும்பினார். அதற்குரிய இடமாக திருவரங்கத்துக்கு அருகில் காடுகள் அதிகம் இருந்த சோழங்கநல்லூர் பகுதியைத் தேர்ந்தெடுத்தார். அங்கு ஒரு பெரிய கோசாலையை ஏற்படுத்தினார்.

அடிக்கடி அங்குவந்து போன ராமாநுஜர், வேணு கோபாலன் ஆலயம் ஒன்றையும் அங்கே எழுப்பினார். இதற்குக் கோயிலொழுகு நூலில் சான்றுகள் உள்ளன என்கிறார்கள். இப்படியான மகத்துவத்தைக் கொண்ட ஸ்ரீவேணுகோபாலன் ஆலயத்தின் நிலை, தற்போது பக்தர்களின் மனதை வருந்தச் செய்வதாக உள்ளது.

1968-ல் ராஜம் ஐயங்கார் என்பவரால், இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்ய முடிவெடுக்கப் பட்டு பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் திருப்பணிகள் தொடரவில்லை.

தற்போது, ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய அனைத்துப் பகுதிகளுமே சிதிலமடைந்து காணப்படுகின்றன. பிரதான ஆலயத்துக்கு வெளியே காணப்படும் சிறிய மண்டபத்தில் தான் ஸ்ரீவேணுகோபாலன் குடிகொண்டிருக்கிறார்.

கையில் வெண்ணெய் ஏந்தியபடி, பவளவாய் இதழ்களில் புன்னகை தவழ, அற்புத தரிசனம்தரும் வேணு கோபாலரின் தரிசனம் மனத்தைக் கொள்ளைகொள்கிறது. கூடவே, விஷ்வக் சேனர், நம்மாழ்வார், கருடாழ்வார், ராமாநுஜர் ஆகியோரும் விக்கிரகத் திருமேனியராக எழுந்தருளியிருக்கிறார்கள்.

இந்த ஆலயத்துக்கென உற்சவ மூர்த்த மொன்று இருந்ததாகவும், அது தற்போது இல்லை; அது என்ன ஆனது என்ற தகவலும் தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள், இந்தப் பகுதியில் வசிக்கும் பக்தர்கள். அவர்களிடம், `இவ்வளவு சிறப்புமிகு ஆலயம் ஏன் இன்னும் புனரமைக்கப்படாமல் இருக்கிறது' என்று விசாரித்தோம்.

``1968-ம் ஆண்டு திருப்பணி செய்ய இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். அந்தத் துறை சார்பில், 1000 ஆண்டுப் பழைமையான ஆலயம் என்ப தால், இதற்குத் தொல்லியல் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வாங்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், தொல்லியல் துறையோ இந்த இடத்தை ஆய்வுசெய்ய வேண்டும் என்று சொல்லிக் காலம்கடத்திவருகின்றனர்'' என்கிறார்கள், பக்தர்கள்.

மட்டுமன்றி, திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்தைப்போன்றே இந்த இடத்திலும் ரங்கநாதருக்கு ஓர் ஆலயம் இருக்கலாம் என்றும் அதற்கானச் சான்றுகள் கோயிலொழுகு நூலில் உள்ளதாகவும் தகவல் சொல்கிறார்கள்!

2014-ம் ஆண்டு, அறநிலையத் துறையிடம் திருப்பணிகள் குறித்துக் கேட்டபோது, மீண்டும் தொல்லியல் துறையிடம் செல்லு மாறு அறிவுறுத்தினார்களாம். அதன்படியே செய்ய, தொல்லியல் துறையினர் ஆரம்பக்கட்ட ஆய்வுகளைச் செய்துவிட்டு போனதோடு சரி, மீண்டும் பணிகளைத் தொடங்கவே இல்லையாம். அவர்கள் தரப்பில் வேறு பதில்களும் இல்லை என்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களால் பெருமாளின் ஆலயம் திருப்பணி காணாமல் காத்திருக்க, பக்தர்களோ `ஆழிசூழ் முதல்வனுக்கு ஆலயம் எப்போது அமையுமோ' என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக்கொண்டு, இந்த ஆலயம் பாஞ்சராத்ர ஆகமத்தின்படி செயல் பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள்.

85 வயது நிரம்பிய சேதுராமன் என்னும் அர்ச்சகர் மட்டும் இங்கு பெருமாளுக்கு கைங்கர்யம் செய்துவருகிறார். இவருக்குச் சம்பளம் கிடையாது. பெருமாள் ஆராதனமே தன் வாழ்வின் பயன் என்று உழைத்துவருகிறார். கிளியநல்லூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் இவர், தினமும் ஆராதனைக்குரிய அபிஷேகத் தீர்த்தத்தையும் நைவேத்தியங்களையும் சுமந்துவந்து நித்திய கைங்கர்யம் செய்கிறார். சேவார்த்திகள் என அவ்வப்போது யாராவது வருவது உண்டு. மற்றபடி மக்கள் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

``திருப்பணியைத் தொடங்கினால், அதில் பங்கேற்க அடியார்களும் பொதுமக்களும் ஆர்வ மாக உள்ளனர். ஆனால், அதற்கு முதலில் அரசு அனுமதியைப் பெற வேண்டும். நாம் தொடர்ந்து எழுப்பும் கோரிக்கைகளின் மூலமாகவே அரசு அனுமதியைப் பெற முடியும். ஆம், இந்த அற்புத ஆலயம் மீண்டும் புத்தெழில் பெறுவது, நம் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் எழுப்புவதில்தான் இருக்கிறது'' என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

உண்மைதான்! ராமாநுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சகலவிதமான ஆராதனைகளும் கோலாகலமாகச் செய்யப்பட்ட வேணுகோபால சுவாமி ஆலயம் மீண்டும் பொலிவுபெற, அந்த ஆலயத்தின் திருப்பணிகள் குறித்த முயற்சிகளுக்கு நாமும் தோள்கொடுப்போம்.

அத்துடன், வாய்ப்புக்கிடைக்கும்போது சிறுகாம்பூர் சென்று வேணுகோபாலரை தரிசித்து, அவரிடமும் பிரார்த்தனை செய்து வருவோம்; மீண்டும் பொலிவுடன் எழும்பட்டும் ஆலயம்.

திருவரங்கத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் திருவெள்ளறையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும் உள்ளது இந்த ஆலயம்.