Published:Updated:

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - பிள்ளை வரம் அருளும் பச்சை மாமருந்து!

மண் மணக்கும் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
மண் மணக்கும் தரிசனம் ( காத்தாயி அம்மன் )

சித்தாடி - காத்தாயி அம்மன் கோயில் பிரசாதம்

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - பிள்ளை வரம் அருளும் பச்சை மாமருந்து!

சித்தாடி - காத்தாயி அம்மன் கோயில் பிரசாதம்

Published:Updated:
மண் மணக்கும் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
மண் மணக்கும் தரிசனம் ( காத்தாயி அம்மன் )

கிராமிய வழிபாடுகளில் பெண்தெய்வ வழிபாடுகள் முக்கியத்துவம் பெறும். அதிலும் `காத்தாயி’ எனும் காவல்தேவி வழிபாடு குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில், திருவாரூர் மாவட்டம் - குடவாசல் வட்டத்தில், சித்தாடி எனும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோயில் பிரசித்திபெற்றுத் திகழ்கிறது. காவிரியின் கிளைநதியாக விளங்கும் முடிகொண்டான் ஆற்றங்கரையில், சோலைகளும் வயல்களும் சூழ கோயில்கொண்டிருக்கும் காத்தாயி அம்மன், பயிர்களைக் காக்கும் அம்மனாக அருள்பாலிக்கிறாள்.

இந்த அன்னையின் ஆலயத்தில் - மகாமண்டபத்தில் பச்சைவாழி அம்மன் என்ற பெயர் கொண்ட பார்வதிதேவியும் காட்சியளிக்கிறாள். இவள், பச்சைப் பயிர்களான தாவரங் களைக் காப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். இந்த அம்மனின் சந்நிதிக்கு வலப்புறம் தண்டாயுதபாணி அருள்கிறார்; இடப்புறத்தில் காத்தாயின் அம்மனின் சந்நிதி.

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - பிள்ளை வரம் அருளும் பச்சை மாமருந்து!

சந்நிதியில், ஒரு கரம் தாமரை மலரை ஏந்தியிருக்க, மறு கரத்தை லாகவமாக மடித்துவைத்து, இடது பாதத்தை வலது தொடையின் மீது வைத்து அமர்ந்த கோலத்தில் அருள்கிறாள், காத்தாயி அம்மன். அன்னையின் வலது திருவடி அருகில் முனிவர் ஒருவரும் அமர்ந்துள்ளார். தலையில் மூன்று முடிச்சுகளுடன் அருள்கிறாள் காத்தாயின் அம்மன். வேறெங் கும் காண்பதற்கரிய திருக்கோலம் இது.

கோயிலின் பிராகாரத்தில் பேச்சாயி, லாடசன்யாசி, வீரபாகு, வீரமித்ரர், பொம்மி, வெள்ளையம்மாள், ஒன்பது முனிவர்கள் ஆகியோரின் திருமேனிகளும் அமைந்துள்ளன.

பொதுவாகக் கிராமியக் கோயில்களில் ஆகம வழிபாடுகள் இடம்பெறுவதில்லை. ஆனால், இந்தக் கோயிலில் ஆகமப் படியே அன்னை வணங்கப்பட்டு வருகிறாள்.

“சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு சித்தாடியில் வசித்த சிவாசார்யர் ஒருவரின் கனவில் அம்பிகை தோன்றினாள். அருகிலுள்ள முடிகொண்டான் ஆற்றில் தான் தவமிருப்பதா கவும், தன் திருமேனியை எடுத்து பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபட்டால், இப்பகுதி மக்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாகவும் பயிர்கள் செழிக்க விவசாயம் தழைக்க அருள்வேன் என்றும் அருள்பாலித்தாளாம்.

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - பிள்ளை வரம் அருளும் பச்சை மாமருந்து!

பொழுது விடிந்ததும் சிவாசார்யர் விஷயத்தை ஊராரிடம் தெரிவித்தார். அனைவரும் ஆற்றுக்குச் சென்றனர். அன்னை சொன்னபடியே அவளின் திருமேனியைக் கண்டெடுத்து வந்து, கோயில் அமைத்து காத்தாயி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

சித்தாடியில் அருளும் அன்னை காத்தாயி அம்மனின் சிலை இயற்கையாகவே உருவான சிலை. முருகப்பெருமானை மணந்துகொள்வதற்குமுன், இந்தச் சித்தாடி கிராமப்பகுதியில் மூன்று கொண்டை களுடன் கூடிய காத்தாயி அம்மன் உருவில் தங்கியிருந்தாளாம் வள்ளியம்மை.

அவள் தேவலோகத்துக்குத் திரும்பும் வேளையில், கலிகாலத்தில் மக்களை வழிநடத்தி ஞானசக்தியிடம் ஒப்படைக்கும் பொருட்டு தான் மீண்டும் அவதரிக்க வேண்டும் என்பதால், மூன்று கொண்டைகளுடன் கூடிய தனது காத்தாயி உருவைப் பூமியில் புதைத்து விட்டுச் சென்றாளாம்.

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - பிள்ளை வரம் அருளும் பச்சை மாமருந்து!

காலபோக்கில் அந்த இடத்தின் மீது முடிகொண் டான் நதித் தடம் இயற்கையாக அமைந்தது. பிற் காலத்தில் அன்னையின் திருவுளப்படி ஆற்றிலிருந்து அவளின் திருமேனி எடுக்கப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது இந்தக் கோயிலின் தல வரலாறு.

நாட்டுப்புறக் கதைகள் பலவும் காத்தாயி அம்மன் கதையை விவரிக்கின்றன. `அம்மை போன்ற வெப்பு நோய்கள் அணுகாமல் இருக்கவும், நீர்வளம் குன்றாது தேவையான மழை பொழியவும், பயிர்கள் சேதமடையாமல் இருக்கவும், ஊர் மக்கள் நிம்மதி யாக வாழவும் கிராமத்து அம்மன் கோயில்களில் மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்; நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். இந்த வழிபாடு பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடர் கிறது' என்று விளக்குகின்றன அந்தக் கதைகள்.

நம்பிக்கையோடு காத்தாயி அம்மனை வழிபட் டால், அவள் கிராமத்தையும் மக்களையும் அவர் களின் வாழ்வாதாரத்தையும் காத்து நிற்பாள் என்பது இப்பகுதி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. கோயிலின் அர்ச்சகரான வினோத் சிவாசார்யரிடம் பேசினோம்.

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - பிள்ளை வரம் அருளும் பச்சை மாமருந்து!

``அனைத்துத் தரப்பு மக்களும் பேதமின்றி இந்த அன்னையை வழிபடுகிறார்கள். சுமார் 3500 குடும்பங்களுக்கு குலதெய்வமாகத் திகழ்கிறாள் எங்கள் காத்தாயி அம்மன்.

`சித்தாடி ஸ்ரீகாத்தாயி அம்மன் பக்த ஜன டிரஸ்ட்’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் இவளைக் குலதெய்வமாகக் கொண்டிருக்கும் குடும்பத்தார் மற்றும் பொதுமக்களிடம் நன்கொடை பெற்று, கடந்த 2001-ல் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோயிலைப் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.

இங்கு `பச்சை படைத்தல்' எனும் வழிபாடு சிறப்பானதாகும். நான்கு திசைகளிலும் இளநீர் வைத்து, தண்ணீ ரில் ஊறவைத்த பச்சரிசியுடன் பல வகை பழங்களும் சேர்த்து அம்மனுக்குப் படையல் செய்வார்கள். இதனால் பிரார்த்தனைகள் விரைவில் நடந்தேறும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வெண்பொங்கல் வைத்து வழிபடுவர். அவர்களுக்குப் பச்சிலை மருந்து தருகிறோம். அம்பாளின் அனுக்கிரகத் தால் ஏராளமானோர் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளார்கள்.

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - பிள்ளை வரம் அருளும் பச்சை மாமருந்து!

சித்ராபௌர்ணமி அன்று ஏராள மான பக்தர்கள் காவடி எடுத்து வந்து அன்று நிகழும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பலன்பெறுகிறார்கள். தைப் பொங்கல் திருநாளன்று லட்சார்ச்சனை, நவசண்டிஹோமம், விளக்கு பூஜை, மகா அபிஷேகம் ஆகியவை நடை பெறும். இந்த வைபவங்களில் சுற்று வட்டாரத்து விவசாயப் பெருமக்கள் கலந்துகொண்டு, காத்தாயி அம்மனை வழிபட்டு வளம் பெறுகிறார்கள்” என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்.

குழந்தையைக் காப்பாற்றிய திருக்கதை!

பெரும்பாலான ஆலயங்களில் காத்தாயி அம்மன் ஒரு குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தருவாள். இதுகுறித்து ஒரு கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு இளம்பெண் ஒருத்தி, தான் கற்புக்கரசி என்பதை நிலைநாட்ட தன்னுடைய குழந்தையுடன் தீயில் பாய்ந்தாள். அப்போது, திடுமென அங்கு தோன்றிய வயது முதிர்ந்த ஒரு பெண்மணி தீயில் குதித்து, அந்தக் குழந்தையைக் காப்பாற்றி விட்டாள்.

ஆனால் அதன்பிறகு, அவளைக் காணவில்லை. ஆகவே அந்தப் பெண்மணியை தெய்வமாகவே கருதினர் மக்கள்.குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு நிற்கும் கோலத்தில் சிலை வடிவமைத்து, `அன்னை காத்தாயி' எனப் பெயரிட்டு பூஜித்து வழிபடத் தொடங்கினார்கள்.

தைப்பொங்கல்: மண் மணக்கும் தரிசனம்! - பிள்ளை வரம் அருளும் பச்சை மாமருந்து!

எப்படிச் செல்வது?

கும்பகோணம்- நன்னிலம் சாலையில், `பிலாவடி’ என்ற ஊருக்கு அருகே, சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து, கார் மற்றும் ஆட்டோ வசதியுண்டு.

குழந்தையுடன் அருளும் காத்தாயி அம்மனின் திருக்கோல தத்துவம்!

சில ஆலயங்களில் கையில் குழந்தையுடன் அருள்வாள் காத்தாயி அம்மன். எப்படி, ஒரு குழந்தையானது மனத்தில் பயம், காமம், குரோதம், மற்றும் பொறாமை இல்லாமல் இயற்கையாக வாழ்கிறதோ, அப்படியே ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும். அப்படியானவர்களைச் சொந்தப் பிள்ளையைப் பாதுகாப்பது போல் காத்து நிற்பாள் அன்னை. இதையே அன்னையின் திருக்கோலம் குறிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism