Published:Updated:

வண்டாடிச் சித்தர்கள் வழிபடும் மாசிமகம்!

கும்பகோணம் மாசிமகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கும்பகோணம் மாசிமகம்

மாசி மகம்

பூரணச் சந்திரனுடன் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் இணைந்து வரும் நாள்களில் பெருவிழா எடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவ்வகையில் பெளர்ணமியும் மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் மாசி மகம் எனப் போற்றப்படுகிறது.

கம் சிம்ம ராசிக்குரியது. சிம்ம ராசி சூரியனின் ராசி. சூரியனே உயிர்களின் ஆன்மாவாக இருப்பவன். பொதுவாகவே புண்ணிய தினங்களில் தீர்த்தமாடுவது விசேஷம். அதிலும் சூரியனுக்குரிய மக நட்சத்திர நாளில் தீர்த்தமாடுவது, நம் ஆன்மாவை சுத்தப்படுத்தும்; நம் பாவங்களைப் போக்கும்.

அவ்வகையில் 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மகாமகம் திருவிழாவும், ஆண்டுதோறும் மாசி மகமும் கும்பகோணம் தலத்தில் பெருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகிறது.

க நட்சத்திரத்தை, ‘பித்ரு தேவதா நட்சத்திரம்’ என்று அழைப்பர். பித்ரு தேவதாதான் பித்ருக்களுக்குத் திருப்தி தருபவர். எனவே மாசி மகத்தன்று செய்யும் புனித நீராடுதல், பித்ரு வழிபாடு ஆகியன பித்ரு தேவதாவை மகிழ்விக்கும். அதன்மூலம் நம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும். அதனால்தான் மாசி மகத்தன்று புனித நீராடுவதை, ‘பிதுர்மஹா ஸ்நானம்’ என்கிறது சாஸ்திரம்.

கா புராணம், மாக புராண அம்மானை ஆகிய நூல்கள் மாசி நீராடலின் மகத்துவத்தை விவரிக்கின்றன. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்மராசியில் சஞ்சரிக்கும் ஆண்டில் வரும் மாசிமகத்தை மகாமகம் என்று போற்றுவர்.

சிவ ஆணைப்படி மகத்துவமான இந்த நாளில், கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, குமரி, பயோடினி, சரயு ஆகிய ஒன்பது நதிகளும் இந்தத் தீர்த்தத்தில் நீராடி புனிதம் பெற்றனராம். ஆகவே அன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கி நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகாமகத்தன்று மட்டுமன்றி அனைத்து மாசி மகத்தின்போதும் இங்கு நீராடுவது புண்ணியத்தைத் தரும் என்கிறது மாசிமக புராணம்.

வண்டாடிச் சித்தர்கள் வழிபடும் மாசிமகம்!

மாசி மகத்தில் கிரிவலம் வந்தால்...

மாசிமக நாளில் திருவண்ணாமலையில் ‘வண்டாடிச் சித்தர்கள்’ கிரிவலம் வந்து வழிபடுவார்களாம். அளவில் ஒரு வண்டினைவிடவும் சிறியதாகத் திகழ்பவர்கள் இவர்கள். மாசிமகத்தன்று நாமும் கிரிவலம் சென்றால் இவர்களின் அருளைப் பெற வாய்ப்பு உண்டு; அதனால் நம் வினைகள் நீங்கும் என்பது அடியார்களின் நம்பிக்கை. வல்லாள மகராஜா தம்பதியருக்கு அண்ணா மலையார் பிள்ளையாய் வந்து சிராத்தம் செய்த நாளும் மாசிமகம்தான். இதையொட்டிய வைபவ மும் மாசிமகத் திருநாளில் திருவண்ணா மலையில் நடைபெறும்.

வண்டாடிச் சித்தர்கள் வழிபடும் மாசிமகம்!

பாசமறுத்தத் துறை

முன்னொரு காலத்தில் கொடியவனான மன்னன் ஒருவன் இருந்தான். அவனை வென்று மக்களுக்கு விமோசனம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ள தன் சீடனைச் சந்திக்கச் சென்றார் வருணனின் குரு.

அப்போது இருள் சூழ்ந்திருந்ததால் வருவது யாரோ பகைவர் என்று கருதி, குருநாதர் மீது பாசம் ஏவினான் வருணன். குரு மரணித்தார். வருணனைப் பாவம் பற்றியது. அது அவனைப் பாசத்தால் கட்டி கடலில் தள்ளியது. தேவர்கள் திகைத்தனர்; பரமனைச் சரணடைந்தனர்.

சிவபெருமானும் கடற்கரைக்குச் சென்று வருண னின் பாசத்தை அறுத்து விடுதலை அளித்தார். இன்றும் அந்தக் கடற்தீரம் பாசமறுத்த துறை என்றே அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரம். மாசி மகத்தன்று இங்கு தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.

வண்டாடிச் சித்தர்கள் வழிபடும் மாசிமகம்!

அப்பர் தெப்பம்!

`மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்' என்று சென்னை- மயிலாப்பூரில் மாசி மகம் அன்று நிகழும் கடலாடும் வைபவத்தின் சிறப்பைப் பாடுகிறார் திருஞான சம்பந்தர்.

நெல்லையிலும் மாசிமகம் சிறப்பு பெறும். அன்று நெல்லையப்பர் கோயில் பொற்றாமரைக் குளத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பத்திருவிழா நடைபெறும். அதற்கு ‘அப்பர் தெப்பம்’ என்று பெயர்.

வண்டாடிச் சித்தர்கள் வழிபடும் மாசிமகம்!

இன்னும்சில அற்புதங்கள்...

ஶ்ரீமுஷ்ணம் கோயில் கொண்டிருப்பவர் பூவராக ஸ்வாமி. மாசிமகம் உற்சவம் இத்தலத்தில் சிறப்புற நடைபெறும். மாசிமகத்தன்று உற்சவ மூர்த்தியான ஶ்ரீயக்ஞ வராகன் ஶ்ரீதேவி-பூதேவி சமேதராக, சிதம்பரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள `கிள்ளை' சமுத்திரக் கரைக்குத் தீர்த்தமாட எழுந்தருளும் வைபவம் கோலாகலமாக நடை பெறும்.

மாசி மகத்தன்று உபதேசம் பெறுவது மிக மிகச் சிறந்தது. பிரம்மோபதேசம், வேறு ஏதாவது மந்திர உபதேசம் முதலானவற்றை இந்த நாளில் பெற்றால், அதற்குத் தனிச் சிறப்பும் பலனும் உண்டு.

ல்லோருக்கும் தாயாக அருளும் அம்பிகை அவதாரம் செய்த நன்னாள் மாசிமகம். இந்த நாளில் அம்பிகைக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்து வரங்களும் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு 27.2.21 சனிக்கிழமை அன்று மாசிமகம் வருகிறது. இந்த நாளில் வாய்ப்பிருக்கும் அனைவரும் புனித நீராடி நம் இஷ்ட தெய்வங்களையும் குல தெய்வங்களையும் முன்னோர்களையும் வழிபட்டு வளம் பெறுவோம்.

வண்டாடிச் சித்தர்கள் வழிபடும் மாசிமகம்!

நம்பிக்கை ஒன்றே நல்வாழ்வைத் தரும்

ருமுறை அன்னை சாரதாதேவியை தரிசிக்க வந்த சீடர் ஒருவர், ''அன்னையே... புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் மனிதர்களும் யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகளும் மடிந்து போகின்றன. ஆனால், கடலுக்குள் வாழும் நீர்வாழ் உயிரிகளான மீன் போன்றவை அழிவதில்லையே... எப்படி?'' என்று கேட்டார்.

மெள்ள புன்னகைத்த சாரதாதேவியார், ''மீன்கள் மட்டுமே நீரின் போக்குக்கு எதிர்த் திசையில் நீந்தும். நீரில் வாழும் மீன்களுக்கு, 'தங்களைக் காக்கும் வல்லமை நீருக்கு உண்டு' என்ற நம்பிக்கை அதிகம். எனவேதான் புயலோ, மழையோ எது வந்தாலும் மீன்கள் பாதிக்கப்படுவதில்லை. நம்பிக்கை ஒன்றே நல்ல வாழ்வைத் தரும்'' என்றார்!


- ச. கோபிநாத்