சாஸ்திரங்கள் நால்வகை தர்மங்களைப் பரிந்துரைக்கின்றன. அவை சாமான்ய தர்மம், சேஷ தர்மம், விசேஷ தர்மம், விசேஷதர தர்மம் ஆகியவை.

பெற்றோர் பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், குருவிடம் சீடன் நடந்துகொள்ளவேண்டிய முறைகள் என்னென்ன, இல்லற ஒழுக்கங்கள் என்னென்ன... இவை போன்று சாமான்யர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை சாமான்ய தர்மம்.

இந்தத் தர்மத்தைச் செவ்வனே கடைப்பிடித்துவந்தால், தாஸ பாவம் அதாவது தொண்டு செய்யும் மனப்பக்குவம் வாய்த்துவிடும். அப்போது கடைப்பிடிக்க வேண்டியது சேஷ தர்மம்.

தொலைவிலிருந்தாலும் எப்போதும் இறைச் சிந்தனையில் லயித்திருப்பது விசேஷ தர்மம். இறைவனைவிடவும் அவரின் தொண்டர்களுக்குத் தொண்டு புரிவது விசேஷதர தர்மம் ஆகும்.

சாஸ்திரம் இப்படிச் சொல்கிறதென்றால் நம் பண்டைய தமிழ் இலக்கியங்களும் `அறத்தான் வருவதே இன்பம்...’ எனக்கூறி, ஆதுலர்க்குச் சாலை அமைத்தல், மாந்தர்க்கு உணவு, பசுவுக்கு வாயுறை எனத் தொடங்கி, நாம் பின்பற்றவேண்டிய பல்வகை அறங்களைப் பட்டியலிடுகின்றன.

இப்படியான தர்மங்கள் - அறங்கள் அனைத்தையும் தன்னுள் பொதிந்து அவற்றின் ஒட்டுமொத்த திருவடிவாகவே திகழ்வதால்தானோ என்னவோ, அந்தத் தலத்தின் இறைவன் தருமபுரீஸ்வரர் எனும் திருநாமத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார் போலும். அவரின் பெயரையொட்டியே அவ்வூருக்கும் திருத்தருமபுரம் எனும் பெயர் துலங்க, தான் பிறந்த அவ்வூரின் பெருமையை எண்ணிச் சிலாகித்தபடியே ரத வீதியில் நடந்துகொண்டிருந்தார் அந்த அடியவர்.
.சிவமகுடம் - பாகம் 2 - 44.
மேனியிலும் திருமுகத்திலும் துலங்கிய வெண்ணீறு புறத்துக்குப் பொலிவை தந்ததென்றால், அவரின் உள்ளமும் உதடுகளும் இமைப்பொழுதும் அசராமல் உச்சரித்துக்கொண்டிருக்கும் சிவநாமம், அவரின் அகத்தையும் பொலிவுபடுத்தியிருக்க வேண்டும். அகத்தின் அழகு திருமுகத்தில் ஒளிர்ந்தது.

வீதிகளைக் கடந்து மெள்ள சிவாலயத்தை நெருங்கியவர், உள்ளே பிரவேசித்தார். முறைப்படி ஆலயத்தை வலம்வந்து, கொடி மரம் பணிந்து, நந்தி வணக்கம் செய்து நகர்ந்து அர்த்தமண்டபத்தை அடைந்து கருவறையை நோக்கினார். பார்த்த கணத்திலேயே உள்ளம் கசிந்தது; அவரையும் அறியாமல் கண்ணீர் உகுத்தன.

``எப்பேர்ப்பட்ட பேற்றினை அருளிவிட்டாய் என் இறைவா. யாருக்குக் கிடைக்கும் இந்தக் கொடுப்பினை... என் சிவமே... என் சிவமே...’’ அரனிடம் வாய்விட்டு அரற்றினார் அடியார்!

``அன்றொரு நாள், ராவணனின் இசைக்கு மயங்கி அவனுக்கு ஈஸ்வரப்பட்டம் அளித்தாய். கந்தர்வர் இருவரின் இசையை எப்போதும் செவிமடுத்து மகிழும் விதம் அவர்கள் இருவரையும் ஆபரணங்களாக்கிச் செவியில் பூட்டிக்கொண்டாய். ஆனால், அவர்களை விடவும் பெரும்பாக்கியம் செய்தவன் நான்.

தென்னாடுடைய இறைவனாம் உம்மைப் போற்றி எந்நாட்டவரும் உள்ளம் உருகும்படி சீர்காழிப் பிள்ளை பாடும் பதிகங்களுக்கு பண் அமைத்து யாழிசைக்கும் பேறு யாருக்குக் கிடைக்கும். அந்த நல்ல வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறீர் எனில்... நான் செய்த புண்ணியம்தான் என்ன...’’ நெக்குருகிப் புலம்பினார். உணர்ச்சிப்பெருக்கில், தன் யாழிசைக் கருவியை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டார்.
.சிவமகுடம் - பாகம் 2 - 43.
கருவறையில் பொலிந்துகொண்டிருந்த தீபங்களின் சுடர்கள் ஏதோ காரணமாய் இன்னும் அதிகமாய் ஒளிவீச, லிங்கத் திருமேனியின் மலர் ஆரங்களில் ஒன்றிலிருந்து பூ உதிர்ந்தது. அடியார் மேலும் உணர்ச்சிவயப்பட்டார். தன் அரற்றலைக் கேட்டு, தன் திருப்பணியின் பொருட்டு உள்ளம் மகிழ்ந்து பூ உதிர்த்து இறைவன் ஆசி வழங்குவதாகப்பட்டது அவருக்கு!

இவர் இப்படியென்றால் தருமபுரத்து நாயகனாம் ஈசனுக்கோ வேறுவிதமான பூரிப்பு போலும். அன்று அங்கு நிகழப்போகும் அற்புதத்தையும் அதன் காரணம் தொட்டு புதிய திருப்பெயர் ஒன்றை தான் ஏற்கப் போவதையும் எண்ணி சிவம் மகிழ்ந்தது போலும். அதன் வெளிப்பாடாய் பெருங்காற்று ஆலயத்துள் புகுந்து மணிகளை அசைக்க, `டாண்... டாண்...’ என்று ஒலித்த ஆலய மணிகளின் நாதம் `ஓம்... ஓம்...’ என்றே கேட்டது அந்த அடியவரின் திருச்செவிகளில். ஆனால், அந்த ஓசையையும் மிஞ்சிக் கேட்டது, திடுமென எழும்பிய பஞ்சாட்சர முழக்கம்.

அடியவர் வாயிலை நோக்கினார். திபுதிபுவென ஒரு கூட்டம் உள்ளே நுழைந்துகொண்டிருந்தது. அடியவர் புரிந்துகொண்டார்.

``சீர்காழிப் பிள்ளை வந்துவிட்டார்’’ என்று தனக்குள் கூறியவாறு வாயிலை நோக்கி நகர்ந்தார்.

அவர் யூகித்தது சரிதான். அடியார்கள் புடைசூழ ஆலயத்துக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தார் திருஞானசம்பந்தப் பெருமான்.

``வர வேண்டும்... வர வேண்டும்... தங்கள் வரவால் எங்கள் ஊர் தருமபுரம் மேலும் சிறப்புப் பெற்றுவிட்டது’’ சிலிர்ப்புடன் வரவேற்றார் அடியார்.

``இல்லை... தங்களைப்போன்ற அன்பர்களால் அவர்களின் அறங்களால் பெரிதும் பேறு பெற்ற இந்த மண்ணுக்கு வந்ததால், நான் புனிதம் பெற்றேன். அதன்பொருட்டு தங்களுக்குத்தான் நான் நன்றிகூற வேண்டும் யாழ்ப்பாணரே...’’ என்றபடியே அருகில் வந்து நீலகண்ட யாழ்ப்பாணரை அன்புடன் அணைத்துக்கொண்டார் திருஞானசம்பந்தர்.

அந்தக் காட்சியைக் கண்டு அந்த இடமே சிலிர்ப்பில் ஆழ்ந்தது. ஆலயம் அதிர சிவநாம முழக்கம் எழுந்தது. அதேநேரம், வேறொரு சிறு கூட்டம் உள்நுழைந்து சீர்காழிப் பிள்ளையை வணங்கிப் பணிந்தது. தொடர்ந்து நீலகண்ட யாழ்ப்பாணரையும் வணங்கியது.

``இவர்கள் என் உறவுகள்...’’ என்று திருஞான சம்பந்தரிடம் அவர்களை அறிமுகப்படுத்திய யாழ்ப்பாணர், உறவுக்கூட்டத்தைப் பார்த்துக் கூறினார்....

``இவரே நம் சிவக்கொழுந்து. சீர்காழிப் பிள்ளை...’’

யாழ்ப்பாணர் கூறிமுடிக்குமுன் உறவுக் கூட்டத்தில் ஒருவர் இடைமறித்துச் சொன்னார்: ``அறிவோம்... கருவிலேயே திருவான பிள்ளை. அதையும் அறிவோம். உங்களின் யாழிசையால் இவரின் பதிகங்கள் புகழ்பெற்றிருப்பதையும் அறிவோம்...’’

அவர் இந்த வார்த்தையைச் சொல்லவும் பதறிப்போனார் யாழ்ப்பாணர்.

``என்ன வார்த்தை கூறிவிட்டீர்...’’ என்று அவர் மீது பாயவும் யத்தனித்தார். திருஞான சம்பந்தர் தடுத்தார்.
.சிவமகுடம் - பாகம் 2 - 42.
``யாழ்ப்பாணரே... அவர் கூறியதில் தவறென்ன. தங்களின் யாழிசைக்கு நிகரேது...’’

``சிவ சிவா... ஐயனே என்ன இது... கொடியைத் தாங்கும் விருட்சத்துக்கு கொடியா ஆதார பீடம்..?’’

சீர்காழிப்பிள்ளை புன்னகைத்தார்.

``யாழ்ப்பாணரே... கோபுரக் கலசங்கள் விண்ணுயர ஒளிர்ந்து பலர் கண்பட மின்னலாம். ஆனால், கோபுரம் நிமிர்ந்து நிற்க அஸ்திவாரம் அல்லவா முக்கியம். அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. நீர் அஸ்திவாரம்...’’

``ஐயனே என்ன இது... உலா காணும் மூர்த்திக்கல்லவா ஊராரின் வந்தனமும் மரியாதையும். அவை தனக்கானவை என்று மூர்த்தியின் ரதத்தை இழுக்கும் மாடுகள் எண்ணுவது தகுமா? அப்படித்தான் ஐயா... தாங்கள் மூர்த்தி... தங்கள் கீர்த்தியின் நிழலில் இளைப்பாறும் ஏழை நான்...’’

அழுதேவிட்டார் யாழ்ப்பாணர். அவரைத் தேற்ற எண்ணினார் ஞானசம்பந்தப் பெருமான்.

``யாழ்ப்பாணரே... அடியவர்கள் மீதும் அடியேனின் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் அன்பு புரிகிறது. என்றாலும்...’’

அவரை மேற்கொண்டு பேசவிடவில்லை யாழ்ப்பாணர்.

``ஐயனே! என் யாழிசைமீது ஆணை. இங்கேயே இப்போதே யாழினால் இசை கோக்கமுடியாதபடி ஒரு பதிகத்தைத் தாங்கள் பாட வேண்டும். தங்களின் அருமையை இவர்கள் உணர வேண்டும்...’’
.சிவமகுடம் - பாகம் 2 - 41.
நடப்பது நாதனின் திருவிளையாடல் என்பது திருஞானசம்பந்தப் பெருமானுக்குப் புரிந்தது. அதைத் தவிர்க்க தன்னால் இயலாது என்பதையும் புரிந்துகொண்டார். கணீரென்ற குரலில் அந்தப் பதிகத்தைப் பாடினார்.

மாதர்மடப்பிடியும் மடஅன்னமும் அன்னதோர்

நடையுடை மலைமகள் துணையென மகிழ்வர்

பூதஇ னப்படை நின்றிசைபாடவும் ஆடுவர்

அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர்

வேதமொ டேழிசை பாடுவராழ்கடல் வெண்டிரை

யிரைந்துரை கரைபொருது விம்மிநின் றயலே

நாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை

யெழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே

- செவிமடுப்போர் யாவரும் கசிந்துருகும்படி இங்கே சீர்காழிச் சிவக்கொழுந்து பதிகம்பாடிக்கொண்டிருக்க, அங்கே மேற்குமலைத் தொடர் அருகே மலைநாட்டுக்குச் செல்லும் நெடும்பாதை ஒன்றின் குறுக்கே பெரும் தடைகளாய்ப் போடப்பட்டிருந்த மலைப் பாறைகளைச் சிதறடித்துக்கொண்டிருந்தது பெருங்களிறு ஒன்று!

- மகுடம் சூடுவோம்...