Published:Updated:

'பவானி நீ!'

செளந்தர்ய லஹரி
பிரீமியம் ஸ்டோரி
செளந்தர்ய லஹரி

செளந்தர்ய லஹரி

'பவானி நீ!'

செளந்தர்ய லஹரி

Published:Updated:
செளந்தர்ய லஹரி
பிரீமியம் ஸ்டோரி
செளந்தர்ய லஹரி

செளந்தர்ய லஹரி, ஆதிசங்கரர் அருளிய அற்புதமான நூல். இந்த நூலை அவர் பரமேஸ்வரனிடம் இருந்தே பெற்றார் என்று சொல்வார்கள். அந்தப் பரமனாலேயே ஆசார்யருக்கு வழங்கப்பட்ட இந்த நூல் மகிமைகள் நிறைந்தது. இதில் உள்ள ஸ்லோகங்கள் ஒவ்வொன்றும் ஒரு விசேஷ பலனைத் தரும் என்பது பெரியோர்கள் வாக்கு.

செளந்தர்ய லஹரி
செளந்தர்ய லஹரி


அவ்வகையில் சர்வ ஸித்தியையும் அருளும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரத்தைக் காண்போம்.

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:

ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம்


(ஸ்லோகம் 22)

கருத்து: `பவன் எனப் பெயரைப் பெற்ற பரமசிவனுடைய பத்தினியான தேவியே! நீ உன் அடிமையாகிய என்னிடத்தில் கருணையுடன் கூடின பார்வையை செலுத்தி அருள்வாயாக’ என்று எவர் ஒருவர் அம்பிகையைத் துதி செய்ய விரும்புகிறாரோ, அவர் ‘பவானி நீ’ என்ற இரண்டு வார்த்தைகளைச் சொன்னாலே போதும். அப்போதே அவருக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன், ஆகியோரின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப் பெற்ற தனது திருவடிகளை அடையும் ஸாயுஜ்ய பதவியை அளிப்பாள் அம்பாள் என்கிறார் ஆதிசங்கரர்.

‘பவானி நீ’ என்று சொல்லிப் போற்றும் அடியார்களை ரட்சித்து சகலமும் அருளிக் காப்பாள் அம்பிகை. `பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே’ என்று அபிராமிப்பட்டர் போற்றுவாரே, அத்தகைய அற்புத பாதக் கமலங்களில் சரண்புகும் பாக்கியம் அந்த அடியவருக்குக் கிடைப்பதுடன், காரிய ஸித்தி உண்டாகும். ஆக, மேற்காணும் ஸ்லோகத்தைத் தினமும் காலையும் மாலையும் சொல்லிவந்தால், வீட்டில் சகல சம்பத்துகளும் பொங்கிப் பெருகும்; வெற்றிமேல் வெற்றி உண்டாகும்.

- சக்திதர், சென்னை-61

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism