Published:Updated:

தென்னக அயோத்தி

தென்னக அயோத்தி
பிரீமியம் ஸ்டோரி
தென்னக அயோத்தி

தென்னக அயோத்தி

தென்னக அயோத்தி

தென்னக அயோத்தி

Published:Updated:
தென்னக அயோத்தி
பிரீமியம் ஸ்டோரி
தென்னக அயோத்தி

குடந்தை - கோயில் நகரம். காசிக்கு நிகரான பழைமையும் புனிதமும் அயோத்திக்கு நிகரான பெருமையும் சிறப்பும் கொண்டு விளங்கும் தலம். இந்தப் புண்ணிய பூமியான குடந்தையில் நடுநாயகமாகத் திகழ்கிறது ராமசாமி திருக்கோயில்.

இந்த ஆலயத்தை பக்தர்கள் `தென்னக அயோத்தி' என்றே அழைக்கிறார்கள். காரணம் இங்கு ராமபிரான் கருவறையில் பட்டாபிஷேகத் திருக்கோலத்திலேயே காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் ராமனும் சீதாப்பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி அருள்கின்றனர். பரதன் குடைபிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச இலக்குவணன் ராமச்சந்திர மூர்த்தியின் வில்லையும் சேர்த்துத் தாங்கி நிற்கும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர்.

ராமசாமி திருக்கோயில்
ராமசாமி திருக்கோயில்


இங்கு எழுந்தருளியிருக்கும் ராம கானப் பிரியனான அனுமனின் திருக்கரத்தை வீணை அலங்கரிக்கிறது. சதா சர்வ காலமும் நாம சங்கீர்த்தனம் செய்யும் சிரஞ்ஜீவியாக அனுமன் இங்கு அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தின் பல்வேறு சிறப்புகளில் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று, ஆலயத்தின் மகாமண்டபச் சிற்பங்கள் மற்றொன்று பிராகாரச் சித்திரங்கள். மகாமண்டபச் சிற்பங்கள் நாயக்கர் காலக் கலையின் சான்றுகள். இந்த ஆலயம் கி.பி 1614-ம் ஆண்டு தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த ரகுநாத நாயக்கரால் கட்டப்பட்டது. குடந்தைக்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது ராமன் மற்றும்  சீதா தேவியின் மூர்த்தங்கள் கிடைத்தன. இதைக் கண்டு மகிழ்ந்த ரகுநாத நாயக்க மன்னன் குடந்தையில் ஓர் ஆலயத்தை எழுப்பி அங்கு இந்த மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தலவரலாறு.

இங்கு பிராகாரத்தில் ராமாயணக் காட்சிகள் சித்திரங்களாக அலங்கரிக் கின்றன. சித்திரங்களை தரிசித்தபடி ஒருமுறை பிராகார வலம் வந்தால் முழுமையாக ராமாயணத்தைப் பாராயணம் செய்த பலன்கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

- கே.நரசிம்மன், சென்னை-61