Published:Updated:

திருப்பதியில் முதியோர், கைக்குழந்தையுடன் வருவோருக்கான சிறப்பு தரிசன சலுகை தேதிகள்!#Tirupati

திருப்பதி
திருப்பதி ( PN Jaya Sekhar )

முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய வயதுச் சான்றிதழ், ஆதார் அட்டை மிகவும் முக்கியம்.

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பதென்றால், எந்நாளும் கூட்டம் பொங்கி வழியும். திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள், 5 வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தை உள்ளவர்களுக்கு மாதந்தோறும் சிறப்புச் சலுகை அளிக்கப்படுகிறது.

Tirupaty
Tirupaty

முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கும் வண்ணம் இந்த மாதம் பிப்ரவரி 11, 25 ஆகிய இரண்டு நாள்களும் தலா 4,000 டோக்கன்கள் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

காலை 10 மணிக்கு 1,000 டோக்கன்களும் பிற்பகல் 2 மணிக்கு 2,000 டோக்கன்களும் பிற்பகல் 3 மணிக்கு 1,000 டோக்கன்களும் வழங்கப்படுகிறது.

இதேபோல் 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் தம்பதிக்கு பிப்ரவரி 12, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு தரிசன சலுகை வழங்கப்படுகிறது.

திருப்பதி வேங்கடேசப் பெருமாளை எந்தவித தள்ளுமுள்ளுவும் இல்லாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் தரிசனம் செய்யலாம்.

65 வருடங்கள் வயது நிறைவுபெற்ற முதியவர்கள் மற்றும் அவருக்கு உதவியாக அவருடைய துணைவர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய வயதுச் சான்றிதழ், ஆதார் அட்டை மிகவும் முக்கியம்.

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Tirupaty
Tirupaty

இந்தச் சலுகையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி பெருமாள் தரிசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.

அடுத்த கட்டுரைக்கு