தொடர்கள்
Published:Updated:

மஹா யக்ஞம்!

ஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்டாள்

ஆண்டாள்

பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும். அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை மானுட ரூபத்தில் அவதரித்து செய்ய ஆவல் கொண்டார் பூமிபிராட்டியார்.

ஆண்டாள்
ஆண்டாள்


அவர் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் பகவான். `கீதையில் நான் உரைத்ததை மானிடர்கள் எளிதில் புரிந்து கொள்ளவில்லை. கீதார்த்தத்தை பூலோகத்தில் சொல்லி உலகைத் திருத்த வேண்டும்' என்ற கட்டளையுடன் பூமாதேவியை அனுப்பி வைத்தார் பெருமாள்.

ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில், வில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் கோதை அவதரித்தாள். வராஹ அவதாரத்தில் தன்னை ரட்சித்த பெருமாளை 3 வழிகளில் ஆராதிக்க விரும்பிய கோதை, அதன்படியே செய்தாள். எப்படி தெரியுமா?

திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் `அவன் பெயர் பாடு’ என வலியுறுத்துகிறது. 2-வது பத்து பாசுரங்கள் `அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது. 3-வது பத்து பாசுரங்கள் `அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது. தான் விரும்பிய மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் வெளியிட்டாள் ஆண்டாள்.

திருப்பாவை என்பது கண்ணனை ஆராதிக்கும் பாசுரம் மட்டுமல்ல; அது ஒரு மஹா யக்ஞம். நாராயணனிடத்தில் ஆத்மாவைச் சமர்ப்பிக்கச் சிறந்த யக்ஞம்! இதைப் பாடினால் போதும் நாராயணன் நமக்கு உறவாவான் என்பார் திருப்பாவை ஜீயர் எனும் ராமாநுஜர்!

- சக்திதர், சென்னை-61