Published:Updated:

சாயியின் அருட்கடாட்சம் நிறைத்தது!

ஶ்ரீசாயி பூஜை
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாயி பூஜை

சிறப்பு வழிபாடு

சாயியின் அருட்கடாட்சம் நிறைத்தது!

சிறப்பு வழிபாடு

Published:Updated:
ஶ்ரீசாயி பூஜை
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாயி பூஜை

ஒவ்வொரு நாளில் தொடக்கமும் இறைவனின் திருவருளோடு இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக அமையும். இறைவனின் திருவருளைப் பெற அனுதினமும் நாம் அவனைத் துதிக்க வேண்டும்; அர்ச்சிக்க வேண்டும். குறைந்த பட்சம் மனதார தியானிக்க வேண்டும். மனதாரச் செய்யும் தியானம் நமக்குப் பல்வேறு நலன்களைப் பெற்றுத் தரும். அதிலும் சத்சங்கமாகக் கூடி ஆராதித்தால் அதன் பலனே தனி.

சாயியின் அருட்கடாட்சம் நிறைத்தது!

க்திவிகடன், துவாரகாமயி ஆத்மஞானியர் மையத்துடன் இணைந்து ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 - ம் தேதி ஶ்ரீசாயி சங்கல்ப பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான வாசகர்கள் இணையம் மூலம் கலந்துகொண்டு சங்கல்பித்துக் கொண்டனர். அவர்களுக்காகவும் `உங்கள் இல்லம் தேடி வருகிறார் பாபா' - சிறப்பு சாயி கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட வாசகர்களுக்காகவும் சிறப்புப் பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்தபின் ` சாயி சங்கல்ப பூஜை' தொடங்கியது.

காலை பத்து மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி யில், முதலாவதாக பஜனை நடைபெற்றது. துவாரகாமயி ஆத்ம ஞானியர் மையத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து சாயி பஜன் இசைத்தனர். அதன்பின் சத்சங்கம் தொடங்கியது.

சாயியின் அருட்கடாட்சம் நிறைத்தது!
சாயியின் அருட்கடாட்சம் நிறைத்தது!

`பாபா மாமி' ரமா சுப்பிரமணியம் ஶ்ரீசாயி நாதனின் மகிமையையும் அவரின் குருநாதர் மகிமையையும் விளக்கி அற்புதமான ஓர் உரையை நிகழ்த்தினார். ஒவ்வொரு பக்தருக்கும் தேவை பொறுமையும் நம்பிக்கையும் மட்டுமே என்றும் சாயி சரிதத்தின் வழியாக எடுத்துரைத்தார்.

அதன்பின் பாபாவுக்கு ஆரத்தி நடைபெற்றது. கண்கொள்ளா காட்சியாக ஆரத்தி அமைந்தது. கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற அன்பர்களுக்கு வழங்க இருந்த நூல்கள், உதி பிரசாதம் மற்றும் பாபா விக்ரகம் ஆகியன பூஜையில் வைக்கப்பட்டன. சிறப்பு ஆரத்திக்குப் பின் பாபாவின் அருளோடு அவை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டன. ( போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கு இந்த அருள்பிரசாதப் பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டன).

பாபாவுக்கு சிறப்பு நிவேதனங்கள் நடைபெற்று அங்கு வந்திருந்த அக்கம் பக்கத்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து முடியும் வரை சாயியின் திருமுகத்தில் புன்னகை பூத்ததுபோலவே இருந்தது என்பதை வந்திருந்த பலரும் சொல்லி மகிழ்ந்தனர். அந்த பக்தர்களின் அகம் மற்றும் முக மலர்ச்சியே, அன்றைய வைபவம் சாயின் அருட்கடாட்சம் நிரம்பிய ஒன்றாக அமைந்ததற்குச் சான்று!

ஶ்ரீசாயி சரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism