திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

கனவை நனவாக்கும் தெய்வங்கள்!

திருக்காஞ்சி ஶ்ரீவராகநதீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருக்காஞ்சி ஶ்ரீவராகநதீஸ்வரர்

படங்கள்: கே.எஸ்.இளங்கோவன்

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறை, நமக்கு எளிதில் அருளும் பொருட்டு பல்வேறு திருவுருவங்களை ஏற்று ஆலயங்களில் விசேஷ தெய்வ மூர்த்தங்களாய் அருள்கிறது.

உருவாய், அருவுருவாய் அருளும் தெய்வ மூர்த்தங் களால் சிறப்புற்ற தலங்கள் ஏராளம்!

திருப்புறம்பியம் தேன் உறிஞ்சும் பிள்ளையார், பழநி நவபாஷாண முருகன், ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர்... இப்படி விசேஷத் தன்மை வாய்ந்த மூர்த்திகள், நம் குறை தீர்க்கும் தெய்வங்களாக அருள்கிறார்கள்.

மட்டுமன்றி புராணங்களால், அருளும் தன்மையால், சிற்ப அழகால், இன்னும்பிற காரணங்களால் சிறப்புற்ற மூர்த்தங்களும் பல உண்டு. அவற்றில் சில தெய்வங்களின் தரிசனம் இங்கே உங்களுக்காக...

திருக்காஞ்சி ஶ்ரீவராகநதீஸ்வரர்
திருக்காஞ்சி ஶ்ரீவராகநதீஸ்வரர்

பித்ரு தோஷம் நீக்கும் ஶ்ரீவராக நதீஸ்வரர்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூருக்கு அருகிலுள்ள தலம் திருக்காஞ்சி. இங்கு அருளும் இந்த ஈசன், சத்யோஜாத மூா்த்தமாக மேற்கு நோக்கி அருள்கிறாா். அமாவாசை தினங்களில் வராக நதி எனப்படும் சங்கராபரணியில் நீராடி, பக்தியோடு இந்த வராக நதீஸ்வரரை வழிபட்டால், பித்ரு தோஷம் நிவா்த்தியாகும்.

ஶ்ரீமுக்தீஸ்வரர்
ஶ்ரீமுக்தீஸ்வரர்

எடமிச்சி ஶ்ரீமுக்தீஸ்வரா்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டத்தில் உள்ளது எடமிச்சி ஶ்ரீமுக்தீஸ்வரா் ஆலயம். 1000 ஆண்டுகள் பழைமையானது. இந்த இறைவன் `ஶ்ரீமுத்தீஸ்வரமுடைய நாயனாா்’ என்றும் `திருமுத்தியப்ப தம்பிரானாா்’ என்றும் வழங்கப்பட்டதைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும்; முக்தி நிலை வாய்க்கும்.

ஶ்ரீபெருந்தேவித் தாயார்
ஶ்ரீபெருந்தேவித் தாயார்

கல்யாண வரமும் மஞ்சள் மாலையும்!

ந்தவாசி- ஆரணி சாலையில், பெரணமல்லூர் வழியாக இஞ்சிமேடு தலத்தை அடையலாம். இங்குள்ள ஶ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் அருள்கிறார் ஶ்ரீபெருந்தேவித் தாயாா். திருமணம், மழலைப்பேறு வேண்டும் அன்பா்கள், இவரை வேண்டி, தினம் ஒரு மஞ்சள் எடுத்து பூஜை அறையில் வைக்கின்றனர். 48 நாள்களுக்குள் பிரார்த்தனை பலிக்கும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் பலித்ததும் மஞ்சளை மாலையாகக் கோத்து, தாயாருக்குச் சமர்ப்பிக்கின்றனர்.

ஶ்ரீலட்சுமிவராஹர்
ஶ்ரீலட்சுமிவராஹர்

நிலப் பிரச்னைகள் தீரும்

திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது பெரமண்டூர். இங்கு கோயில் கொண்டுள்ள ஶ்ரீலட்சுமி வராஹர், கல்யாண வரம் தருபவர். இவர் பாதத்தில் நிலப்பத்திரங்களை வைத்து நெய் விளக்கேற்றி வழிபட்டால், பிரச்னைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்!

கனவை நனவாக்கும் தெய்வங்கள்!
ஶ்ரீசத்யாம்பிகை

கண் - பார்வை குறைபாடுகள் நீங்கும்!

விழுப்புரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது பனையபுரம். இங்குள்ள ஶ்ரீபனங்காட்டீஸ்வரர் சிவாலயத்தில் சித்திரை முதல் 7 நாள்கள் சூரியன் தன் கிரணங்களால் சுவாமியையும் பின் அம்பாளையும் பூஜிப்பது விசேஷம். அம்பாள் ஶ்ரீசத்யாம்பிகை, வேண்டும் வரங்களை அருளும் நாயகி! கண் - பார்வை தொடர்பான நோய்களை நீக்கும் பரிகாரத் தலம் இது.

ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவர்
ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவர்

வழக்கில் வெற்றி பெற...

நாமக்கல் நகரிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள மோகனூரில் - ஶ்ரீபிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள் கோயிலில் அருள்கிறார் இந்த லட்சுமி ஹயக்ரீவர். கலைவாணிக்கு வேதங்களை உபதேசித்தவர் ஹயக்ரீவர். இந்தப் புராணச் சம்பவத்தை நினைவூட்டும் விதம் ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் ஶ்ரீவித்யா மேதா மஹா யக்ஞம் விசேஷம். வழக்குத் தொழிலில் வெற்றி பெறவும், கல்வியில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறவும் இவரை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

கோட்டூர் வேங்கடவன்
கோட்டூர் வேங்கடவன்

சந்திர தோஷம் நீங்கும்!

ன்னாா்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது கோட்டூா் ஶ்ரீவேங்கடாஜலபதி கோயில். திங்கள் கிழமை மற்றும் திருவோண நட்சத்திர நாளில் நெய்தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் நீங்கும்!

ஊட்டத்தூர் பஞச்நதன நடராஜர்
ஊட்டத்தூர் பஞச்நதன நடராஜர்

அபூர்வ நடராஜர்!

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ் சாலையில், பாடாலூரிலிருந்து4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஊட்டத்தூர். இங்குள்ள ஶ்ரீசுத்த ரத்னேஸ்வரா் கோயிலில் அருளும் நடராஜர், பஞ்சநதனக் கல்லால் ஆனவர். இவருக்குச் சமர்ப்பித்த வெட்டிவேர் இட்ட தீர்த்தம், சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது!

முன்னூர் 
ஶ்ரீ அருளாளப் பெருமாள்
முன்னூர் ஶ்ரீ அருளாளப் பெருமாள்

புத்திர தோஷம் விலகும்!

திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ளது முன்னூா். இங்குள்ள ஶ்ரீஅருளாளப் பெருமாள், இவ்வூரில் வாழ்ந்த மகரிஷிகளுக்கு, சூர்யமண்டலத்திலிருந்து கோடிசூர்ய பிரகாசராகக் காட்சி தந்தாராம். ஆகவே மேற்கு நோக்கி அருள்கிறார். சனிக்கிழமைகளில் முன்னூர் பெருமாளை வழிபட்டால் கல்யாண வரம் கிடைக்கும்; புத்திர தோஷம் நீங்கும்!

ஆனூர் பிரம்ம சாஸ்தா முருகன்
ஆனூர் பிரம்ம சாஸ்தா முருகன்

கவிபாட அருள் தரும் ஆனூர் கந்தசாமி!

செங்கல்பட்டு மாவட்டம் ஆனூா் கிராமத்தில் உள்ளது ஶ்ரீகந்தசாமி திருக்கோயில். இங்கு பிரம்ம சாஸ்தா வடிவில் அருள்கிறார் முருகன். பிரம்மத்தின் அதிஉயர்வான நிலையை அடைந்தவன் முருகன் என்று உணர்த்தும் வடிவம் இது. அந்தகக் கவி வீரராகவ முதலியார் இவரை வனங்கிய பிறகே கவிபாடும் திறன் பெற்றார் என்பர்.

தேவர்மலை நரசிம்மர்
தேவர்மலை நரசிம்மர்

நெற்றிக் கண்ணுடன் நரசிம்மர்!

ரூரில் இருந்து குஜ்ஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல் செல்லும் சாலையில் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது பாளையம். இந்த ஊரிலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது தேவா்மலை ஶ்ரீஉக்ர நரசிங்க மூா்த்தி ஆலயம். இவருக்கு `த்ரிநேத்ரம்’ உண்டு. நெற்றிக் கண்ணுடன் அருள்கிறாராம். கடன் தொல்லை நீங்க, தீவினைகள் விலக, மன ஆரோக்கியம் பெற வழிபடவேண்டிய தலம் இது.