Election bannerElection banner
Published:Updated:

சித்தர்கள் வழியில் சிவவழிபாடு... சிவராத்திரி அன்று மகாமூலிகை அபிஷேகம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சிவபெருமான்
சிவபெருமான்

அதற்கு சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜையான 'துரீய சந்தியா' வேளை பயன்படும் என்கின்றன சாஸ்திரங்கள். ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்கள் யாவும் ஒடுங்கி அதே வேளையில் ஆன்மா பூரண விழிப்பு நிலையில் மேற்கொள்ளப்படும் இந்த சிவராத்திரி பூஜை நிச்சயம் முக்தியை அளிக்கக் கூடியது.

விழாக்களிலேயே மிகவும் உன்னதமானது மகா சிவராத்திரி விழா. இது, சகல ஜீவன்களும் ஆதி முதலான சிவத்தை அறிந்து கொள்ளும் தத்துவார்த்தமான விழா. மற்றபடி விரதமிருப்பது, வழிபாடு செய்வது எல்லாமே மகா சிவராத்திரியின் சடங்குகளில் சில என்றே சொல்லலாம். உண்மையில் சிவராத்திரியின் நான்கு காலத்திலும் விழித்திருந்து உயர்வான தியான நிலையில் சிவத்தை உணர்ந்து அதனோடு அருகே செல்ல முயலும் நிலையே சிவராத்திரியின் அடிப்படை!

சதா அலை பாய்ந்துகொண்டிருக்கும் நம் மனதை அடக்குவதற்கும், அடங்கிய மனதை ஒருநிலைப்படுத்துவதற்கும் சிவ தியானம் அவசியம். அந்த சிவ தியானம் இயல்பாக நடைபெற இந்த மகா சிவராத்திரி நாள் மிகவும் உதவும். அமாவாசைக்கு முந்தைய திரயோதசி நாளில் மனம் அமைதியாக எந்தவித ஆசையும் கோபமும் இன்றிக் காணப்படும். காரணம் சந்திரனின் தாக்கம் மிகச்சிறிய அளவே அன்று காணப்படுவதால்தான் என்கின்றன சாஸ்திரங்கள். மனம் அமைதியுற்ற அந்த இரவு வேளையில் சிவ தியானம் செய்து நிர்மலமான சிந்தனைகளோடு சிவத்தில் ஐக்கியமாக வேண்டும் என்பதே இந்த விழாவின் தாத்பர்யம்.

மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி

தத்துவ சிவராத்திரி விழாவில் உருவமும் இல்லாது அருவமும் இல்லாத மகாலிங்க வடிவை வணங்கி வழிபட, நம் ஆன்மா உள்முகப் பயணத்தில் சென்று பிறப்பின் தன்மையை உணர்ந்து கொள்ளும். இனி பிறப்பெடுக்காத வண்ணம் ஆதார சக்கரங்களின் வழியே உடலை இயக்கி ஆன்மாவைப் பழக்கிக் கொள்ளும்.

அதற்கு சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜையான 'துரீய சந்தியா' வேளை பயன்படும் என்கின்றன சாஸ்திரங்கள். ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்கள் யாவும் ஒடுங்கி அதே வேளையில் ஆன்மா பூரண விழிப்பு நிலையில் மேற்கொள்ளப்படும் இந்த சிவராத்திரி பூஜை நிச்சயம் முக்தியை அளிக்கக் கூடியது. எனவே, லிங்கோத்பவ காலம் எனப்படும் பூரண விழிப்பு நிலை காலத்தில் செய்யும் வழிபாடுகள் மிகவும் விசேஷமானது.

சக்திவிகடன் சார்பில் வரும் சிவராத்திரி அன்று இரவு திண்டிவனம் அருகில் கீழ்ப்பசார் சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் விசேஷ வழிபாடுகளை நடத்த இருக்கிறோம். அதில் குறிப்பாக மூன்றாம் காலத்தில் இதுவரை வேறெங்குமே நடைபெற்றிராத வகையில் மகா மூலிகா அபிஷேகம் எனும் 208 அரியவகை மூலிகைகளைக் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்ய இருக்கிறோம்.

கீழ்ப்பசார் சிவபெருமான்
கீழ்ப்பசார் சிவபெருமான்

கொல்லிமலை அகோரி மணி சித்தர் வழிகாட்டலில் நடைபெற இருக்கும் இந்த மூலிகை அபிஷேகம் சகல பிணிகளையும் அழிக்க வல்லது. சித்த புருஷர்கள் மட்டுமே செய்து வந்த இந்த மகத்தான அபிஷேகத்தை வாசகர்களான உங்கள் நலனுக்காகவும் உங்கள் தலைமுறையினரின் நன்மைக்காகவும் முதன்முறையாக நடத்த இருக்கிறோம். எல்லோரும் எல்லாமும் பெற்று நிறைவான வாழ்க்கையைப் பெற்று வாழ இந்த அபூர்வ விசேஷத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு...

மகா சிவராத்திரி அன்று கீழ்ப்பசார் ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜை - வழிபாடுகளுக்கு வாசகர் களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், நான்கு கால வழிபாடுகளுக்காக சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் நான்கு கால வழிபாடுகளிலும் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு மகா சிவராத்திரி நான்கு கால வழிபாட்டுப் பிரசாதங்களாக விபூதி, வில்வம், ருத்ராட்சம், காப்பு ரட்சை ஆகியவை (30.3.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

சிவராத்திரி
சிவராத்திரி

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மகா சிவராத்திரி வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வழிபாட்டு வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன் பதிவு விவரங்களுக்கு: 89390 30246

மகா சிவராத்திரி வழிபாட்டில் நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மகா சிவராத்திரி வழிபாடுசங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு, ஓர் ஆண்டுக்கான சக்திவிகடன் டிஜிட்டல் சந்தா பரிசு!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு