சகல உயிர்களையும் காத்தருள்பவர், சிவபெருமான். அவரின் ஒரு வடிவமே பைரவ மூர்த்தி. பைரவர், உக்கிரமயமான தெய்வமாக விளங்கினாலும் பெருங்கருணை கொண்டவர்; தன்னை வணங்கும் பக்தர்களின் துன்பத்தைப்போக்கி அளவற்ற செல்வத்தையும் இன்பங் களையும் அளிப்பவர். பைரவர் அவதரித்த, பைரவாஷ்டமியானது கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. பைரவாஷ்டமியை (19.11.19 செவ்வாய்) முன்னிட்டு பைரவரின் 25 சிறப்புத் தகவல்களை அறிந்துகொள்வோம்...

பைரவருக்கு ‘வடுகன்’ என்ற பெயரும் உண்டு. ‘வடு’ என்றால் இளைஞன், பிரம்மசாரி என்று அர்த்தம். குமார பருவத்தில் இளைஞனாகவும் பிரம்மசாரியாகவும் இருப்பதால் பைரவர் ‘வடுகன்’ என்று அழைக்கப்படுகிறார்.

காசி விசுவநாதர் ஆலயத்தில் கருவறைக்கு எதிரில் ‘தண்டபாணி’ எனும் பெயரில் பைரவர் அருள்கிறார்.காசியில் கங்கையின் கரைகளில் அறுபத்து நான்கு நீராடும் துறைகளிலும் பைரவரை (அறுபத்து நான்கு பைரவர்கள்) தரிசிக்கலாம்.

சிவபெருமானுக்குப் பஞ்சமுக அர்ச்சனையும், பராசக்திக்கு நவசக்தி அர்ச்சனையும், முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனையும் செய்யப்படுவதுபோல, பைரவ மூர்த்திக்கு ‘அஷ்டவிதார்ச்சனை’ செய்யப்படுகிறது. அப்போது எட்டுவித மலர்கள் மற்றும் தளிர் இலைகளைக்கொண்டு எட்டு சிவாச்சாரியார்கள் பைரவரைச் சூழ்ந்து நின்று அர்ச்சனை செய்வர். அதன்பிறகு எட்டுவிதமான சமித்துக்கள், எட்டு பட்சணங்கள், எட்டு அன்னங்கள் ஆகியவை நிவேதனம் செய்யப்படும். பிறகு, எட்டு ஆரத்திகள் கொண்டு தீபாராதனை காட்டப்படும். இந்த ஹோமத்தில் எட்டுவித சமித்துகள் பயன்படுத்தப்படும். திருப்பத்தூர், வைரவன்பட்டி ஆகிய தலங்களில் அஷ்டவிதார்ச்சனை சிறப்பாகச் செய்யப்படுகிறது.

காவல் தெய்வம் என்பதை உணர்த்த நீண்ட மணிமாலையை அணிந்து திகழ்கிறார் பைரவர். அவரே, சம்ஹார பைரவராக உலகை அழித்தபின், கபால மாலையுடன் காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில், கபால மாலையை அணிந்த பைரவரைக் காணலாம். கபால மாலையானது வெண்டலை மாலை, பிரமசிரமாரம் எனப் பலவாறு அழைக்கப்படுகிறது. பைரவரை வழிபடும் மகாவிரதிகள் மண்டையோட்டு மாலைகள் அணிந்திருந்ததைக் குறிப்பிடும் தேவாரம் ‘வெண்டலை மாலை விரதிகள்' என்று சித்திரிக்கிறது.

பைரவர் ஒரு கல்பத்தில் மும்மூர்த்திகளாக நின்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் மேற்கொண்டார். அவருடைய வலக்கரத்திலுள்ள டமருகம் படைத்தல் தொழிலையும், கபாலம் காத்தல் தொழிலையும், மேனியில் பூசியுள்ள விபூதி அழித்தல் தொழிலையும் குறிக்கிறது. அவர் மூவராய் நிற்கும்போது விரிஞ்சி வடுகர், முகுந்த வடுகர், உருத்திர வடுகர் என்று பெயர் பெறுகிறார். இவர்களுக்கு முறையே வாக்தேவி, வைஷ்ணவ சக்தி, கௌரிகை ஆகியோர் தேவியராக விளங்குகின்றனர்.

மிளகைச் சிறுதுணியில் மூட்டையாகக் கட்டி அகலில் வைத்து நெய், நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது ‘பைரவ தீபம்’ எனப்படுகிறது. இப்படி ‘பைரவ தீபம் ஏற்றுவதன் மூலம் வறுமை நீங்கும், செல்வ வளம் பெருகும், இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

பைரவர் எட்டு வடிவங்களைத் தாங்கி அருளும்போது முறையே பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகிய அஷ்ட மாதர்கள் அவருக்குத் தேவியராக விளங்குகின்றனர். இதில் எட்டாவதாக உள்ள வைரவரின் தேவியான சண்டிகை தேவியை சில நூல்கள் பைரவ லட்சுமி, துர்க்கா லட்சுமி என்று அழைக்கின்றன.

திருவொற்றியூர் தலத்தில் ‘சூரசூளாமணி பைரவர்’ எழுந்தருளி யிருக்கிறார். இவருக்கு நேர் எதிரே சப்த மாதர்கள் எழுந்தருளியுள்ளனர். இந்த பைரவர், நாய் வாகனம் இல்லாமல் அருள்புரிகிறார்.

சிவாலயங்களில் சிவபூஜை என்பது காலையில் சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்தசாமத்தில் பைரவர் சந்நிதியில் முடிவடையும். ஆலயத்தின் வடகிழக்கு முனையில் பைரவரும் தென்கிழக்கு முனையில் சூரியனும் வழிபடப்படுகின்றனர். மாலையில் பூஜை முடிந்ததும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி சாவிகளை அவர் காலடியில் வைப்பது வழக்கம். பைரவருக்குச் சிவப்பு மலர்கள், நெய் தீபம், உடைக்கப்படாத முழு தேங்காய், மாவிளக்கு, நார்ப்பழங்கள், சிவப்பு வண்ணம் தோய்த்த கல்யாண பூசணிக்காய், தேன், வடை, அவித்த உணவுகள் ஆகியவை உவப்பானவை.

பைரவர், போர்க்களத்தில் உன்மத்தராகவும் உக்கிர மயமான வராகவும் விளங்குகிறார். ஆனால், அன்பர்களிடத்தில் பிச்சை ஏற்கச் செல்லும்போது மென்மையானவராகவும் இனிய குரலால் பாடி மகிழ்விப்பவராகவும் உள்ளார். குருரூபர், விசுவரூபர் முதலிய எட்டு பைரவர்கள் வீணை ஏந்தியிருப்பதாகச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. சுற்றிலும் தும்புரு, நாரதர் முதலிய இசை மேதைகள் இருக்கின்றனர். கந்தவர்களும் அவரைச் சூழ்ந்து இசைமழை பொழிகின்றனர். அஷ்டபைரவரின் தேவியர் களாகத் திகழும் அஷ்ட மாதர்களில் கௌரிகை வீணை ஏந்தியுள்ளாள். இதை சிதம்பரம் தில்லையம்மன் கோயிலில் காணலாம்.

சிவபெருமானுக்குக் கோயில் பொறுப்பாளராகச் சண்டேசுவரர் இருப்பதைப் போலவே பைரவர் ஆலயத்திலும் ஒரு சண்டேசுவரர் இருப்பார். இவரை ‘சண்டேச பைரவர்’ என்கிறது பிரபஞ்ச சாரசங்கிரகம் என்னும் நூல். இவர் இளம்பிறையை அணிந்து சூலம், அட்சமாலை குண்டிகை, மழு ஆகியவற்றை ஏந்தி, செவ்வாடை புனைந்து செந்தாமரை மலரில் வீற்றிருந்து அருள்புரிவார். கொன்றை மலர்களைச் சூட்டுவதுடன் கொன்றை மலர்களை நெய்யில் தோய்த்து வேள்வி செய்தால், சண்டேச பைரவரின் அருள் பெறலாம் என்கிறது பிரபஞ்ச சாரசங்கிரகம்.

சிவபெருமானின் வீர செயல்கள் எட்டாகும். அவரது வீர வெளிப்பாடாக விளங்கும் பைரவரும் எட்டு உருவங்கள் தாங்கி அருள்பாலிக்கிறார். இவர்கள் ‘அஷ்ட பைரவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவருடைய எட்டு திருமேனிகள் முறையே அஜிதாங்கன், ருரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷ்ணன், க்ரோதன், சம்ஹாரன் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அஷ்ட பைரவர்களும் எட்டுத் திசைகளையும் காவல் காத்து அருள்புரிகிறார்கள்.

புதுவையில் அமைந்துள்ளது திருவாண்டார்கோயில் எனும் தலம். தேவாரத்தில் வடுகூர் எனும் பெயரில் இந்தக் கிராமம் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தில் காணப்படும் சிவாலயத்தில் இறைவர் வடுகநாதர், அம்பிகை வடுவகிர்கண்ணி எனும் பெயரில் அருள்புரிகிறார்கள். முண்டகன் எனும் அசுரனைக் கொன்ற பாவம்தீர பைரவர் இங்கு சிவலிங்கம் அமைத்து வழிபட்டார் என்கின்றன புராணங்கள். வடுகன் வழிபட்டதால் இந்தத் தலம் வடுகூர் என்றும் இறைவர் வடுகநாதர் என்றும் பெயர் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். பூர்வகாரண ஆகமத்தில் ஆதியில் வேதம் காளை வடிவம் கொண்டிருந்தது என்றும், கலியின் கொடுமையால் வலியிழந்து இப்போது நாயுருவில் உள்ளது என்றும், அதுவே பைரவருக்கு வாகனமாகியது என்றும் கூறப்பட்டுள்ளது. பைரவரின் நாய்க்கு ‘சாரமேயன்’ என்று பெயர். மல்லாரி சிவர் என்னும் பைரவர், ஏழு நாய்கள் சூழ இருப்பதாக மல்லாரி மகாத்மியம் கூறுகிறது.

சில பைரவ ஆலயங்களில் அஷ்ட பைரவர்களின் சேனாதிபதிகளாக கும்பன், விபாண்டகன், தண்டி, சாம்பன், சக்கரன், கதாரகன், முண்டகன், பிரளயன் என்ற எண்மரும் எழுந்தருள்கின்றனர். சில தலங்களில் பைரவரை நோக்கியவாறு அஷ்ட மாதர்கள் எழுந்தருள்வதைக் காணலாம்.

பைரவர் திகம்பரராகத் திகழ்ந்தபோதிலும் அன்பர்களுக்குப் பொன்னை யும் பொருளையும் அள்ளித் தருபவர். பண்டைய நாள்களில் அரசர்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவரை நிறுவிச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனால், நிதிச் சாலையில் பொன் குவிந்துகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கையாகும். அவர் பொன்னை இழுத்துத் தருபவர் என்பதால் ‘சுவர்ண ஆகர்ஷ்ண பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானின் அம்சமான பைரவ மூர்த்தியின் மகிமைகளை, அவருடைய வீர சரிதங்களைப் பாடியபடி ஊர்தோறும் சென்று பிச்சையேற்று வாழும் ஒரு மரபினர் ‘ஆண்டார்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வாழ்ந்த ஊர்கள் ஆண்டார் குப்பம், ஆண்டார்பட்டி என்று பெயர் பெற்றன.

சைவ நல்லுலகில் விநாயகருக்கு மூத்த பிள்ளையார், முருகனுக்கு இளைய பிள்ளையார், திருஞான சம்பந்தருக்கு ஆளுடைய பிள்ளையார், சண்டிகேசுவரருக்கு சேஞ்சலூர் பிள்ளையார் என்று பிள்ளைப் பெயர்கள் இருப்பது போலவே பைரவருக்கு, ‘ஆண்ட பிள்ளையார்’ என்ற பெயர் உண்டு. திருப்பத்தூரிலுள்ள கல்வெட்டுகள் பைரவரை ஆண்ட பிள்ளையார் என்றே அழைக்கின்றன.

அறுபத்து நான்கு பைரவர்கள், அவர்களுடைய தேவியர்களான அறுபத்து நான்கு யோகினியர், அவர்களின் சேனைகளான அறுபத்துநான்கு கோடி யோகினிகள் ஆகிய அனைவருக்கும் ஆனந்தபைரவரே தலைவராவார். இத்தனை பேரையும் தனித்தனி உருவங்களாக வழிபட முடியாது என்பதால் ‘பலிபீடம்’ அமைத்து அதில் அனைவரையும் மந்திரப்பூர்வமாக எழுந்தருளச் செய்து வழிபடும் வழக்கம் உண்டு. சீர்காழி மாடவீதியில் இந்தப் பலி பீடத்துக்குத் தனி சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது `கணநாதர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.

சுவர்ண ஆகர்ஷ்ண பைரவர், தேவியைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பொன் நிறமாகப் பிரகாசிக்கும் அவள் ‘ஸ்வர்ணா’ என்றும் ‘சுவர்ண பைரவி’ என்றும் அழைக்கப்படுகிறாள். சுவர்ண பைரவி சகல அணிமணிகளைப் பூண்டவளாகவும் பொன்கொட்டும் குடை, தாமரை, அபயமுத்திரை தரித்தவளாகவும் பைரவரைத் தழுவிக்கொண்டு இடப்பாகத்தில் வீற்றிருப்பவளாகவும் அருள்புரிகிறாள். சுவர்ண ஆகர்ஷண பைரவர் - பைரவிக்குரிய யந்திரம் ‘ச்ரேச்வரி’ என்றழைக்கப்படுகிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறுத்தொண்டர், இயற்பகையார், மானக்கஞ்சாரர் முதலிய பல அடியார்கள் பைரவரை வழிபட்டு பேறு பெற்றவர்கள்.