Published:Updated:

வாதாபி விநாயகர்: நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வரப்பிரசாதி; சதுர்த்தி நாளில் சிறப்பு வழிபாடு!

வாதாபி விநாயகர்
வாதாபி விநாயகர்

கண்கண்ட தெய்வமாகவும், நினைத்த காரியங்களை நிறைவேற்றும் பெரும் கருணை உடையவராகவும் இவர் திகழ்கிறார். வாதாபியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் வாதாபி விநாயகர் என்றழைக்கப்படுகிறார். சதுர்த்தி நாளான இன்று அவரை வணங்குவோம்!

விநாயகப் பெருமான் கஜமுக அரக்கனைக் கொன்று, பாவம் தீரச் சிவபெருமானை வழிபட்ட, மிகவும்  தொன்மையான தலம் ஒன்று நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருச்செட்டாங்குடியில்  அமைந்துள்ளது.

வாதாபி விநாயகர்
வாதாபி விநாயகர்
விநாயகர் சதுர்த்தி பூஜை | எளிமையாகச் செய்வது எப்படி? | How to Worship on Vinayagar Chathurthi

இறைவன் இங்கு உபதேச குருமூர்த்தியான  தட்சிணாமூர்த்தியாகவும், கணபதீச்சரமுடையரான சிவலிங்கமாகவும், உத்திராபதீயராகச் சங்கமத் திருமேனி கொண்டும் எழுந்தருளியிருப்பதால் குரு, லிங்க, சங்கமம் என்ற மூன்றாலும் பெரும் புகழ் படைத்த தலம் இது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற சமயக் குரவர்களால் பாடல் பெற்ற சிறப்புக்குரியது. இறைவன் பைரவத்  திருக்கோலத்துடன் சிறுதொண்டருக்காக எழுந்தருளி வந்து வீற்றிருக்கும் தனிப் பெருமை படைத்த தலம் இது. இங்கு ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளார்.

இங்குள்ள தலவிருட்சம், அத்திமரம். ஒரு காலத்தில் பிரம்மனுக்காகப் பொய் சொன்ன தாழம்பூ, இறைவன் முன்பு பொய் சொன்ன பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து அத்தியாய் முளைத்து, இறைவனுக்கும் அடியார்களுக்கும் நிழல் தந்து உதவுகிறது.

வாதாபி விநாயகர்
வாதாபி விநாயகர்

`இந்த மரத்தடியில் சிறிது நேரமாவது பத்மாசனத்தில் இருந்து  சிவத்துடன் திரு ஐந்தெழுத்தை ஓதி இம்மையில் எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம்.  மறுமையில் வீடுபேறும் பெறலாம், மனக்குறை உடைய பலர் இங்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கமாக நடந்து வருகிறது' என்கிறார்கள் மக்கள்.

இத்தலத்தின் பெரும் சிறப்பே, வாதாபி விநாயகர்தான். இந்த விநாயகர் முற்காலத்தில் நடந்த ஒரு போரின் வெற்றியின் அடையாளமாகவும் திகழ்கிறார். சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார் பல்லவ சேனைத் தலைவராக இருந்தார். அப்போது வாதாபி நகரத்தின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி வாகை சூடினார்.  அங்கு அற்புத அமைப்புடன் காணப்பட்ட  இந்த விநாயகர் அவர் உள்ளத்தைக் கவர்ந்தார். எனவே அந்த விநாயகரைக்  கொண்டு வந்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கி இருக்கிறார். வேறு விநாயக வடிவங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பினை இவ்வுருவிற் காணலாம்.

`அயர்லாந்து வரை சென்ற தமிழக விநாயகர் சிலைகள்!' - மாமல்லபுரம் சிற்பி பகிரும் அனுபவங்கள்

கண்கண்ட தெய்வமாகவும், நினைத்த காரியங்களை நிறைவேற்றும் பெரும் கருணை உடையவராகவும் இவர் திகழ்கிறார். வாதாபியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் வாதாபி விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட இத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி நாளில் வாதாபி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு