Published:Updated:

வழிபாடு: நலம் தரும் நவராத்திரியில் முளைப்பாரித் திருவிழா!

முளைப்பாரித் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
முளைப்பாரித் திருவிழா

வித்யா குருமூர்த்தி

வழிபாடு: நலம் தரும் நவராத்திரியில் முளைப்பாரித் திருவிழா!

வித்யா குருமூர்த்தி

Published:Updated:
முளைப்பாரித் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
முளைப்பாரித் திருவிழா

வராத்திரி தொடங்கிவிட்டது. பண்டிகைகள் என்றாலே மகிழ்ச்சி கொடுப்பவைதாம். எனினும், மற்ற பண்டிகைகள் ஓரிரு நாளில் கொண்டாடப்பட்டு நிறைவடைந்துவிடும். நவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாள்கள் ஆற அமர நிதானமாக அம்பாளை பூஜித்து வழிபட்டு, பத்தாவது நாள் விமரிசையாக நிறைவுறுவதுதான்.

நாம் செய்யும் சிறிய வழிபாட்டுக்குக் கூட, இந்த ஒன்பது நாள்களில், அம்மை யின் அருட்கடாட்சம் மேலோங்கி இருக்கும்; மிக அதிக பலன் கிடைக்கும். எனவேதான் லலிதா சஹஸ்ர நாமம், சௌந்தர்ய லஹரி போன்ற சிறப்பு ஸ்லோகங்களால் அம்பாளை விமரிசையாக வழிபடுவது வழக்கம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நவராத்திரி வழிபாட்டில் ஒரு முக்கியமான விஷயம்... கொலுப்படிகளின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் முளைப்பாரிகள். இவை எந்த அளவு நன்றாக, செழிப்பாக வளர்ந்து நிற்கிறதோ அந்த அளவு, வீட்டில் செழுமையும் லக்ஷ்மி கடாட்சமும் நிறையும் என்பது நம்பிக்கை.

வழிபாடு: நலம் தரும் நவராத்திரியில் முளைப்பாரித் திருவிழா!

நம்முடைய வாழ்க்கை முறை இயற்கை யுடன் இயைந்த பெரு வாழ்வு. இதன் அடையாளமாக அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், முளைப்பாரித் திருவிழா என்றே விழாக்கள் கோலாகலமாக நடக்கும். அதில் நவதானியங்களை நன்கு செழிப்பாக முளைக்கவைத்து, தலையில் சுமந்து, குலவையிட்டுக்கொண்டு எடுத்து சென்று அம்பாளுக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள்.

நாட்டில் மழைப் பொழிவு பெருகி, பயிர் பச்சைகள் செழித்து வளர்ந்தால், உணவுப் பஞ்சம் என்பதே இன்றி நாடு சுபிட்சமாக இருக்கும். இதை அம்பிகையிடம் வேண்டும் விதமாகவே முளைப்பாரித் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டிய ஒரு விஷயமாகவே, அம்பிகைக்கு உகந்த நவராத்திரியிலும் செழிப்பு மற்றும் சுபிட்சத்தை வேண்டி கொலுவின் ஓர் அங்கமாக முளைப்பாரி வைக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஹாளய அமாவாசை அன்று படி கட்டி, புதிய வஸ்திரம் விரித்து, கலசம் வைத்து, கொலுப் பொம்மைகள் அடுக்கிவைத்து, மறுநாள் பிரதமை தொடங்கி பூஜை, நைவேத்தியம், ஆரத்தி என்று நவராத்திரி அமர்க்களப்படும். முளைப்பாரிக்கான ஏற்பாடுகள் அதற்கு மூன்று நாள்கள் முன்பே தொடங்கி விடும்.

நவதானியங்கள் நவகிரகங்களுடன் தொடர்புடையவை. எனினும், நவராத்திரி முளைப்பாரியைப் பொறுத்தமட்டில், எளிதாக வளரக்கூடிய தானியங்களை விதைப்பது நல்லது. கோதுமை, நெல், கேழ்வரகு (ராகி), வெந்தயம், கொள்ளு... இவை அனைத்தையுமோ, ஏதேனும் இரண்டு அல்லது மூன்று வகையையோ எடுத்துக்கொள்ளலாம்.

கடுகு, எள் போன்றவை எளிதாக வளரும் என்றாலும், சுப காரியங்களில் இவற்றைத் தவிர்ப்பதே நலம்.

நவராத்திரி தொடங்க மூன்று நான்கு நாள்கள் முன்பு, இரவில் தானியத்தை நன்கு கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும்.மறுநாள் நீரை வடித்து தானியத்தை எடுத்துக்கொள்ளவும். (நீரில் மேலே மிதக்கும் தானியங்கள் முளை விடாது. வடிகட்டும்போது அவற்றை நீக்கி விடுங்கள்). அகலமான தட்டு அல்லது வாயகன்ற பெரிய கிண்ணம் ஏதேனும் எடுத்துக்கொள்ளவும் (இதற்கென தனியாக தட்டு இருந்தால் சிறப்பு). வழக்கமான சாப்பிடும் தட்டுகள் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அதில் மணலைப் பரப்பவும். சிவப்பு நிற மண், தானியம் முளைவிட ஏற்றது. அது கிடைத்தால் நல்லது. அதில் ஊறவைத்த தானியத்தை வட்டமாக ஓர் அடுக்கு தூவி, மண்ணால் மூடி, பின் அடுத்த அடுக்கில் தானியத்தை தூவி இப்படி நிரப்பவும்.

அவ்வப்போது (ஒரு நாளைக்கு இரண்டு முறை) தண்ணீரை பரவலாகக் கையால் தெளித்து விடவும். நேரடியாக வேகமாக நீரை ஊற்ற வேண்டாம். முளைக்கும் நிலையில் இருக்கும் பிஞ்சு விதைகள் தாங்காது.

வழிபாடு: நலம் தரும் நவராத்திரியில் முளைப்பாரித் திருவிழா!

அடுத்த மூன்று நாள்களும் அந்தத் தட்டை, சூரியஒளி படும் இடத்தில் அரை நாள் கணக்கில் வைத்திருந்து பின்பு நிழலில் மாற்றி விடவும்.

இப்போது பச்சைப்பசேலென்று முளைவிடத் தொடங்கியிருக்கும். இதை, நவராத்திரி தொடங்கிய உடன் கொலுப்படிக்கு அருகில் வைத்து விடலாம். ஒன்பது நாள்களும் சிறிது சிறிதாக வளர்ந்து, ஆச்சர்யப்படும் வகையில் பெரிதாகி அழகாக நிற்கும்.

தசமி பூஜை முடிந்தவுடன், மறுநாள் இந்த முளைப்பாரிகளை அக்கம்பக்கம் இருக்கும் நீர்நிலை அல்லது கிணறுகளில் கரைத்து விடலாம். எங்கே போவது நீர் நிலைக்கும் கிணறுக்கும் என்கிறீர்களா? கவலை வேண்டாம். வீட்டிலேயே ஒரு பக்கெட்டில் நீர் நிரப்பி அதில் கரைத்து விட்டு, செடிகளில் ஊற்றி விடலாம்.

முளைப்பாரி செழுமை, லக்ஷ்மிகரம் மற்றும் சுபிட்சத்தின் அடையாளம். அவள் வாசகியர் இல்லங்களில் நவராத்திரி விழா சிறப்புற நடைபெற்று அம்பிகையின் ஆசியும் சிறந்த கடாட்சமும் மேலோங்க வாழ்த்துகள்!

நவராத்திரி கொலு... சில குறிப்புகள்

 • கொலுப்படி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். 3, 5, 7, 9 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் கொலுப்படி அமைப்பது ஐதிகம்.

 • கொலுப்படிகளில் விரிப்பதற்கென, தூய்மையான பிரத்யேக வேஷ்டி அல்லது பட்டுப் புடவை வைத்துக்கொள்ளவும். பழைய மற்றும் கிழிசல் உள்ள புடவைகளைப் பட்டாக இருந்தாலும் தவிர்க்கவும்.

 • ஒருமுறை கலசத்தைவைத்து ஆவாஹனம் செய்து விட்டால், அதைத் தொடாமல் இருக்க வேண்டும். ஒன்பது நாள்கள் அதற்கு பூஜை மட்டுமே செய்யவும். மாவிலை உலர்ந்தால்கூட அதை மாற்ற வேண்டாம்.

வழிபாடு: நலம் தரும் நவராத்திரியில் முளைப்பாரித் திருவிழா!
 • கலசத்தின் பின்னே ஒரு சிறிய கண்ணாடி வைத்து, அதில் கலசம் தெரிவதுபோல வைக்க வேண்டும் என்பது ஐதிகம்.

 • நவராத்திரிப் பொழுதில் அம்பிகை ஊசிமுனையில் தவம் இருக்கிறார் என்பது நம்பிக்கை. எனவே, அந்த ஒன்பது நாள்களும் வீட்டில் ஊசிகொண்டு எதுவும் தைக்கக் கூடாது.

 • காலை மாலை இரு வேளைகளிலும் மிதமான ஊதுபத்தி, சாம்பிராணி போட்டு மணம் கமழ வைப்பது ஒரு தெய்விக மன நிலையையும் நல்ல அதிர்வுகளையும் உண்டாக்கும்.

 • தினமும் பூஜைக்குப் பின் எல்லா வேலைகளும் முடிந்த பின் கண்டிப்பாக ஆரத்தி காண்பித்துவிட்டு, பிறகே படுக்கச் செல்லவும்.

 • வீட்டில் அநாவசிய சண்டை, வாக்குவாதம், சுடுசொற்கள் ஆகியவை தவிர்க்கவும்.

 • ஒன்பது நாள்களும் முடி வெட்டுதல், வீட்டில் / பார்லரில் போய்கூட செய்யாமல் இருப்பது உத்தமம்.

 • தினமும் ஒருவருக்கேனும் தாம்பூலம் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம்.

 • எஞ்சிய பழைய பிளவுஸ் பிட் மற்றும் உபயோகம் அற்ற பொருள்களைத் தாம்பூலத்தில் கொடுப்பதைத் தவிர்க்கவும். வாய்ப்பிருந்தால் உபயோகமான எளிய பொருள்களைத் தரலாம். இல்லையெனில், வெற்றிலை-பாக்கு, மஞ்சள், குங்குமம் போன்ற அத்தியாவசிய மங்கலப் பொருள்கள் மட்டும் போதும்.

 • பிளாஸ்டிக் ஸ்பூன், பாலிதீன் கவர்களைத் தவிர்க்கவும். பாக்கு மட்டை, இலை, தொன்னை உபயோகப்படுத்தவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism