Published:Updated:

புத்தாண்டு தினத்தில் ஆலய வழிபாடு செய்யும் வழக்கம் எப்போது ஆரம்பம் ஆனது தெரியுமா? #Video

`திருத்தணி முருகன்
`திருத்தணி முருகன்

இந்த வழக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இருந்ததில்லை. இது தொடர்பாக சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று வள்ளிமலை சுவாமிகள் வாழ்விலே நடந்தது.

விசேஷ தினங்கள் என்றால் அந்த நாளில் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் வழக்கம் நம்மிடையே உள்ளது. குறிப்பாக ஆண்டின் முதல் நாளில் அவ்வாறு செய்வதன் மூலம் அந்த நாள் முழுவதும் இறையருள் நமக்குத்துணை நிற்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பிற விசேஷ தினங்களில் அந்த வழக்கம் நம்மிடையே இருந்துதான் வந்தது. ஆனால் அந்த வழக்கத்தின் நீட்சியாக ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்றும் நாம் ஆலயம் சென்று தொழுகிறோம்.

இந்த வழக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இருந்ததில்லை. 1917-ம் ஆண்டு முதலே ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் உண்டானது என்கிறார்கள் பெரியோர்கள். இது தொடர்பாக சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று வள்ளிமலை சுவாமிகள் வாழ்விலே நடந்தது.

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்

வள்ளிமலை என்பது முருகப்பெருமானின் இச்சா சக்தியான வள்ளி பீடம் அமைந்த மலை. வள்ளிமலையில் பர்வதராஜன் குன்றுக்கும் கன்னிக் குன்றுக்கும் இடையே தமது திருப்புகழ் ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்தார் சச்சிதானந்த சுவாமிகள். அங்கு வரும் அனைவருக்கும் திருப்புகழை ராக, தாளங்களுடன் பாட போதித்து வந்தார். அவரது புகழ் வேகமாக பரவியது. வள்ளிமலை சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்றெல்லாம் மக்கள் அவரை அன்போடும் பக்தியோடும் அழைக்கலாயினர்.

திருத்தணி முருகன் மீது தணியாத பக்தி கொண்டவராகிய சச்சிதானந்த சுவாமிகளே ஆங்கிலப்புத்தாண்டு அன்று வழிபாடுகள் நடைபெறக் காரணமானார். அந்த நிகழ்வையும் காரணத்தையும் பேச்சாளர் சுமதி ஶ்ரீ மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார். கீழே, சுவாரஸ்யமான அந்த வீடியோவைக் காணுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு