Published:Updated:

ஶ்ரீ சாயி சிறப்புக் கட்டுரைப் போட்டி

சாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
சாயிபாபா

சாயி அனுபவம்

ஶ்ரீ சாயி சிறப்புக் கட்டுரைப் போட்டி

சாயி அனுபவம்

Published:Updated:
சாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
சாயிபாபா

உயிரும் நம்பிக்கையும் சாயி தந்தது

நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துவந்தபோது எனக்கு திடீரென உடல் நிலை குன்றியது. பரிசோதனை செய்ததில் என் சிறுநீரகத்தில் பிரச்னை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.

என் தந்தை பழநி தேவஸ்தானத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றியவர். பெரிய வருமானம் இல்லை. பெரும் பொருளாதாரப் பிரச்னை. கடன் வாங்கி அப்பா சிகிச்சை செய்தார். ஆனால் பூரண குணம் ஏற்படவில்லை. மீண்டும் சிறுநீரகத்தில் கட்டி வளர்ந்தது. என்ன செய்வது என்று அறியாத நிலையில் என் தகப்பனார் கடன் சுமையால் என்னை வெறுக்கவே ஆரம்பித்துவிட்டார். இது என் மனதை பாதித்தது.

சாயிபாபா
சாயிபாபாஒருநாள் பழநி முருகன் கோயிலுக்குச் சென்று, "முருகா எனக்கு மரணத்தைத் தந்துவிடு" என்று கண்ணீரோடு வேண்டிக்கொண்டேன். அப்போது அங்கே என்னை ஒரு பெரியவர் சந்தித்தார். அவர் பெயர் நடராஜன் ஐயா. பழநியில் முதல் ஷீர்டி சாயிபாபா கோயிலைக் கட்டியவர். அவர் என்னைத் தேற்றி ஆறுதல் சொன்னதோடு சாயி படங்கள், டாலர் மற்றும் சத்சரிதம் ஆகியவற்றைத் தந்து அனுப்பினார். சத்சரிதம் வாசிக்க வாசிக்க எனக்குள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. நம்பிக்கை பிறந்தது. உடல் நலம் தேறினேன். அதன் பின் சாயியின் பக்தனாகிவிட்டேன். சாயியிடம் என் தந்தைக்குப் பணி நியமனம் வேண்டும் என்று வேண்டினேன். அப்படியே கிடைத்தது. அதன்பின் என் சகோதரியின் திருமணம், அவளுக்குக் குழந்தை வரம் என சகலமும் சாயியிடம் வேண்ட, இல்லை என்று சொல்லாமல் அருளினார் அந்த மகான். இன்று நான் உயிரோடும் நம்பிக்கையோடும் வாழ்கிறேன் என்றால் அது சாயி அருளிய அற்புதம் என்றால் மிகை அல்ல.

வி.சுப்புராஜ், பழநி

எப்போதும் சாயி

வணக்கம், என் இஷ்ட தெய்வம் வேங்கடவன். வீட்டில் ஏழுமலையான் படத்துக்குப் பக்கமாக சாயிபாபாவின் சிறிய பளிங்குச் சிலையை வைத்து வணங்கி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து எனக்கு ஷீர்டி சாயி மீது பக்தி உண்டு. தினமும் தவறாமல் நெற்றிக்கு இட்டுக்கொண்டு பல்லாண்டு பாடி அதன் பின் பாபாவின் நாமத்தை ஓதுவேன். என் வயது 100. இந்த வயதிலும் என்னைக் குறையின்றி பாபா காக்கிறார். கடவுளை நாம் காணமுடியாது. ஆனால் உணரமுடியும். குரு - மனித உருவில் தெய்வமாகி நம்மை ஆட்கொள்கிறார். அப்படி குருவாக தெய்வமாக என் வாழ்வில் வந்தவர் சாயிநாதர்.

என் வாழ்வில் பல பாபா கோயில்களுக்குச் சென்றிருந்தாலும் சமீபத்தில் மீசலூருக்குச் சென்ற அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மீசலூர் செல்ல வேண்டும் என்று கார் டிரைவரிடம் கூறினேன். அவர் எதற்கு என்று கேட்டார். நானோ எனக்கு அங்கே நண்பர்களோ உறவினர்களோ இல்லை ஆனால் சாயி கோயில் இருக்கிறது. அங்கே சென்று தரிசனம் செய்யவும் பாபாவுக்கு ஏதேனும் கைங்கர்யம் செய்யவும் செல்ல வேண்டும் என்றேன்.

உடனே என்னை அழைத்துச் செல்ல சம்மதித்தார். அங்கே சென்று பாபாவை தரிசனம் செய்தேன். பாபாவின் விக்கிரகத்துக்கு மாலை சாத்தி உதி பெற்று அவரைத் தொழுதுகொண்டேன். என் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது. அங்கேயே இருந்து காலை மாலை மதியம் என மூன்று வேளையும் அங்கே அன்னதானம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது. இந்த வயதிலும் உடல் நலக்குறைவில்லாமல் நல்ல நினைவோடு நான் இருப்பதற்கு பாபாவின் அருள் கடாட்சமே காரணம் என்றால் மிகையில்லை. என் வாழ்வில் சாயி எப்போதும் என் கூடவே இருக்கிறார்.

சாயிநாதனின் திருவடிகளே சரணம்

- வெ.ராமசாமி, சிவகாசி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism